TAMIL MUSLIM SONGS
Saturday, September 5, 2015
Sunday, August 23, 2015
இந்த வருட ஹஜ்ஜில் ஒட்டகம் அறுப்பது தடை செய்யப்படுகிறது!
'மெர்ஸ்' நோய் குறிப்பாக ஒட்டகத்தின் மூலம் மனிதனுக்கு பரவுவதால் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்த வருடம் ஒட்டகம் ஹஜ் கிரியைகளில் அறுப்பதை சவுதி அரசு தடை செய்துள்ளது. அது தவிர்த்து ஆடு:, மாடு, போன்றவற்றை அறுத்து ஏழைகளுக்கு உணவாக அளிக்கலாம். மெர்ஸ் நோயின் தாக்கம் குறைந்தவுடன் வழக்கமாக ஒட்டகமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ஹஜ் கிரியைகளுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது. இள வயது ஒட்டகத்திலிருந்து இந்த நோய் மனிதனுக்கு உடன் தொற்றிக் கொள்கிறது. கடந்த இரண்டு தினங்களில் இரண்டு பேர் இந்நோயால் இறந்துள்ளனர். 15 பேருக்கு இந்நோய் தாக்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்திலிருந்து ஹஜ்ஜூக்கு வருபவர்கள் முறையாக தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு உடன் வரும் மருத்துவர்களளின் அறிவுரைப்படி நடந்து கொள்ள அறிவுறுத்தப்டுகிறார்கள்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
22-08-2015
சவுதி கெஜட்
22-08-2015
Tuesday, August 18, 2015
'விண்கற்களை சாம்பலாக்குவது யார்?
'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா? இரு தடவை பார்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை பார்வை திரும்ப அடையும்' அல்குர்ஆன் 67:3,4
'பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்'.
அல் குர்ஆன் 21:32
இந்த இரண்டு வசனங்களையும் நாம் சிந்தித்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ இறைவன் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பது நமக்கு விளங்கும். நமது பூமியைச் சுற்றியுள்ள பரப்பை வளி மண்டலம் என்று கூறுகிறோம்.
Sunday, August 16, 2015
ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை...
எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதலுதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதலுதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள்.
Saturday, August 15, 2015
உமர் (ரலி) அவர்களை எதிர்கொள்ள துணிவில்லாத ஷைத்தான்!
(ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர்(ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது! ! ! !
“திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்”
” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்”எனவும் கூறப்பட்டது . (திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்வதில்லை” (திருக்குர்ஆன் 26:121.).
Friday, August 14, 2015
பொது அறிவு
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
* ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.
* நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.
Subscribe to:
Posts (Atom)

