Showing posts with label பழந்தமிழ் & பழந்தமிழன். Show all posts
Showing posts with label பழந்தமிழ் & பழந்தமிழன். Show all posts

Tuesday, July 21, 2015

"ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட ஆதித் தமிழர்கள் "

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது.

Thursday, August 14, 2014

பலாவின் சுளையறிய

தமிழனாய் பிறக்க, என்ன தவம்
செய்தோமோ!
சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற
நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும்
சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும்
வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."
- கணக்கதிகாரம்
விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள
சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால்
வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின்
எண்ணிக்கையை அறியலாம் !
இதையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்களேன்!!!
தமிழர்களின் அருமை அப்போது தெரியும்!!!

Wednesday, August 13, 2014

சித்தர்கள்

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை





காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது

Saturday, August 9, 2014

தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம் !!!

நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் இப்படி சொன்னவர் யார் தெரியுமா ? நம் தேச தந்தை காந்தியடிகள் !
மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள்
கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும்
எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.
இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே...
இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும்.
அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்..
தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம் !!!

Thursday, July 31, 2014

உலகின் முதல் கப்பல்



உலகின் முதல் கப்பலையும் மிகப் பெரிய கப்பல்படையும் வைத்திருந்தவன் தமிழன்.ஆண்ட தமிழினம் அடங்கி மடிவதா ?
தென் பசிபிக் மாகடலில், ஆஸ்திரேலியா கடல் பகுதியில் ஆழக்கடல்அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குகப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் அக்கப்பல் தமிழர்களுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. உலகில் உள்ள கப்பல் மற்றும் கப்பல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவிய பெயர்களை காண முடிகிறது. நாவாய் மருவி நேவி (Navy) என்று ஆங்கிலத்தில் அழைக்கபெறுகிறது.
தமிழில் கடலுக்கு மட்டுமே 200க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாக கூறப்படுகிறது. (எ-கா) அரலை, அரி, அண்மைக்கடல், அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழக்கடல், ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கரைக்கடல், காயம், கலி, கார்கொள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நித்தம், நீந்து, நீரகம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என கடல் என்ற சொல்லுக்கு இது போன்ற பல சொற்களை கடல் பழங்குடிகளான நம் மீனவ மக்களிடமும் நம் இலக்கியங்களிலும் அறியலாம்.
உலக கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கிரகாம் ஹான்காக் பூம்புகார் கடலில் ஆரய்ச்சி செய்து பூம்புகார் என்ற நகரம் கடலில் மூழ்கியுள்ளதையும், இவை 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறியுள்ளார். இவர் கடலில் புதையுண்ட பூம்புகாரின் அறிய ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளார். மற்றொரு இங்கிலாந்து அறிஞர் கிளன் மில்னே இதையே கூறுகிறார். இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைகழகம் உறுதி செய்துள்ளது.
தமிழன் உலகெங்கும் பரவி இருந்தான் என்பதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகளை காண முடியும். “கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலையும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன” என்கிறார் கடல்சார் தமிழியல் ஆய்வாளர் திரு. ஒடிசா பாலு அவர்கள். (எ-கா) தமிழா-மியான்மர், சபா சந்தகன் – மலேசியா, கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா, கடாலன் – ஸ்பெயின், நான்மாடல், குமரி,- பசிபிக் கடல், சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ, திங் வெளிர்- ஐஸ்லாந்து, கோமுட்டி-ஆப்ரிக்கா என்பவை சில உதாரணங்கள்.நண்பர்களே! நம்ம வரலாறு எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள்.