Sunday, September 11, 2016

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்:

விசம் என்பது என்ன..?
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்பது என்ன..?
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.

Monday, August 29, 2016

நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...??

நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...??
என்றால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் எந்த வேதனைகள் வரவும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அக்குபஞ்சர் நிபுணர்கள்

அல்லாஹ்வுக்குரியது

*உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது அல்லாஹ்வுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது.*
*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே!அதுவும் அல்லாஹ்வின் கரத்தில் தான் உள்ளது*
*அல்லாஹ்வை எப்படி திருப்திப்படுத்துவது என்பது பற்றி மட்டும் கவலைப்படு*

Friday, August 26, 2016

ஹதீஸ்கள் (நபிகள் நாயகம் (ஸல்) பொன்மொழிகள்),

ஒரு மனிதர் தன்னுடைய இதயம் கடினமாக இருப்பதாக , நபி (ஸல் ) அவர்களிடம் முறையிட்டார் .
நபி அவர்கள் கூறினார்கள் :
" அநாதைகளின் தலைகளை இரக்கத்தோடு வருடுங்கள் ..    ஏழைகளுக்கு உணவளியுங்கள் ."
நூல் : சுனன் திர்மிதி

சில முக்கிய உபயோகமான தகவல்கள்

சில முக்கிய உபயோகமான தகவல்கள் இதோ:
1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,
2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும்,
வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும்,
2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும்
இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்"
பெற
ஆதரவு இயக்க அறக்கட்டளை
90437 44957,
82200 44957
web atharavuiyakam.weebly.com

Tuesday, May 17, 2016

குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும் - மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம்.

Sunday, May 15, 2016

ஷஃபான் மாதத்தின் நோன்பு

* ரமலான் மாத நோன்பைத்தவிர மற்ற மாதங்களில் முழுமையாக நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததாக நான் கண்டதில்லை. மேலும் ஷஃபான் மாதத்தைவிட மற்ற மாதங்களில் அதிகமாக அவர்கள் நோன்பு வைத்ததாகவும் நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
* நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து ஓ! இன்னவரே! ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தில் நீர் நோன்பு வைத்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்று பதில் கூறினார். இதைக் கேட்ட நபியவர்கள் நீ வைக்காது இருந்தால் இரண்டு நோன்பு வைத்துக் கொள்ளும் என்று பதில் சொன்னார்கள். (அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹூஸைன் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)