Showing posts with label 3.துஆக்கள். Show all posts
Showing posts with label 3.துஆக்கள். Show all posts

Wednesday, December 4, 2019

துஆ ஒப்புக்கொள்ளப்படும் நேரங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
தகவல் ; துஆகளின் தொகுப்பு 
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Saturday, May 18, 2019

துஆ கேட்க்கும் போது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இறைவனிடம் நம் துஆ கேட்க்கும் போது நம்முடைய இரு கைகளையும் உயர்த்தி கேட்க வேண்டும் அதற்க்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.இந்த முறையில் துஆ அல்லாஹ்விடம் கேட்டால் இன்ஷா அல்லா அல்லாஹ் கஃபுல் செய்வானாக.
"யா ரஹிமு"
இதை தினமும் 500 தடவை ஓதி வந்தால் அல்லாஹ் செல்வத்தை தருவானாக.

Thursday, February 7, 2019

பர்ளான தொழுகைக்கு பின் அவசியம் ஓத வேண்டிய துஆ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
பர்ளான தொழுகைக்கு பின் அவசியம் ஓத வேண்டிய துஆ, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஓதிய துஆ

Sunday, July 29, 2018

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!


"அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ[B]வு ல(க்)க பி[B]தன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த". ஆதாரம்: புகாரி 6309.
பொருள் : இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.

Friday, July 27, 2018

சிரமமான நேரங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதி வந்த துஆக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
*********
لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ 

லாயிலாஹா இல்லல்லாஹூல் அழீமுல் ஹலீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் 


அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.   ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

Saturday, March 24, 2018

அருமையான துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே!!!
ஒருமுறை முழுவதும் படித்துவிட்டு ஆமீன் சொல்லங்கள்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
சுப்ஹனால்லாஹ்...  சுப்ஹனால்லாஹ்...  சுப்ஹனால்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்...  அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் அக்பர்...  அல்லாஹ் அக்பர்...  அல்லாஹ் அக்பர்...

Saturday, March 10, 2018

ஹதீஸ்கள் - திடீர் சோதனைகள் அணுகாது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். யாரேனும் ஒருவர்
بِسْـمِ اللهِ الَّذِيْ لاَ يَضُـرُّ مَعَ اسْمِـهِ شَيْءٌ فِي الْأًرْضِ وَلاَ فِي السَّمـَاءِ وَهُـوَ السَّمِـيْعُ الْعَلِـيْمُ
பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்.
பொருள் : “யாருடைய பெயர் (கூறுவதால்) வானம், பூமியிலுள்ளவை எந்தப் பொருளும் இடையூறு இழைக்க முடியாதோ அந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன். அவன் யாவற்றையும் கேட்பவன், அறிபவன்.”

.துஆக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுகே 
 நபி ﷺ அவர்கள் கீழ்கண்டவாறு துஆ செய்துள்ளார்கள்:
اللهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وقَهْرِ الرجال
நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி வல்ஹஸனி வல் அஜ்ஸி வல்கஸலி வல்புக்லி வல்ஜுப்னி வ ளலஇத் தைனி வ ஃகலபத்திர் ரிஜால்“ 
பொருள்: "இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் ,நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்." என்று பிரார்த்தித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 80.

எளிய துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!

“இறைத்தூதர் அவர்களே, நீங்கள் இறைவனிடம் நிறைய துஆகள் செய்கிறீர்கள்...
அந்த துஆ வாசகங்களை எங்களால் எழுதி வைத்துக்கொள்ள முடியவில்லை...
நினைவில் இருத்திக் கொள்வதும் சிரமம்

Thursday, March 8, 2018

யா அல்லாஹ்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே  
#யா_அல்லாஹ்!
நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே!
தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே!
மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே!
கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே!

Saturday, January 27, 2018

ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்த 5 ரகசிய வார்த்தைகள் (தஸ்பீஹ்)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... 
ஒரு நாள் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள்...
அருமை மனைவியே ஹூனைன் போரில் நிறைய கனீமத் பொருள் வந்து இருக்கிறது.

Monday, December 11, 2017

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

01. துஆக்கள் ஏற்கப்பட
======================
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127-128)

Thursday, November 23, 2017

ஜம்ஜம் தண்ணீர்

யாஅல்லாஹ்
ஜம்ஜம் தண்ணீரை உன்னுடைய இல்லமான #காஃபாவில் அருந்தும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தருவாயாக.........!!!
#ஆமீன்_ஆமீன்_யாரப்பல்_ஆலமீன்...  

Monday, September 11, 2017

துன்பத்தின்போது ஓதும் துஆ

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
                  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
கண்மணி நபி நாயகம் (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது, பின்வருமாறு கூறுவார்கள்:
5276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
லாயிலாஹ இல்லல்லாஹு அழீமுல் ஹலீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம்.
(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.)

Sunday, September 10, 2017

உடல் வலி ஏற்படும் போது ஓதும் துஆ

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
"பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு" என்று சொல்வீராக" என்றார்கள்.
4430. நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து, "பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு" என்று சொல்வீராக" என்றார்கள்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)
மூலம் : அப்துல் ஜஹாங்கீர் - துஆக்களின் தொகுப்பு

Monday, September 4, 2017

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபாராகாத்துஹூ....
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது:
اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ஃபனீ இதா கான(த்)தில் வஃபா(த்)து கைரன் லீ..

பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!    ஆதாரம்: புகாரி.
நன்றி : உமர் முக்தர் - துஆக்களின் தொகுப்பு 

Thursday, August 24, 2017

மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
ஒரு தடவை அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தமக்காகத் துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டார்களாம். நபியவர்களும் இவ்வாறு துஆ கேட்டார்களாம்:
“யா அல்லாஹ்! ஆயிஷாவின் கடந்த காலப் பாவங்களையும், அவருடைய எதிர்காலப் பாவங்களையும் நீ மன்னிப்பாயாக!”
ஆயிஷா அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை! முகம் மலரச் சிரித்து விட்டார்கள்!
“எனது இந்த துஆ உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?” என்றார்கள் அண்ணலார் அவர்கள். “நான் மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?” என்று பதில் அளித்தார்கள் ஆயிஷா அவர்கள்
“அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதே துஆவைத்தான் எனது (உம்மத்) சமூகத்துக்காக நான் ஒவ்வொரு தொழுகையிலும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார்களாம் அண்ணலார் அவர்கள்! (நூல்: இப்னு ஹிப்பான்)
மனைவி, கணவனிடம் துஆ செய்யச் சொல்லிக் கேட்பதுவும், மனைவிக்காக கணவன் துஆ செய்வதும் சுன்னத் தான் என்பதை நினைவில் கொள்வோம்!

Tuesday, August 22, 2017

ஸஜ்தாவின் போது ஓத வேண்டிய துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
குர்ஆனில் ஸஜ்தா வசனத்தை ஓதும்போது செய்யும் ஸஜ்தாவின் போது ஓத வேண்டிய துஆ
سَجَدَ وَجْهِى لِلَّذِى خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு, வஷக்க ஸம்அஹு, வபசரஹு பிஹவ்லிஹி வகுவ்வதிஹி ஃப தபாரகல்லாஹு அஹ்ஸனுல் காலிகீன்.
பொருள் : எனது முகம், அதனை படைத்து, தனது ஆற்றலாலும் சக்தியாலும் அதன் காது-கண் புலன்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து இறைவனுக்கு ஸஜ்தா செய்துவிட்டது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய அல்லாஹ் பாக்கியம் உடையவன்.
ஆதாரம் : திர்மிதி, அஹ்மத்

Sunday, August 20, 2017

துஆ - குழந்தை பேறு வேண்டிஓதும் துஆ...

அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்) 
رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
ரப்பி லா ததர்னீ ஃபர்தன் வ அன்த்த ஃஹைருல் வாரிஸீன்
பொருள் : என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன் - அல் குர்ஆன் (21:89)
இந்த ஆயத்தை ஒவ்வொரு தொழுகையிலும் அதிக அதிகமாக ஓதுங்கள் அல்லாஹ் பரகத் செய்வானாக ... 


Friday, August 18, 2017

துஆ

அல்ஹம்துலில்லாஹ்! புகழனைத்தும் ஏக இறைவனுக்கே!
ஸலாத்தும்,ஸலாமும் அண்ணல்நபி ﷺ அவர்களின் மீது பொழியட்டுமாக!
யா அல்லாஹ் ! பரக்கத்தான இன்றைய ஜும்மா நாளில் உன்னுடைய மஃபிரத்தையும்,ஆபியத்தையும், ரஹ்மத்தையும் எங்களின் மீது இரக்குவாயாக!
யா அல்லாஹ்! எங்களின் துஆக்களை ஏற்றுக்கொண்டு உன்னுடைய அற்புதத்தை நிகழ்த்திக்காட்டுவாயாக!
யா அல்லாஹ்! அடியார்களின் மீது நீ வைத்துள்ள உள்ளன்பை எங்களின் மீது
வெளிப்படுத்துவாயாக!
எங்களின் காரியங்களை இலேசாக ஆக்குவாயாக!
பெற்றோர்களான நாங்கள் செய்த பாவங்களின் காரணமாக எங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையில் சிரமத்தை ஏற்படுத்திவிடாதே!
எங்களை மன்னித்து எங்களின் மீது கருணை காட்டுவாயாக!
எங்களின் பிள்ளைகளின் இம்மை,மறுமை வாழ்க்கையை நீ திருப்தியுறும் வகையில் அமைத்துத் தருவாயாக!
ஆமீன்.