Tuesday, June 5, 2018

உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே!!!
ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.
ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)

Sunday, June 3, 2018

பத்ர் யுத்தம்

பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றிலே மிகப் பிரபலமானதும், பெரிய யுத்தமும் ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போது ஸஹாபாக்களிடம் நபிகள் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள். சஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனையோ உயிர்த் தியாகம் எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம்

தாய்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

*தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!* 
நீங்கள் அதிஸ்டசாலிகள் 

சுவர்க்கத்தின் ஒரு வாசலை நம் வீட்டிலேயே வைத்துக் கொண்டு சுவர்க்கத்திற்கு செல்லும் பாதையை நாம் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

Sunday, May 27, 2018

நபிகள் நாயகத்தின் அரண்மனை

                                            அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!                                           எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.
மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.
நூல் : புகாரி 3906

Thursday, May 24, 2018

திருச்சி ஏர்போர்ட்டில் பயணிகளுக்கு சஹர் சாப்பாடு

திருச்சி ஏர்போர்ட்டில் பயணிகளுக்கு சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
தேவைப்படுவர் 1 மணி நேரம் முன்பு தொடர்பு கொள்ளவும்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் (சகோதரர் /சகோதரிகளுக்கு )
இரவு சஹர் உணவு தேவை உள்ளவர்கள்
தொடர்பு கொள்ளுங்கள்!
9944974747 - 9659990227

Wednesday, May 23, 2018

நல் அமல்கள் செய்து ஸாலிஹானவர்களாக மரணிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம்.
கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்)அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள்.
எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம்.

*பாத்திமா (ரலி) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்*



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!
*பாத்திமா (ரலி) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்*
நான் படித்த புத்தகம் ஒன்றில் மிகவும் அழகான ஹதீஸ் ஒன்றை பார்த்தேன் ...
பெரிய ஹதீஸாக இருக்குனு படிக்காம இருக்காதீங்க சகோஸ் ... அருமையான ஹதீஸ்
அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...
கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் ...
சரி ஹதீஸுக்கு போலாம்...