Friday, July 12, 2013

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவராக மீண்டும் அ.தமிழ்மகன் உசேன் போட்டியின்றி தேர்வு.

Thursday, July 11, 2013

இன்று (11.07.2013) ரமலான் நோன்பு துவக்கம்

முஸ்லிம்கள் குதூகலம் (11.07.2013) ரமலான் நோன்பு துவக்கம்.

நேற்று முன்தின இரவில் வானில் பிறை தெரியவில்லை. எனவே நேற்று அதிகாலை துவங்குவதாக இருந்த ரமலான் நோன்பினை இன்று அதிகாலை முதல் முஸ்லிம்கள் நோற்கின்றனர். இதையொட்டி தமிழகத்தில்ள்ள பள்ளிவாசல்களில் நேற்றிரவு "தராவீஹ்" எனும் சிறப்பு தொழுகை நடந்தது. ரமலான் நோன்பை ஒட்டி பல்வேறு பள்ளிவாசல்களும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஜொலிக்கின்றன. தொடர்ந்து ஒவ்வொருநாள் இரவும் தராவீஹ் சிறப்பு தொழுகையும், மாலை பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் நடக்கின்றன. முப்பது நோன்புகள் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.