Saturday, January 24, 2015

மறைந்த சவுதி மன்னருக்கு மரியாதை இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு ;

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா மரணம் அடைந்ததையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை 

சவூதி மன்னர் மரணம்: கொடி சாயவில்லை, குடியும் சாகவில்லை!

சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் இன்று வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவருக்கு வயது 90.

Friday, January 23, 2015

வாழ்வியல் உண்மைகள்...

1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்
2. வந்தால் போகாதது - புகழ், பழி
3. போனால் வராதது - மானம்,உயிர்

ஈமானை பலப்படுத்த சிறந்த வழி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!.
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

Wednesday, January 21, 2015

ஹதீஸ்-சஜ்தா



ஸஹீஹ் முஸ்லிம் 832.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள

ஹதீஸ்-ஜனாஸா

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும்.அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே!என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும்.இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும்.மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல் : ஷஹீஹ் புகாரி

எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் - சிறப்பு பகிர்வு

கான் அப்துல் கபார்கான் எனப்படும் பாத்ஷா கான் 1890-ல் சிந்து , காபூல், ஸ்வாட் நதிகள் பாய்ந்தஉத்மான்ஜாய் கிராமத்தில் பிறந்தார். பக்தூன்கள் எனப்படும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர் அவர். அமைதி என்பதே என்னவென்று தெரியாத அளவுக்குப் போர்களால் நிரம்பியிருந்தது கபார்கான் வாழ்ந்த பகுதி. ஆங்கிலேயர்கள் அப்பகுதியை வெல்ல பலகாலம் பிடித்தது. கடுமையான சட்டங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றால் அம்மக்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். கர்சன் காலத்தில் பல்வேறு பக்தூன்கள் வாழ்ந்த பகுதிகளை ஒரே பிரிவாகச் சேர்த்து வடமேற்கு எல்லை மாகாணங்கள் (NWFP) உருவாக்கப்பட்டது.