Saturday, August 2, 2014

பல் கோளாறுகள் நீங்க


பல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும்.
அரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
புதினா இலை உலர்த்தி, சிறிது உப்பு கலந்து தொடர்ந்து பல் துலக்கி வந்தால் பல்வலி, பல் கூச்சம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பாதிப்புக்கள் தீரும்.
துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு அரிப்பு போன்ற குறைபாடுகள் தீரும்.

வாழைப்பழத்தின் பலன்கள்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும், கனிமங்களையும் கொண்டுள்ளது. இதில் சுண்ணாம்புச்சத்து அதிக அளவு  உள்ளது. மேலும் “ப்ரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ்‘ ஆகிய மூன்று வித சர்க்கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக  அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து போன்ற முக்கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள் கொண்டுள்ளது. வாழைப்பழம் உணவை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் உள்ளது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு வலுவும், எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டது.  ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கும். குடலில் புண்ணையும் ஆற்றும். 

கடும் பணியின் காரணமாக ஏற்படும் சோர்வை நீக்கும் ஆற்றல் கொண்டது வாழைப்பழம். சோர்வாக இருக்கும்போது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால்  சுறுசுறுப்பு தானாக வந்துவிடும். அதன்பின், மீண்டும் சில மணி நேரம் வேலை செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள, “ட்ரைப்டோபன், செரடோனின்‘  ஆகிய ரசாயன சத்துக்கள்தான் இதற்கு காரணம். பக்கவாதம் வராமல் தடுக்க வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு  குறைவு; பொட்டாஷியம் சத்து அதிகம். அதனால், ரத்த அழுத்தத்தை முற்றிலும் தடுத்து விடும். 

வாழைப்பழத்தில், ‘வைட்டமின் பி 6’ உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான். வாழைப்பழத்தில், “ஆன்டாசிட் என்னும்  ரசாயனமும் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது. வாழைப்பழத்தில், இரும்புச்சத்து  உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து இல்லாததால்தான் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்த சோகை உள்ளவர்கள், வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்  ரத்தசோகை விலகும். 

ஆண்மை குறையை நீக்கும் செவ்வாழை கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணியாகும். கண் பார்வை குறைய  ஆரம்பித்தவுடன் தினசரி ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு  உணவுக்கு பிறகு 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் இதற்கு பலன் கிடைக்கும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில்  பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு  வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

தண்ணீர்

* காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர்   குடிக்க  வேண்டும். அவ்வாறு தண்ணீர் குடித்தால், தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன்       சீக்கிரமாக சேரும்.  

* கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும்.   இதய  நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.

* முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை  தண்ணீர் குடித்தால் உடம்பில் நீர் அளவை                 நிரப்புவது மட்டுமல்ல, மூளை உணர்ச்சியை தூண்டும்.

* மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். 

* பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு           முன் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே                   குறையும்.  எடை குறைப்பதற்கு துணை புரியும்.   

* படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவ்வாறு தண்ணீரை முறையாய குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.

படேலுக்கே பாடம் புகட்டிய காமராஜர்

படேலுக்கே பாடம் புகட்டிய காமராஜர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் வல்லவாய் படேல். அவரை கண்டாலே எல்லா தலைவர்களும் நடுங்கினார்கள். அத்தகைய படேலுக்கே ஒருதடவை பெருந்தலைவர் காமராஜர் பாடம் புகட்டினார்.
1948-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் டாக்டர் பட்டாபி சீதாராமய்யாவும், புருஷோத்தமதாஸ் தாண்டனும் போட்டியிட்டார்கள்.
அச்சமயம் நேரு மந்திரிசபையின் கொள்கைகளை குறை கூறுவதே தாண்டனுடைய தொழிலாக இருந்தது. இதனால் தாண்டன் வெற்றியை காமராஜர் விரும்பவில்லை.
தாண்டன் வெற்றி பெற்றால் அவர் அமைக்கும் காரியக் கமிட்டிக்கும், நேருவுக்கும் இடையே ஒற்றுமை இருக்காது. தகராறுகள் வளரும். இதனால் நேரு பிரதமர் பதவியில் இருந்தே விலகக்கூடும்.
இது தேசத்துக்கு நல்லதல்ல. ஆகையால் நேரு மந்திரி சபைக்கும், அதன் கொள்கைகளுக்கும் ஒத்துப் போகக்கூடிய, ஆதரவு தேடித் தரக்கூடிய வகையில் கமிட்டி அமைய வேண்டும். அதற்கு பட்டாபி சீதாராமய்யாவின் வெற்றிதான் முக்கியம் என்று எண்ணினார் காமராஜர்.
அதனால் பட்டாபிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் அவர் வேலை செய்தார். அதன் பயனாக பட்டாபிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.
கடைசியாக தலைவர் தேர்தலில் ஓட்டுக்களை எண்ணிப்பார்க்கும்போது பட்டாபிக்கே வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க பாடுபட்டவர் காமராஜர்தான் என்பதை நேரு புரிந்து கொண்டார்.
இந்த தேர்தலில் தாண்டன் வெற்றி பெற வேண்டுமென்று சர்தார் படேல் விரும்பினார். ஆனால் அவர் விருப்பத்துக்கு மாறாக காமராஜர் வேலை செய்து பட்டாபியை வெற்றி பெறச் செய்தது படேலுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
அச்சமயம் படேல் காமராஜரை பார்த்து "உங்களுக்கு என் மீது என்ன கோபம்?'' என்று கேட்டார்.
"உங்கள் மீது எனக்கு என்ன கோபம் இருக்க முடியும்?'' என்றார் காமராஜர். "பின் ஏன் பட்டாபி வெற்றி பெறப் பாடுபட்டீர்கள்?'' என்றார்.
அதற்கு காமராஜர் "தமிழ்நாட்டில் பட்டாபிக்குஆதரவு இருந்தது. அவர் வெற்றி பெற்றார். அவ்வளவுதான்!'' என்றார்.வல்லபாய் படேலால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. தலை குனிந்தபடி சென்று விட்டார்.

பறவைகளின் எச்சமும் மருந்து

எச்சமும் மருந்து!
பறவைகள் உங்கள் வீட்டைச் சுற்றிலும், தோட்டத்தில் எச்சமிட்டு அட்டகாசம் செய்கிறதா? சந்தோஷப்படுங்கள்...
புதுச்சேரியில் உள்ள நோய் பரப்பும் பூச்சிகள் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம் (வி.சி.ஆர்.சி) பறவைகளின் எச்சத்தை ஆராய்ச்சி செய்ததில், அதில் உள்ள பாக்டீரியா கிருமி, கொசுக்களை அழிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.
பறவைகள் வெவ்வேறு நிலப்பரப்பில் பூச்சிகள், பழங்கள், தானியங்களை உண்கின்றன. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து 1,000 பறவைகளின் எச்சம் சேகரிக்கப்பட்டு, அந்த எச்சத்தில் உள்ள பாக்டீரியா கிருமியானது டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
தற்போது இந்தக் கழிவில் இருந்து கொசு ஒழிப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஹதீஸ்-உணவு

நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டு விடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)                                                                      நூல்: புகாரி 5409

மிளகாய்

'அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?'னு கேட்டா... சட்டுனு 'கொலம்பஸ்' பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?'னு கேட்டாக்கா... மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்!

செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி!
                                                                                                                                                                                                                        

குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டுவிட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம். 1,493-ம் ஆண்டில் கொலம்பஸ் மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்ஸ் சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர். அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விஷயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர்.
போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது. இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது. இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை. மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமேதான்.
காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன.
மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை இந்தியப் பெண்களையேச் சேரும்.