Saturday, October 11, 2014

ஜும்மா தொழுகை

ஜும்மா தொழுகையை சும்மா தொழுகையாக கருதும் அலட்சியமானவர்களே...!
ஐந்து நேர தொழுகையும் இல்லை. ..சுன்னத்தான தொழுகைகளும் இல்லை. .நபீலான தொழுகைகளும் இல்லை. ...பிறகு எதற்காக உன் பிறப்பு?

ஹதீஸ்-நயவஞ்சகனின் அடையாளம்

நயவஞ்சகனின் அடையாளம், மூன்றாகும் :
1) பேசினால் பொய் பேசுவான், 2) வாக்குறுதி தந்தால் மாறு செய்வான், 3) நம்பினால் மோசடி செய்வான், என்று நபி (ஸல்) கூறினார்கள்.
''அவன் நோன்பு வைத்தாலும்,தொழுதாலும், தன்னை முஸ்லிம் என எண்ணினாலும் சரியே...'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது.                               அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)         நூல் : புகாரி,முஸ்லிம்,ரியாளுஸ்ஸாலிஹீன்: 689

ஹதீஸ்-தொழுகைக்கு விரைதல்

'தொழுகைக்கு ''இகாமத்'' கூறப்பட்டால், நீங்கள் விரைந்து ஓடி வராதீர்கள். நீங்கள் நடந்தவர்களாக மெதுவாகவே வாருங்கள். அமைதியை நீங்கள் கடைபிடியுங்கள். கிடைத்ததை தொழுங்கள். உங்களுக்குத் தவறியதை நீங்கள் (தொழுது) முழுமைப்படுத்துங்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். 
(''உங்களில் தொழுகையை நாடி வந்தவர், தொழுகையில் இருந்தவர் போலாவார்'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூடுதலாக உள்ளது). 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)         நூல் : புகாரி,முஸ்லிம்,ரியாளுஸ்ஸாலிஹீன்: 704

ஹதீஸ்-முன் பின் சுன்னத் தொழுகை

முன் பின் சுன்னத்கள் யாவை?
தொழுகையின் முன், பின் சுன்னத் தொழுகையின் அவசியம் மற்றும் ஒவ்வொரு தொழுகையிலும் எத்தனை ரக்கத் சுன்னதாகத் தொழ வேண்டும்.

பொதுஅறிவு

பொதுஅறிவு:-
* நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
* சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர்  ஜூலியஸ்   சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

வெங்காயம்

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம் :-
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

Friday, October 10, 2014

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!
உங்களுக்கு வொயிட் பிடிக்குமா? ப்ரவுன் பிடிக்குமா? என்றால், அவரவருக்குப் பிடித்த நிறத்தை சொல்வார்கள். ஆனால், உணவு விஷயத்தில் நிறத்தைப் பார்த்து அதன் சத்துக்களை நிர்ணயிக்க முடியாது. எந்த நிற உணவுகள் நல்லது என்பதை முதலில் தெரிந்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்.