Thursday, August 8, 2019

#துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாள்களின் சிறப்புகள் ....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
#அல்லாஹுதஆலா கூறுகிறான்:
#அதிகாலையின் மீதும் பத்து நாள்கள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1)
#கண்மணி‌ நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் கூறினார்கள் :
“(துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களான) இந்த நாட்களில் செய்கின்ற எந்தச் செயலும் மற்ற நாட்களில் செய்யும் செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்.
இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் வழியில் போராடுவதை விடவா? சிறந்தது என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள்.

“(ஆம்) அல்லாஹ்வின் வழியில் போராடுவதை விட வும் சிறந்தது தான். எனினும் ஒரு மனிதர் தன்னையும், தன் பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணித்து வீர மரணம் அடைகிறாரோ அவரைத் தவிர” (அவரே மிகச் சிறப்புக்குரியவர்) எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியுல்லாஹூ அன்ஹூ நூல் :புகாரி: 969
(துல் ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை.
ஆகவே தஹ்லீல் – லாஇலாஹா இல்லல்லாஹ்,
தக்பீர் – அல்லாஹ் அக்பர், 
தஹ்மீத் -அல்ஹம்து லில்லாஹ்

போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் ஆதாரம் : அஹ்மத் 5575
இப்னு ஹஜர் (ரஹிமஹூல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்!
தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன!
இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிக கவனம் செலுத்துவது சிறப்பாகும். ஃபத்ஹுல் பாரி : 2 / 534
ரசூலுல்லாஹ் ﷺ கூறுகிறார்கள்: நல்லமல்கள் அல்லாஹ் விற்கு மிக விருப்பமாக இருக்கின்ற நாள்கள் இந்த பத்து
நாள்களைவிட வேறு நாள்கள் இல்லை. (நபித்தோழர்கள்) கேட்டனர்: அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்ற நாள்களை விடவா? என்று. நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்ற நாள்களை விடவும்தான். ஆனால், யார் தனது உயிர், பொருளுடன் புறப்பட்டுச் சென்று பிறகு அவற்றில் எதனுடனும் அவர் திரும்பவில்லை என்றால் (அந்த ஜிஹாது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்).அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹுஅன்ஹு), நூல்: அபூ தாவூது, எண்: 2438
அமல்களில் சிறந்தது
“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள்.
“பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது.
“ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹூ அன்ஹூநூல்: புகாரி 26
அல்லாஹ் இந்த சிறப்பான நாட்களில் நம்மனைவருக்கும் அல்லாஹ் ரஸூலுக்கு பொருத்தமான அமல்களை செய்து அல்லாஹ்வின் பொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக....!!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி‌ வஸல்லம்
தகவல் : ஸித்றத்துல் முன்தஹா

No comments:

Post a Comment