TAMIL MUSLIM SONGS
Tuesday, July 15, 2014
சப்போட்டா பழம்
சப்போட்டா பழம்:-
வெப்பமண்டல கனிகளில் பரவலாக சாப்பிடப்படும் பழவகை சப்போட்டா. தித்திப்பான சுவை கொண்ட இது அதிக ஆற்றல் தரக்கூடியது. பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை அடக்கியது. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது சப்போட்டா.
மெக்சிகோ, பெலிசி போன்ற பகுதி மழைக்காடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. சப்போட்டா அதிக ஆற்றல் தரக்கூடியது.
100 கிராம் பழத்தில் 83 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. நிறைந்த நார்ச்சத்து கொண்டது சப்போட்டா. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.
மேலும் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை குணமாக்கும் என்பது நல்ல செய்தி. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை உருவாக்கும் விஷப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.
டேனின் எனப்படும் சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் சப்போட்டாவில் உள்ளது. (காயாக இருக்கும்போது வெளிப்படும் கசப்புத்தன்மை கொண்ட பால்போன்ற வேதிப்பொருள் தான் டேனின் ஆகும்) இது வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து உடலுக்கு எதிர்ப்பாற்றல் வழங்கக் கூடியது.
உடல் எரிச்சலில் இருந்து விடுவிக்கும் திறன் கொண்டது. வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு போன்றவை வராமல் காக்கும். மூல வியாதிக்கும் எதிர்ப்பாற்றல் கொண்டது. குடல், இரைப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து காக்கும் திறன் கொண்டது டேனின்.
சிறந்த அளவில் வைட்டமின்-சி சப்போட்டா பழத்தில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவு 'வைட்டமின்-சி' கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் 'வைட்டமின்-சி'யின் பங்கு மகத்தானது.
அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இது சருமம் மற்றும் செல் சவ்வுகள் சிறப்பான வளர்ச்சி பெற உதவும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் வழங்கும்.
புத்துணர்ச்சி மிக்க சப்போட்டாப் பழத்தில் பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும்,போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றச் செயல்களிலும், நொதிகளின் செயல்பாட்டிற்கு துணை புரிவதிலும் பங்கெடுக்கின்றன
மஞ்சள்...
மஞ்சள்...
நமது கலாசாரத்திலும், உணவிலும் முக்கிய இடம் பிடிப்பது, மஞ்சள். இதற்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது விசேஷம். அவை பற்றி...
* மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. கெடுதல் செய்யும் கிருமிகளையும் அழிக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
* பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.
* விரலி மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
* மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு தேய்த்து விடுவதன் மூலம் உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
* குடல் நோய் எதுவாக இருந்தாலும், மஞ்சள் சூரணம் உட்கொண்டால், விரைவாகவும், நிரந்தரமாகவும் நோய் தீரும்.
* மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், தோல் தொடர்பான நோய்கள், துர்நாற்றத்தைப் போக்கிவிடும். மேலும், வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
* மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர்களை வெளியேற்றிவிடும். மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி துர்நாற் றத்தை நீக்கும்.
* மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்தால் அனைத்து வகையான வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும். மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுப்பதால், தொற்றுக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
* மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற் றாழை நாற்றம் நீங்கும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் படைகள், விஷக்கடிகள் நீங்கும்.
* தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப் புண், வலி நீங்கும். மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
* மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். அதை மூக்கு வழியாக இழுத்தால், தலைவலி நீங்கும்.
* மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, ரணங்களுக்கும் புண்களுக்கும் போட்டால், சீக்கிரத்தில் ஆறாத ரணங்கள் ஆறும்.
* மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணையில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும். மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் போட, சீக்கிரம் புண்கள் ஆறிவிடும்.
* மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும். அடிபட்ட வீக்கம், ரத்தக்கட்டுக்கு மஞ்சளைப் பற்றுப் போடுவதால், ரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வலி குறையும்.
* மஞ்சளின் மருத்துவ குணத்தை உணர்ந்து, எளிய முறையில் பணச் செலவில்லாமல், வீட்டில் வைத்துக்கொண்டு உபயோகிப்பதால், அநேக நன்மைகளை அடையலாம்
Sunday, July 13, 2014
உடல் எடையைக் குறைக்க எளிய வழிகள்
உடல் எடையைக் குறைக்க எளிய வழிகள்
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சில விஷயங்களை தினம்தோறும் செய்து வர வேண்டும். காலையில் எழுந்ததும் மலம், சிறுநீர் கழித்த பிறகு பல் தேய்த்து வெறும் வயிறாக இருக்கும்போதே 2 ஸ்பூன் (10 மி.லி.) நெல்லிக்காய் சாறில், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து 1/4 ஸ்பூன் (2.5 மி.லி.) தேனுடன் சாப்பிட்டுவிட்டு 1/2 -3/4 மணி நேரம் சுறுசுறுப்பாக நடக்கவும்.
காலை உணவாகக் கோதுமைக் கஞ்சி சாப்பிடவும். மதியம் புழுங்கலரிசி சாதத்தை சிறிய அளவில் சாம்பார், ரசம், மோர் என்று பிரித்துச் சாப்பிட்ட பிறகு, 1/2 கிளாஸ் (150 மி.லி.) சூடு ஆறிய தண்ணீரில், 1 ஸ்பூன் (5 மி.லி.) தேன் கலந்து பருகவும்.
மாலையில் 1 கிளாஸ் (300 மி.லி.) மோர் பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்பட்ட ரொட்டியைச் சாப்பிடவும். பச்சைப் பயறு, பூண்டு வேக வைத்த கூட்டை ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தவும். அதன் பிறகு, மதியம் சாப்பிட்ட தேன் கலந்த தண்ணீர் போல அதே அளவில் மறுபடியும் சாப்பிடவும். புலால் உணவையும், எண்ணெய்ப் பொருட்களையும், பகல் தூக்கத்தையும் அறவே தவிர்க்கவும்.
இரத்த அழுத்தம் - போக்க உதவும் மூன்று வழிகள்
இரத்த அழுத்தம் - போக்க உதவும் மூன்று வழிகள்
ரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைத்துக்கொள்ளுதல், உடலில் உள்ள பாகங்களில் பரவி நிற்கும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது உயர் இரத்த அழுத்தம் உருவாகிறது.
இதயத்துக்கான ரத்தத்தை அனுப்பும் ரத்தக்குழாய்களில் அடைப்பு வரும் போது அது மாரடைப்பாகிறது.
மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு வந்தால் அது ஸ்டிரோக். ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்ந்து கொள்வது உயர் ரத்த அழுத்தத்திற்கும், இதய நோய்க்கும் மற்றும் ஸ்டிரோக்கினால் வரக்கூடிய கை, கால் செயல் இழப்பிற்கும் காரணமாக அமைகிறது.
இன்டர்நெட் ஸ்பீட் அதிகரிக்க சாப்ட்வேர்
உங்கள் Internet speed குறைவாக உள்ளதா? ஏதாவது இணையதளத்தில் தரவிறக்கம் செய்யும்போது மிக குறைந்த வேகத்தில் இணையம் செயல்படுகிறதா?
ஒரு மென்பொருளையோ, அல்லது நீங்கள் விரும்பும் விடியோ, படங்கள் தரவிறக்கம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா? அப்படியெனில் இந்த மென்பொருள் உங்களுக்குப் பயன்படும்.
speed up your internet speed -free software (FDM)
FDM எனும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய கோப்புகள் எதுவாயினும் இணையத்தில் விரைவாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தரவிறங்கும் வேகம் அதிகரிக்கும்.
FDM என்பதன் விரிவாக்கம் Free Download Manager என்பதாகும்.
Free Download Manager Software-ன் பயன்கள்:
இந்த மென்பொருள் மூலம் ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்யும்போது கிடைக்கும் வேகம் எவ்வளவு தெரியுமா? 600% சதவிகிதம் தரவிறங்கும் வேகம் அதிகரிக்கிறது.
ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போது, பாதியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மீண்டும் அம்மென்பொருளை புதியதாக தரவிறக்கம் செய்ய தேவையில்லை. எதுவரைக்கும் தரவிறங்கியிருக்கிறதோ, அதிலிருந்து தொடர்ந்து தரவிறங்குகிறது. இதனால் உங்கள் நேரமும், இணைய நேரமும் மிச்சமாகிறது.
YouTube, Flash Video க்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி..!
Http, FTB, Bit Torrent ஆகியவற்றிலிருந்து எளிதாக, விரைவில் தரவிறக்கும் வசதி..
இந்த FDM மென்பொருளை download செய்ய :
http://www.freedownloadmanager.org/download.htm
Thursday, July 10, 2014
திருக்குர்ஆனை mp3 வடிவில் கேட்க (தமிழ் விளக்கத்துடன்)
| 1 | அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) | 7 | |
| 2 | ஸூரத்துல் பகரா (பசு மாடு) | 286 | |
| 3 | ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) | 200 | |
| 4 | ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) | 176 | |
| 5 | ஸூரத்துல் மாயிதா (ஆகாரம்) (உணவு மரவை) | 120 | |
| 6 | ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்) | 165 | |
| 7 | ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) | 206 | |
| 8 | ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்) | 75 | |
| 9 | ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) | 129 | |
| 10 | ஸூரத்து யூனுஸ் (நபி) | 109 | |
| 11 | ஸூரத்து ஹூது | 123 | |
| 12 | ஸூரத்து யூஸுஃப் | 111 | |
| 13 | ஸூரத்துர் ரஃது (இடி) | 43 | |
| 14 | ஸூரத்து இப்ராஹீம் | 52 | |
| 15 | ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை) | 99 | |
| 16 | ஸூரத்துந் நஹ்ல் (தேனி) | 128 | |
| 17 | பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) | 111 | |
| 18 | ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) | 110 | |
| 19 | ஸூரத்து மர்யம் | 98 | |
| 20 | ஸூரத்து தாஹா | 135 | |
| 21 | ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்) | 112 | |
| 22 | ஸூரத்துல் ஹஜ் | 78 | |
| 23 | ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்) | 118 | |
| 24 | ஸூரத்துந் நூர் (பேரொளி) | 64 | |
| 25 | ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்) | 77 | |
| 26 | ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) | 227 | |
| 27 | ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) | 93 | |
| 28 | ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்) | 88 | |
| 29 | ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி) | 69 | |
| 30 | ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு) | 60 | |
| 31 | ஸூரத்து லுக்மான் | 34 | |
| 32 | ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்) | 30 | |
| 33 | ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்) | 73 | |
| 34 | ஸூரத்துஸ் ஸபா | 54 | |
| 35 | ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்) | 45 | |
| 36 | ஸூரத்து யாஸீன் | 83 | |
| 37 | ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்) | 182 | |
| 38 | ஸூரத்து ஸாத் | 88 | |
| 39 | ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்) | 75 | |
| 40 | ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்) | 85 | |
| 41 | ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா | 54 | |
| 42 | ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்) | 53 | |
| 43 | ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்) | 89 | |
| 44 | ஸூரத்துத் துகான் (புகை) | 59 | |
| 45 | ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்) | 37 | |
| 46 | ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்) | 35 | |
| 47 | ஸூரத்து முஹம்மது(ஸல்) | 38 | |
| 48 | ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி) | 29 | |
| 49 | ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) | 18 | |
| 50 | ஸூரத்து ஃகாஃப் | 45 | |
| 51 | ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்) | 60 | |
| 52 | ஸூரத்துத் தூர் (மலை) | 49 | |
| 53 | ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்) | 62 | |
| 54 | ஸூரத்துல் கமர் (சந்திரன்) | 55 | |
| 55 | ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) | 78 | |
| 56 | ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி) | 96 | |
| 57 | ஸூரத்துல் ஹதீத் (இரும்பு) | 29 | |
| 58 | ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்) | 22 | |
| 59 | ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்) | 24 | |
| 60 | ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்) | 13 | |
| 61 | ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு) | 14 | |
| 62 | ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை) | 11 | |
| 63 | ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்) | 11 | |
| 64 | ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்) | 18 | |
| 65 | ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து) | 12 | |
| 66 | ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்) | 12 | |
| 67 | ஸூரத்துல் முல்க் (ஆட்சி) | 30 | |
| 68 | ஸூரத்துல் கலம் (எழுதுகோல்) | 52 | |
| 69 | ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது) | 52 | |
| 70 | ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்) | 44 | |
| 71 | ஸூரத்து நூஹ் | 28 | |
| 72 | ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்) | 28 | |
| 73 | ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்) | 20 | |
| 74 | ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்) | 56 | |
| 75 | ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்) | 40 | |
| 76 | ஸூரத்துத் தஹ்ர் (காலம்) | 31 | |
| 77 | ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை) | 50 | |
| 78 | ஸூரத்துந் நபா (பெரும் செய்தி) | 40 | |
| 79 | ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்) | 46 | |
| 80 | ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்) | 42 | |
| 81 | ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) | 29 | |
| 82 | ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) | 19 | |
| 83 | ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) | 36 | |
| 84 | ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) | 25 | |
| 85 | ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்) | 22 | |
| 86 | ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) | 17 | |
| 87 | ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்) | 19 | |
| 88 | ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்) | 26 | |
| 89 | ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) | 30 | |
| 90 | ஸூரத்துல் பலத் (நகரம்) | 20 | |
| 91 | ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) | 15 | |
| 92 | ஸூரத்துல் லைல் (இரவு) | 21 | |
| 93 | ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) | 11 | |
| 94 | ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்) | 8 | |
| 95 | ஸூரத்துத் தீன் (அத்தி) | 8 | |
| 96 | ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) | 19 | |
| 97 | ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) | 5 | |
| 98 | ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்) | 8 | |
| 99 | ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) | 8 | |
| 100 | ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) | 11 | |
| 101 | ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) | 11 | |
| 102 | ஸூரத்துத் தகாஸுர் (பேராசை) | 8 | |
| 103 | ஸூரத்துல் அஸ்ரி (காலம்) | 3 | |
| 104 | ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) | 9 | |
| 105 | ஸூரத்துல் ஃபீல் (யானை) | 5 | |
| 106 | ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) | 4 | |
| 107 | ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்) | 7 | |
| 108 | ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்) | 3 | |
| 109 | ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) | 6 | |
| 110 | ஸூரத்துந் நஸ்ர் (உதவி) | 3 | |
| 111 | ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) | 5 | |
| 112 | ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) | 4 | |
| 113 | ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) | 5 | |
| 114 | ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) | 6 |
Subscribe to:
Posts (Atom)

