Sunday, August 24, 2014

ஹதீஸ்-இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதி

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹதீஸ்-யாசீன் சூரா

யாசீன் சூரா பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்
அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.

ஹதீஸ்கள்-உணவைச் சாப்பிட்டால்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவைச் சாப்பிட்டால் (ஆரம்பத்தில்) பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். அதன் ஆரம்பத்திலே பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)                                                                                 நூல்: திர்மிதீ 1781

ஹதீஸ்-சொர்க்கவாசிகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்கவேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்றுகேட்பான்.
அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி
சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக்கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?" என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், (தன்னைச்சுற்றிலும் இருக்கும்) திரையைவிலக்கி (அவர்களுக்கு தரிசனம்தந்தி)டுவான். அப்போது தம்இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
புகாரி 297
வயிறு ஒரு கோணிபை மாதிரி.. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை/விந்துபை/சினைப்பை' ன்னு அவ்வளவு உறுப்புகள் இருக்கு...
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்... சிம்பிளா ட்ரை பண்ணிருக்கேன்...
வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம் அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் 9 பகுதிகள்.
அதாவது மேல், நடு(தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு(தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி... ஓகே வா??
மேல்வயிறு வலது மூலையில வலிச்சா.. ஈரலில் பிரச்சனை.. பித்தப்பை கல்.
மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்.
நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி வித் நீர்கடுப்பு இருந்தால் கிட்னி ஸ்டோன்.
நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் ஃபூட் பாய்சன்.
அடிவயிறு வலது மூலை - அப்பன்டிசைடிஸ்,
அடி வயிறு நடுவில், சிறுனீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,
அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்.
ஓரளவாவது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்... என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிட்டு டாக்டரை பாருங்க.
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்

3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம் – க்ரஞ்சஸ் பயிற்சி!

தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சிஇன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.
செய்முறை: 
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.
அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.

சென்னையை மீட்ட காமராஜர்

சென்னையை மீட்ட காமராஜர்
*******************************************
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, சென்னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும். என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர்.
தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகும் கூட ஆந்திர மாநில மக்களுக்கு சென்னை மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் 1948-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது.
அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம் என்பதை நிலை நாட்ட, ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தலில் வென்று சென்னையை ஆந்திராவுடன் இணைத்து விட வேண்டும் என்பது அவர்களது திட்டமாகும்.அந்த சமயத்தில் காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார்.
ஆந்திரா காங்கிரஸ்காரர்கள் திட்டமிட்டு காய்களை நகர்த்துவதை அறிந்த அவர், சென்னை மாநகராட்சித் தேர்தலில் தமிழக காங்கிரசார் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவித்தார்.
எல்லோரும் காமராஜரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அதன் பிறகு காமராஜர் தன் அதிரடியைத் தொடங்கினார். தமிழ்நாடு எல்லையைக் கமிட்டி என்ற ஒரு அமைப்பை
உருவாக்கினார்.
அந்த அமைப்பு சார்பில் "தமிழ் நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்'' என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதோடு அந்த அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
தேர்தலில் தமிழ்நாடு எல்லைக்கமிட்டி சார்பில் காமராஜர் நிறுத்திய வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். ஆந்திர காங்கிரஸ்காரர்கள் படுதோல்வியைத் தழுவினார்கள்.
இதன் மூலம் சென்னை நகரை காமராஜர் மீட்டு, தமிழ்நாட்டுடன் தக்க வைத்துக் கொண்டார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆந்திர மாநில தலைவர்கள்,சென்னை நகருக்கு உரிமை கொண்டாடுவதை கைவிட்டு விட்டனர்.
இதன் மூலம் காமராஜர் ஓரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஒன்று தமிழக-ஆந்திர காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்பட இருந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இரண்டாவது சென்னை நகரம் கை நழுவி செல்லாமல் பார்த்துக் கொண்டார்.சுதந்திரம் அடைந்த மறு ஆண்டே எழுந்த இந்த பிரச்சினையால் பிரதமர் நேரு மிகுந்த பதற்றத்துடன் இருந்தார்.
ஆனால் பிரச்சினையை காமராஜர் கையாண்ட விதத்தை கண்டு நேரு பிரமித்துப்போனார்.