Wednesday, July 16, 2014

சிறிய மருத்துவம் பயன்கள்

சிறிய மருத்துவம் பயன்கள்

சோற்றுக் கற்றாழை நம் நாட்டின் பொக்கிஷங்களுள் ஒன்று. சிறு காயம், சிறு வெட்டுபட்ட இடத்தில் இதன் இலையை உரித்து பசைப் பகுதியினைத் தடவ காயம் எந்த வித கிருமி தாக்குதலும் இல்லாமல் மாயமாய் மறையும். முகப் பருவக்களின் மீது இதனை தடவ அவை மறைகின்றன. வயது கூடுதலின் காரணமாக கைகளில் ஏற்படும் பழுப்பு புள்ளிகள் இதனைத் தடவி வர மங்கலாகின்றன. 

வறண்ட சருமத்தினால் தவிப்போருக்கு இந்த ஜெல் அதாவது சோற்று கற்றாழையின் கூழ் தடவ சருமம் ஆரோக்கியமாகின்றது. சோரியாஸிஸ் பாதிப்பில் இந்த பசை அதிக முன்னேற்றத்தை தருகின்றது. வெப்பத்தாக்குதலுக்கு இது சிறந்த நிவாரணி தொடர்ந்து தடவ சுருக்கங்கள் நீங்குகின்றன. இதன் ஜுசை தலையில் தடவி சிறிது நேரம் தடவி கழுவி விட முடி வறட்சி நீங்கும். சிலருக்கு சளி பிடிக்கின்றது. 10 நிமிடங்களிலேயே தலையை அலசி விடவும். 

* பல விஞ்ஞான ஆய்வுகள் `ஹோமியோபதி' வைத்திய முறையிலும் அநேக தீர்வுகள் உள்ளன என்பதனைக் கூறுகின்றன. 

* பூண்டு பல் ஓரிரண்டு தினமும் எடுத்துக் கொள்வது இரத்தம் கெட்டிப்படுவதை தவிர்க்கும். கெட்ட கொலஸ்டிரால் நீக்கும். பூண்டு மாத்திரைகளிலும் இதே பலன் உண்டு. 

இஞ்சியினை தினமும் நன்கு உணவில் சேர்த்துக் கொள்வது மூட்டு வலியின் வெகுவாகக் குறைக்கின்றது என்பது ஆய்வு கூற்று. தினமும் 30 கிராம் இஞ்சியினை உணவில் சேர்ப்பது நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். 

அடிபட்டு வெறும் வீக்கமா, அந்த இடம் கறுத்தோ, நீலமாக தெரிகின்றதா பொதுவில் அடிபடும் பொழுது அல்லது எங்காவது இடித்துக் கொள்ளும் பொழுது தோலுக்கு அடியிலுள்ள மிக துண்ணிய இரத்தக் குழாய்கள் உடைந்து சிறு இரத்தக் கசிவு ஏற்படுகின்றது. சிறிது காலம் கருப்போ, நீலமோ உடைய வீக்கமும் உடன் வலியும் அவ்விடத்தில் ஏற்படுகிறது. 

வெளியில் துளி கூட இரத்தக் கசிவு இருக்காது. இது இரண்டு வாரங்களில் தானாகவே சரியாகக் கூடியது. அதற்காக நாம் அப்படியே வலியோடு இருக்க முடியாது அல்லவா. எனவே வீக்கம் தோன்றிய இடத்தில் முதலில் ஐஸ் கொண்டு தேயுங்கள். இது இரத்தக் கசிவினை நிறுத்தி நிறமாற்றத்தினையும் குறைக்கும். 

நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் வீதம் 3 முறை செய்யுங்கள். ஒரு நாள் சென்று சிறிது நேரம் வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வீக்கமடைந்த பகுதியில் கொடுக்க இரத்த ஓட்டம் சீர்படும். இதனையும் நாள் ஒன்றுக்கு 10 நிமிட வீதம் மூன்று முறை செய்யுங்கள். வலி இருந்தால் சாதாரண மாத்திரையே போதும் `ஆஸ்ப்ரின்' மாத்திரை வேண்டாம். 

இது பொதுவான சிகிச்சை ஆகும். ஆனால் இருதய நோய்க்காக நீங்கள் தொடர்ந்து ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக் கொள்பவராக இருந்தால் கண்டிப்பாக, மிக கண்டிப்பாக உங்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்கள் ஆஸ்ப்ரின் மாத்திரையின் நிறுத்தக் கூடாது. 

அடிபடுதல் மூட்டுகளில் ஏற்பட்டாலோ, வலி பொறுக்க முடியாது இருந்தாலோ, ஜுரம் ஏற்பட்டாலோ, காது பக்கத்தில் ஏற்பட்டாலோ உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். அடிக்கடி இப்படி சிறு சிறு அடிப்பட்டு பக்கம் பக்கமாய் கரு இரத்தம் கட்டும் செயல் உங்களுக்கு நிகழுமானால் 

* மருத்துவ ஆலோசனையுடன் வைட்டமின் சி எடுத்துக் கொள்ளுங்கள். 

* எலுமிச்சை, கேரட், ஆரஞ்சு இவற்றினை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

* நீங்கள் ஏதேனும் பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசி அறிவுரை பெறுங்கள். வெப்ப, சுட்ட காயங்கள் பொதுவில் கொதிக்கும் எண்ணெய், கொதிக்கும் உணவு, தீக்காயம் ஆகியவை லேசாக பட்டாலே எரிச்சலை கொடுக்கக் கூடியவை. பட்ட இடம் சிவந்து சிறிது வீக்கத்துடன் இருக்கும். இவை சிறிய அளவிலேயே இருக்கலாம். 

அதிகமான பாதிப்பு ஏற்படுத்தும். நெருப்பு, நீராவி, இரசாயனங்கள் இவற்றினால் ஏற்படலாம். இவை பட்ட இடம் சிவந்து வலி, கொப்பளம், வீக்கம் இவற்றுடன் இருக்கும். மிக மிக அதிகமான பாதிப்பு என்பது கருத்தோ, வெளுத்தோ, சிவந்தோ இருக்கும் இவர்களுக்கு அதிக வலியை கூட உணர முடியாது. 

ஏனெனில் நரம்புகள் கூட பாதித்திருக்கும். இந்த வகை காயங்கள் உடனடி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை. நாம் வீட்டிலேயே நம்மை கவனித்துக் கொள்ளக் கூடிய மிக சாதாரண சிறிய சூட்டுக் காயங்களை கையாள்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.... 

* சரும சிவப்பு

* சிறிது வீக்கம் 

* கொஞ்சம் வலி ஆகிய அறிகுறிகளுடன் இருக்கும். பொதுவில் இது கை, கால்களிலேயே அதிகம் ஏற்படும் ஆனால் மூட்டு இணைப்புகளில் இக்காயம் ஏற்படின் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இரண்டாவது வகை காயம் சரும முதல் போர்வையிலிருந்து இரண்டாவது போர்வைக்கு ஊடுவி இருக்கும். இதில் 

* கொப்புளங்கள் தோன்றும் 

* அதிக சிவப்பு இருக்கும் 

* வலி, வீக்கம், எரிச்சல் அதிகமாக இருக்கும். முதல் வகை மற்றும் இரண்டாம் வகையில் இல்லாமல், காயம் 3-வது வகைக்கு உட்பட்டு இருந்தால் கீழ்க்கண்ட முறைகளை கையாளலாம். 

* காயம்பட்ட இடத்தை குழாய் நீரில் 10 நிமிடம் காட்டுங்கள். கண்டிப்பாக ஐஸ்கட்டி வைக்காதீர்கள். 

* சுத்தமான மென்மையான பாண்டேஜ் துணி கொண்டு இருக்கமில்லாமல் சுற்றி விடுங்கள். 

* சாதாரண வலி நிவாரண மாத்திரைகளை தேவைபட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்.

3 வயது குழந்தைகள் முதல் மாணவ பருவத்தினர் வரை ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக் கொள்ள உங்கள் மருத்துவரின் அனுமதி பெறுங்கள். பொதுவில் இத்தகு சிறிய தீக்காயங்கள் தானே ஆறிவிடும். அதிக வலி, ஜீரம், காயம்பட்ட இடம் புண்ணாக்குதல் போன்றவை மருத்துவ உதவி தேவைப்படுபவை. 

பொதுவில் தீக்காயம், சுட்ட காயம் இவற்றிக்கு 

* ஐஸ்கட்டி உபயோகிக்காதீர்கள் 

* வெண்ணை, முட்டை வெள்ளைக்கரு இவற்றினை பயன்படுத்தாதீர்கள். 

* கொப்புளங்களை உடைக்காதீர்கள். மூன்றாவது வகையான தீக்காயம் அதிக பாதிப்புடையது. நிறைய சதை, கொழுப்பு, எலும்பு வரை பாதித்திருக்கும். 

* இவர்களுக்கு குளிர்ந்த நீர் உபயோகிக்காதீர்கள். 

* அவர்கள் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனரா என்பதை பாருங்கள். 

* காயம் பட்ட இடத்தை இருதயத்திற்கு சற்று மேல் இருக்க முடியுமா என்று பார்த்து முடிந்தால் உயர்த்தி விடுங்கள். குளிர்ந்த சுத்தமான மென்மையான அகன்ற பாண்டேஜ் துணியில் காயம் பட்ட இடத்தை மென்மையாக மூடுங்கள். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

வேர்க் கடலை

வேர்க் கடலை
மனிதர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் எண்ணெய் வித்துகளில் ஒன்று வேர்க்கடலை. நிலக்கடலை என்று வழக்கு மொழிகளில் அழைக்கப்படும் இது பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கொண்டது. நிலக்கடலையில் உள்ள சத்துக்களை பார்க்கலாம்...
* நிலக்கடலை அதிக ஆற்றல் தரக்கூடியது. ஏராளமான தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் உள்ளன.
* ஆலிக் ஆசிட் எனப்படும் கொழுப்பு அமிலம் நிலக்கடலையில் உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதயம் சார்ந்த கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் வராமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.
* எளிதில் ஜீரணம் ஆகும் புரதச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சிக்கும், உடற்செயல்களுக்கும் அவசியமானதாகும்.
* பி-கோமாரிக் அமிலம் எனப்படும் நோய் எதிர்ப்பு பொருள் நிலக்கடலைப் பருப்பில் காணப்படுகிறது. இரப்பை புற்றுநோக்குக் காரணமான படிவுகள் இரப்பையில் உருவாகாமல் தடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது.
* நிலக்கடலைப் பருப்பில் உள்ள மற்றொரு முக்கியமான நோய் எதிர்ப்பு பொருள் ரிசவரட்ரோல். இது புற்றுநோய்களுக்கு எதிர்ப்பாற்றலை வழங்க வல்லது. மேலும் இதய பாதிப்புகள், நரம்பு வியாதிகள், நினைவிழப்பு வியாதிகள் ஆகியவை ஏற்படாமல் காக்கும். வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
* கொதிக்க வைத்து சாப்பிடும் நிலக்கடலைப் பருப்பு கூடுதல் நோய் எதிர்ப்புத் தன்மையை உடலுக்கு வழங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
* 'வைட்டமின் ஈ' நிலக்கடலைப் பருப்பில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பருப்பில் 8 கிராம் 'வைட்டமின் ஈ' கிடைக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் செயல்படும். உடற்செல்களின் சவ்வு வலுப்பெற இது அவசியம்.
* பி- குழும வைட்டமின்களான ரிபோபிளேவின், நியாசின், தயமின், பான்டோதெனிக் அமிலம், போலேட் ஆகியவை உள்ளன. 100 கிராம் நிலக்கட லையில் 85 சதவீதம் ஆர்.டி.ஐ. அளவில் நியாசின் உள்ளது. இது மூளை நலமாக செயல்பட அவசியமான வைட்டமின் ஆகும்.
* தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் வேர்க் கடலைப் பருப்பில் உள்ளன.

தொண்டைச் சதை (Tonsil) குணமாக

தொண்டைச் சதை  (Tonsil) குணமாக
மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தொண்டை சதை (Tonsil) குணமாகும். இனிய குரல் வளம் உண்டாகும்.
தூதுவளைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் டான்சில் எனப்படும் தொண்டைச்சதை குணமாகும்.

சிந்தனையில் கூட லஞ்சத்தை எதிர்பாராத காமராஜர்

இந்த தூய அப்பழுக்கற்ற தமிழன் ஆண்ட பூமி இன்று லஞ்சத்தின் உறைவிடமாய் மாறிவிட்டது. லஞ்சத்தை ஒழித்து நல்லாட்சியை கொண்டு வருவதகு தான் ஒவ்வொருவரும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காமராஜருக்கு செய்யும் நன்றிக்கடன்.
சிந்தனையில் கூட லஞ்சத்தை எதிர்பாராத காமராஜர்
காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது, அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன். ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் .
அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.
பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர், எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது, உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின்விசிறி ஏன் வாங்கித் தந்தார்? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே.
இது கூட லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார்.

கீரைகளின் மகத்துவங்கள்

   

கீரைகளின் மகத்துவங்கள்

Agatti Spinach: Spinach Agatti 63 of the nutrient, according to Siddha Medicine. In many parts of the knowledge of herbal Purpose.

அகத்தி கீரை: அகத்தி கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகளில் மூலிகையாக பயன்படுகிறது. சிறப்பாக இதன் இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்தி கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து  உண்ணப்படுகிறது.

அகத்தியின் சிறப்பு
: அகத்தி கீரை சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறு, செரிமானம் போன்றவை சரியாகும்.

அகத்தியில் உள்ள சத்துகள்:
 அகத்தி கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாக  கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையிலும் மாவுச்சத்து இரும்புச்சத்து, வைட்டமின் (உயிர்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்தியின் பயன்பாடு:
 அகத்தி இலையிலிருந்து ஒரு வகை தைலம் தயாரிக்கப்படுகிறது.அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாக பயன்படுகிறது. அகத்திக்கீரை  உடலின் உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் அதிகம் சுரக்க வல்லது அந்த கீரைக்கு மூளையை பலப்படுத்தும்  சக்தி அதிகம் உள்ளது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் பித்தத்தை தணிக்கலாம். இதை உலர்த்தி சூரணம் செய்து காலை  மாலை வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம்.இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் படிப்படியாக குணமாகும். இது வாய்வு கூடிய  கீரை. எனவே வாய்வு பிரச்சனை உள்ளவர்கள் வாய்வை கண்டிக்கும் பூண்டு பெருங்காயம் சேர்த்து சமைத்து உண்ண வேண்டும். தொண்டையில் புண்  இருப்பின் இந்த கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

கரிசலாங்கண்ணி
: வெண்கரிசலை அல்லது கையாந்தரை ஒரு மருத்துவ மூலிகை செடியாகும் இதில் இருவகை உண்டு மஞ்சள் கரிசலாங்கண்ணியை  அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம்  காணலாம். கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேசசுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது.  வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான். கரிசலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான  மருத்துவ குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துகள்:


நீர்- 85 சதவீதம், மாவுப்பொருள்- 9.2 சதவீதம், புரதம்- 4.4 சதவீதம், கொழுப்பு - 0.8 சதவீதம், கால்சியம் 62 யூனிட், இரும்பு தாது - 8.9 யூனிட்,  பாஸ்பரஸ்- 4.62 சதவீதம். இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

மருத்துவ குணங்கள்:


உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும் கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல்  வளம் பெறும் புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும் ஈரல் மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம்  கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது  ஓராண்டு தாவரமாகும்.

தூதுவளை:


மூலிகையாக பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்து புதிர் போல வளரும் இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா  நிறமானது சிறிய காய்கள் தோன்றி பழுக்கும் இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும். தூதுவளை இந்தியாவில் அனைத்து  இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் இதுவும் ஒன்று இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அலர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா  முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை பூ காய் வேர் அனைத்தும்  மருத்துவ பயன்கொண்டது.

பயன்படும் உறுப்புகள்:

வேர் முதல் பழம் வரை எல்லா பாகங்களும் பயன்படுகிறது.

* தூதுவளை இலையை பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.
* இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாக கடைந்தோ சாப்பிட்டால் கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவு தெளிவும் உண்டாகும்.
* இலை சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவரகாசம் மார்பு சளி நீங்கும். காயை உலர்த்தி தயிர் உப்பு  ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பைத்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.
* ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளை புகைபிடிக்க சளி இளகி குணப்படும்.

பொன்னாங்கண்ணி:

பொன்னாங்கண்ணி ஈரமான இடங்களில் வளரும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில்  பல்வேறு நாடுகளில் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர் பாகங்கள் உணவுக்கு பயன்படும் உணவு மற்றும் மருத்துவதேவைகளுக்காக  பயிரிடவும் படுகிறது.இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. கண் எரிச்சல் கண்  மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. பின்பு இந்நோய்கள் குணமாகும். வாய்நாற்றம், வாய்ப்புண்  ஆகியவையும் நீங்கும்.

குப்பைமேனி:


குப்பைமேனி ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். ஓராண்டு தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.  குப்பைமேனியின் அனைத்து மருத்துவ பாகங்களும் மருத்துவ பயன்பாடு உடையனவாகும்.

மருத்துவ குணங்கள்:

* இலை மலம் இளக்கியாகும்.
* சொறி, சிரங்கு, உடல், அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது.
* இலை சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
* நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது.
* வேர் பேதி மருந்து தயாரிப்பில் பயன்படுகிறது.


வல்லாரை:

வல்லாரை ஒரு மருத்துவ மூலிகை பயன்பாடுடைய தாவரமாகும். ஆசியா ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.

சத்துகள்:

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து எ உயிர்சத்து, சி மற்றும் தாது உப்புகள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு  தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை தான், இதனை சரசுவதி கீரை என்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்:


இரத்த சுத்தகரிப்பு வேலையை செய்யும்.
* உடல் புண்களை ஆற் றும் வல்லமை கொண்டது.
* தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய் களை தடுக்கும் வல்லமை கொண்டது.
* மனித ஞாபகசகதியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
* பல்துலக்கினால் பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
* சளி குறைய உதவுகிறது.


இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்தி கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.

மணத்தக்காளி கீரையின் மகிமை

கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில் வெள்ளை பூக்களும் மலரும். மணத்தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக கொத்து கொத்தாக காய்க்கும். காய் முற்றினால் கத்தரிகாய் நிறத்தில் இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்:


1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும்.  சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. கண் பார்வை நன்றாக தெரியும்.

3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.

4. குறைந்த விலையில் கிடைத்தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.

5. குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு

மணத்தக்காளி கீரைக் குழம்பு


என்னென்ன தேவை?


மணத்தக்காளி கீரை- ஒரு கட்டு
துவரம் பருப்பு-100கிராம்
சிறிய வெங்காயம்-50 கிராம்
தக்காளி -3
பச்சை மிளகாய்- 6
பூண்டு-3சிறிய பல்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி-1ஸ்பூன்
எண்ணெய்-3டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்து-1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்- கால் டீஸ்பூன்
சீரகம்-1/2 டீஸ்பூன்
வரமிளகாய்- 1
கறிவேப்பிலை,உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது?


முதலில் கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். புளியை நூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதனுடன் பெருங்காயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கூடவே தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் கரைந்துள்ள புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொதிக்கும் புளிக்கரைசலுடன் கடைந்து வைத்துள்ள கீரையைக் கலந்து மேலும் பத்து நிமிடம் கொதிக்க விடவேண்டும். பின் கீரைக் குழம்பை இறக்கி வைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், கிள்ளிப்போட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், போட்டு தாளித்தால் ருசியான மணத்தக்காளி கீரை குழம்பு ரெடி..

முளை கட்டிய பயறின் மகத்துவங்கள்!

முளை கட்டிய பயறின் மகத்துவங்கள்!

முளை கட்டிய பயறு
பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.
இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.
100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.
அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.