Showing posts with label 5.சுன்னத்தான வழிமுறைகள். Show all posts
Showing posts with label 5.சுன்னத்தான வழிமுறைகள். Show all posts

Thursday, April 9, 2020

பராஅத் இரவின் சிறப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இஸ்லாத்தின் பார்வையில் ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பதன்

சிறப்பும், அவ்விரவில் மஃரிப் பின் சூரா யாஸீன் ஓதுவதன் அவசியமும்.​

Monday, January 20, 2020

மனந்திறந்து விருந்தினர்களை ஆதரித்துக் களைத்து போவதால் நமக்குக் கிடைக்கும் பலன் இது தான்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் கணவர் ஏராளமான விருந்தினர்களை அழைத்து வருகிறார்.
நான் அவர்களுக்கு உணவு தயாரித்து தயாரித்து மாய்ந்து போய்விட்டேன்.”
நபி (ஸல்) அவர்கள் எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருந்தார்கள். அவள் போய்விட்டாள்.
சில நாட்களுக்குப் பிறகு நபி ஸல் அவர்கள் அந்தப் பெண்ணின் கணவரை அழைத்துக் கூறினார்கள்:

கணவனின் பொருத்தத்தை இழந்துவிட்ட ஒரு பெண்ணின் நிலை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவீயில் ஒரு பெண்ணின் ஜனாஸா வந்து விட்டது.
நபி ஸல் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.
அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நேரில் வந்து,

Thursday, December 12, 2019

ஸலவாத்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~    ஸலவாத் ஓதுவோம் வாருங்கள்......
(ஸலவாத்),தைக் கொண்டுதான்......
மனிதர்களின்...... தரஜாக்கள் உயர்த்தப் படுகின்றது......
ஸலவாத்தின் மகிமையால்...... உலகமும் மற்ற அனைத்தும்..... உயிரோட்டம் பெறுகின்றது.......

Friday, June 8, 2018

பெண்கள் தொழுகை முறையும், தொழுகை சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தொழுகை ஒரு பெண்ணுக்கு எப்போது கடமையாகும்?
குழந்தைகள் ஏழு வயதானவுடன் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தொழும் படி ஏவுவதும் அதன் ஷர்த்துகளை செய்யும்படி ஏவுவதும் பிறகு பத்து வயதானவுடன் தொழா விட்டால் காயப்படாமல் அடிப்பதும் கடமையாகும். பருவமடைந்ததில் இருந்து ஒரு பெண்ணுக்கு தொழுகை கடமையாகும்.
தொழுகை யாருக்கு கடமை இல்லை?
புத்தி சுவாதீனமற்ற பெண்களுக்கும், பருவமடையாத பெண்களுக்கும் தொழுகை கடமை இல்லை. அதேபோல், மாதத் தீட்டு, பிரசவ தீட்டுள்ள பெண்களுக்கும் அவர்கள் சுத்தமாகும் வரை தொழுகை கடமை இல்லை. அதாவது, விடுப்பட்ட தொழுகைகளை பின்னர் தொழ வேண்டியதில்லை.

Wednesday, March 8, 2017

உம்ரா செய்யும்போது ஓதப்பட வேண்டியவைகள்



நான் அல்லாஹ்விற்காக இந்த உம்ராவை நிறைவேற்றுகின்றேன் என மனதில் நிய்யத் வைத்தவராக
لَبَّيْكَ عُمْرَةً 
லெப்பைக உம்ரதன் எனக் கூறுவது.
நிய்யத் வைத்ததன்பின் தவாபை ஆரம்பிக்கும் வரை தல்பியா கூறவேண்டும்.

Sunday, February 26, 2017

கலிமா தய்யிபா - ஈமான்

٥- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : مَاقَالَ عَبْدٌ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ قَطُّ مُخْلِصاً إِلاَّ فُتِحتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّي تُفْضِيَ إِلَي الْعَرْشِ مَا اجْتَنَبَ الْكَبَائِ
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب دعاء أم سلمة ٢، رقم:٣٥٩ ٠.

Saturday, September 26, 2015

அறிவை அல்லாஹ்வுக்காக

அறிவை அல்லாஹ்வுக்காக கற்பது -இறையச்சம்; அறிவை அல்லாஹ்வுக்காக தேடுவது -இபாதத்;
அறிவை அல்லாஹ்வுக்காக மீட்டுவது -தஸ்பீஹ்;  அறிவை அல்லாஹ்வுக்காக ஆராய்வது -ஜிஹாத்;
அறிவை அல்லாஹ்வுக்காக கற்பிப்பது -ஸதகா;   அறிவிப்பவர் : -முஆத் இப்னு ஜபல் (ரழி)

Tuesday, January 6, 2015

சுன்னத்தான நோன்புகள்

சுன்னத்தான நோன்புகள்-ஆஷூரா நோன்பு, ஆறு நோன்புகள், அரஃபா நாள் நோன்பு, வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது, மாதம் மூன்று நோன்புகள்

Saturday, November 15, 2014

குளிப்பு எப்போது கடமையாகும்?

இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது மனிதனுடைய வாழ்க்கையுடன் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் வழி காட்டுகிறது. அந்த அடிப்படையில் குளிப்பது பற்றிய பூரண விளக்கத்தையும் இஸ்லாம் தந்துள்ளது. எனவே இத்தொடரில் குளிப்பின் சட்டங்கள் பற்றி விரிவாக நோக்கலாம்.

Thursday, October 30, 2014

ஒரு முஸ்லிம் மேல் உள்ள ஐந்து உரிமைகள்

முஸ்லிம்களாகிய நமக்கு மற்றவர்கள் மீது குறிப்பிட்ட உரிமைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?  உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவற்றை உங்கள் தினசரி வாழ்வில் உங்களால் இயன்ற அளவு சிறப்பாக நிறைவேற்றுகிறீர்களா?

Saturday, October 25, 2014

மகத்தான நற்பாக்கியங்கள் !!!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

மகத்தான நற்பாக்கியங்கள் !!!!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.) எவர் அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையை பெனுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்…

9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.

13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.

14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.

18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.

21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.

23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.

24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.

25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.

26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.

27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.

28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.

Friday, October 3, 2014

நகம் வெட்டும் முறை

நகம் வெட்டும் போது முதலில் வலது கை ஆள் காட்டி விரலிலிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.

பின் நடு விரல் மோதிர விரல் சுண்டு விரல் என தொடர்ந்து இடது கை சுண்டு விரல்,  மோதிர விரல் நடு விரல் ஆள் காட்டி விரல் கட்டை விரல் என முடித்து மீண்டும் வலது கை கட்டை விரல் நகத்தை இறுதியாக வெட்ட வேண்டும்.