அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
🕋கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா
⁉
💢
🐄குர்பானிப் பிராணியை *கிப்லாவை முன்னோக்கித்தான்* அறுக்க வேண்டும் என்று *கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்* எதுவும் இல்லை. இது தொடர்பாக பைஹகியில் இடம் *பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது* என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே *எந்தத் திசை* அறுப்பவருக்கு *தோதுவாக* உள்ளதோ அந்தத் திசையில் அறுக்கலாம்.
💢
🐫சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் *குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது* போன்ற செயல்களைச் செய்கின்ற னர். *இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும்* . மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத *மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத்'தான* நடைமுறைகளாகும். இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.