Wednesday, July 29, 2015

உலகில் மிகப் பெரியவை எவை? -

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்.
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி.
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை.
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீட்டர்).
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்).

Sunday, July 26, 2015

தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!

தொழுகை:
'நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

தோள் கொடுத்த நபிகள் நாயகம் : பிறருக்கு உதவி செய்வதில் முன்மாதிரி..!

மக்காவின் வெற்றிக்கு பின்னர் ஒருநாள் நபி [ஸல்] அவர்களிடம் ஒருவர் வருகைதந்து ''அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் ஏழை எனக்கு இருக்க ஓர் இடமில்லை என முறையிட்டு நின்றார்.
நபி [ஸல்] அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு கஃபாவின் பக்கம் வந்தார்கள், 'இதோ! இந்த இடத்தில் நீர் உமக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளும்'' எனக்கூறினார்கள் . கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த ஏழை மனிதர் தம் வீட்டிற்குச் சுவர் எழுப்ப முனைந்தபோது மண்குழைத்துக் கொடுத்தார்கள் வாழ்விக்க வந்த மாநபி [ஸல்] அவர்கள்.