Showing posts with label ஸஹாபாக்கள் வரலாறு. Show all posts
Showing posts with label ஸஹாபாக்கள் வரலாறு. Show all posts

Tuesday, February 18, 2020

செய்யதினா அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வாழ்வில் நடைபெற்ற ஓர் நிகழ்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                                               பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

#ஒரு_தடவை செய்யதினா அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தனது அருமை மனைவி ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம் வந்தார்கள்,
அப்பொழுது ஹஸன் ரலியல்லாஹூ அன்ஹூ ஹூஸைன்‌ ரலியல்லாஹூ அன்ஹூ இருவரும்
அழுது கொண்டிருந்தனர்,
#அவர்கள் இருவரையும் நோக்கி,நீங்கள் இருவரும் ஏன் அழுகின்றீர்கள்? என்று வினவினர்,
அதற்கு அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் பசியின் காரணமாக அழுகின்றார்கள் என்றனர்...!!!
அது கேட்ட,,, அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் உணவு வாங்கி வர வெளியில் புறப்பட்டனர்...,,

Wednesday, July 17, 2019

பொறுமையின் சிகரம் ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியாரின் உண்மையான யர் #ஸைய்யிதா_ஜைனப்என்பதாகும். #சையத்_அலி_ஃபாத்திமா என்பது தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள அவர்களின் அடையாளப் பெயர் ஆகும். மதீன மாநகரில் பெண்கள் பேன வேண்டிய மார்க்க ஒழுக்கங்களில் ஈடு இணையற்று சிறந்து விளங்கிய அவர்களை, ஷஹீது நாயகம் அவர்கள் தங்களுடைய 25ஆவது வயதில் மணமுடித்தார்கள்.#சையத்_அபூதாஹிர், #சையத்_ஜைனுல்_ஆபிதீன் ஆகிய இரு புதல்வர்களை அல்லாஹ் அவர்களுக்கு அருளினான். இளைய மகனார் ஜைனுல் ஆபிதீன் நாயகம் அவர்கள் இளம்வயதில் வஃபாத்தாகி விட்டார்கள்.

Saturday, May 19, 2018

அரசியல் என்பது சாக்கடையா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே 
கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?
பதில்: சவூதி அரேபியா என்ற இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.

Thursday, March 22, 2018

இறையச்சம் நிறைந்த வீரப்பெண்மணி உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா...!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
                                                                எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் புரிந்து ஷஹீத் எனும் நற்பேற்றை அடைபவர்களுக்கான அளப்பெரும் பேறுகளைக் குறித்து, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அதிகமதிகம் ஆர்வமூட்டிக் கூறியிருக்கின்றார்கள்...!!
ஆதலால், நபித்தோழர்கள் அநேகம் பேர் அன்றாடத் தொழுகையின் பின்னர் பிரார்த்தனையாக கேட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்....!!
இன்னும் சிலரோ தாம் ஷஹீதாக மரணிக்க துஆ செய்யுமாறு அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டுப் பெற்றிருக்கின்றார்கள்....!!

Sunday, March 11, 2018

சைஃபுல்லாஹ்_காலித்_பின்_வலீத்_ரழியல்லாஹூ_அன்ஹூ,

கலீஃபா உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஆட்சியின் போது.!!
#சைஃபுல்லாஹ்_காலித்_பின்_வலீத்_ரழியல்லாஹூ_அன்ஹூ,
இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது.,,,
உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களின் பெயர்களில் இதுவும் ஒன்று....!!
இறைவனின் வாள் (சைபுல்லாஹ்) என்ற பெயர் பெற்ற காலித் பின் வலீத் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் வீர வாளையும், சாகசங்களையும் எதிர்க்க முடியாமல் சக்திமிக்க ரோம சாம்ராஜ்ஜியமும், பாரசிக ஏகாதிபத்தியமும் தலைகுப்புற கவிழ்ந்தது....!!

Saturday, March 10, 2018

வரலாற்றில் ஒரு நாள்....!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலியல்லாஹூ அன்ஹூயிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது....!
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.....!!
குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது.!
அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...