Wednesday, July 12, 2017

உலக இறுதி நாட்களில் ஏற்படும் அடையாளங்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
உலக இறுதி நாட்களில் ஏற்படும் அடையாளங்கள் என்று ஹஜ்ரத் நபிகள் நாயகம்  முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டவைகள்.
*
*
*
* அநீதி பெருகிவிடும்.
* பொய் உண்மையாகும்.
* தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.
* மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.
* இலேசன விஷயத்திற்கெல்லாம் கொலை செய்வார்கள்.

அற்புத துஆக்கள்

பெற்றோருடன் ஹஜ் செய்ய கூடிய பாக்கியத்தை நம் அனைவர்க்கும் அல்லாஹ் தந்து அருள் புரிவானாக ...!  ஆமீன் .... 

Monday, July 10, 2017

அற்புத துஆக்கள்

யா அல்லாஹ்! நீ அளித்த எங்கள் குழந்தை செல்வங்களை உன் பாதையில் போராடும் முஜாஹிதீன்களாகவும், உனக்கு மட்டுமே ஸஜ்தா செய்யும் வணக்கசாலிகளாகவும், இஸ்லாத்திற்கும், முஸ்லிம் உம்மாவிற்கும் சேவைசெய்பவர்களாகவும் ஆக்குவாயாக!
எங்களையும் அவர்களையும் இல்லிய்யீன் எனும் சுவனத்தில் ஒன்றிணைப்பாயாக ! 
ஆமீன்  

Sunday, July 9, 2017

மழைநீர் பிராணன்


மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.
சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.

மகத்தான அரசியல் தலைவர் காயிதே மில்லத்

இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி இருக்க வேண்டும்? என்ற விவாதம் நடத்தப்பட்டபோது. இந்தியப் பாராளுமன்றத்திற்குள் தமிழே! ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்! என்று முதல் முதலில் முழங்கிய பெருந்தகை.
நீங்கள் இசுலாமியர் ஆயிற்றே! ஏன் தமிழை ஆட்சி மொழியாகக் கேட்கிறிர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு, நான் அல்லா! என்று அழைப்பதற்கு முன்பே, அம்மா! என்று அழைத்தவன்.
இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழே! எங்கள் மொழி! என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்.
இந்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய உண்மையும் நேர்மையும் தூய்மையும் எளிமையுமான மகத்தான அரசியல் தலைவர் நமது ஐயா காயிதே மில்லத்.