தேசிய அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் ராஜாஜி, காமராஜர் ஆகியோரைச் சேர்ப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பெயரைச் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் கொண்டவர் காயிதே மில்லத். கண்ணியமானவர், எளிமையானவர், தேசபக்தி நிரம்பியவர், நேர்மையானவர் என்று பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் இந்தியாவின் அதிமுக்கிய அவைகள் அனைத்திலும் இடம்பெற்ற தமிழர் என்றால் அவர் காயிதே மில்லத் மட்டுமே. சென்னை மாகாண சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை, இந்திய அரசியல் நிர்ணய சபை ஆகிய நான்கிலும் இடம்பெற்றவர்.
TAMIL MUSLIM SONGS
Showing posts with label கண்ணியமிகு காயிதேமில்லத். Show all posts
Showing posts with label கண்ணியமிகு காயிதேமில்லத். Show all posts
Wednesday, August 2, 2017
Sunday, July 9, 2017
மகத்தான அரசியல் தலைவர் காயிதே மில்லத்
இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி இருக்க வேண்டும்? என்ற விவாதம் நடத்தப்பட்டபோது. இந்தியப் பாராளுமன்றத்திற்குள் தமிழே! ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்! என்று முதல் முதலில் முழங்கிய பெருந்தகை.
நீங்கள் இசுலாமியர் ஆயிற்றே! ஏன் தமிழை ஆட்சி மொழியாகக் கேட்கிறிர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு, நான் அல்லா! என்று அழைப்பதற்கு முன்பே, அம்மா! என்று அழைத்தவன்.
இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழே! எங்கள் மொழி! என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்.
இந்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய உண்மையும் நேர்மையும் தூய்மையும் எளிமையுமான மகத்தான அரசியல் தலைவர் நமது ஐயா காயிதே மில்லத்.
Monday, June 5, 2017
கண்ணியமிகு காயிதே மில்லத்
காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.
பெரியார் அப்படிச் சொல்லும் அளவுக்கு காயிதே மில்லத் அப்படி என்ன செய்தார்?
Subscribe to:
Posts (Atom)