Friday, August 22, 2014

வறண்ட கூந்தலை மின்ன வைக்கும் கொய்யா

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள் :-
அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.

ஜீரண பிரச்சினைகளுக்கு

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள் :-
அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.

புதினா - முள்ளங்கி ஜூஸ்

தேவையான பொருட்கள்: 

புதினா - ஒரு கட்டு 
கொத்தமல்லி - ஒரு கட்டு 
முள்ளங்கி - 100 கிராம் 
உப்பு - தேவையான அளவு 
மிளகுதூள் - தேவையான அளவு 
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன் 

செய்முறை :

• புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். 

• முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• புதினா, கொத்தமல்லி, முள்ளங்கியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும். 

• இதனுடன் சிறிது உப்பு, சிட்டிகை மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். 

• சத்தான புதினா - முள்ளங்கி ஜூஸ். 

• வாரம் ஒரு முறை இதைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தால், வாய்க் கசப்பு நீங்கி வயிறும் சுத்தமாக இருக்கும். நன்றாகப் பசி எடுப்பதோடு உடலில் ஒருவித புத்துணர்ச்சி உண்டாகும்.

காய்ச்சல், தலைவலி மற்றும் மன உளைச்சல் போக்கும் முளை கட்டிய பயறு

காய்ச்சல், தலைவலி மற்றும் மன உளைச்சல் போக்கும் முளை கட்டிய பயறு
100 கி முளை கட்டிய பயறில் உள்ள சத்து:
கலோரிஸ் .................- 30
புரதச்சத்து ................- 3 கி
கார்போஹைட்ரேட்... - 6கி
நார்ச் சத்து ................- 2 கி
முளை கட்டிய பயறு மிகவும் சத்தான ஒரு உணவு.
மற்ற தானியம் போல முளை கட்டிய பயறு வகை வாயுத்தன்மை இல்லாதவை. ஆகவே இது நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாகிறது.
இதில் லைசின் எனப்படும் அமினோ ஆசிட் அதிக அளவில் உள்ளது. கால்சியம், ஃபாஸ்ஃபரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி, சி அடங்கியது.
டென்னிஸ், டான்ஸ் போன்ற உடல் பயிற்சி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடல் பலத்தை அளிக்கக் கூடிய ஒரு உணவு. அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு ஊட்டச் சத்து.
முளைகட்டிய பயறில் மருத்துவ குணங்கள் பல உள்ளன... காய்ச்சல், தலைவலி மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக சீன மருத்துவத்தில் மருந்தாக உபயோகிக்கிறார்கள்

உடல் பலவீனத்தைப்போக்கும் இயற்கை உணவு முறைகள்

உடல் பலவீனத்தைப்போக்கும் இயற்கை உணவு முறைகள் : 

உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும்.

பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமானவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.

முளைக்கட்டிய பயறு பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.

சோற்றுக்கற்றாழை தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

ேவையான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.

முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

இயற்கை மருத்துவம்

உடலுக்குச் சக்தியும் வலுவும் தருவதில் தானியங்களின் பங்கு :

சோளம்: உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

கோதுமை: நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.

வரகு: உடல் எடையை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளைத் தடுக்கும்.

கொண்டைக்கடலை: பக்கவாதநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

சோயாபீன்ஸ் : அனைத்து வைட்டமின் பி வகைகளும் உள்ளன. இவை இதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிக புரோட்டின், நார்ச்சத்து உள்ளதால் சோர்வடைந்த இதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. இயற்கையான ஆண்டி ஆகிசிடென்ட் நிறைந்தது. அதிக மினரல்கள் உள்ளன. உறுதியான எலும்புகள் உருவாகும். மெனோபாஸ் பிரச்சினைகளைத் தடுக்கும். உடம்பில் கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த குழாய்களுக்குள் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பச்சைபயறு: முளைகட்டிய பயிறு உடல் எடையை குறைக்கும். நோயாளிகளுக்கும் உகந்தது.

உளுந்து: ஆண்மையைப் பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கைச் சீராக்கும்

தட்டைப்பயறு: உடலில் புதிய செல்களை உருவாக்கத் தேவையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலில் அதிகக் கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு உடல் குண்டாகாமால் இருக்க உதவுகிறது.

கொள்ளு: கொழுப்பைக் கரைப்பதில் முதலிடம், உடலில் இருக்கும் தேவையற்ற தண்ணீரை எடுத்துவிடும். இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவிடும். வளரும் குழந்தைகள், உடற்பயிற்சி செய்வோருக்கு மிகவும் உகந்தது.

மூலநோய்க்கும், ரூமாட்டிசம் பிரச்சினைகளுக்கும், காய்ச்சலைக் கட்டுபடுத்த, இருமல் மற்றும் சளியை விரட்ட என கொள்ளு குணமாக்கும் பட்டியல் நீள்கிறது. வயிற்றுப்புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம்.

உடல்: அறிந்ததும்...அறியாததும்

உடல்: அறிந்ததும்...அறியாததும்

* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.

* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.

* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.

* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.

* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.

* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.

* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.

* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.

* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.

* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.

* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

பூரான் கடி

பூரான் கடி
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும்.
ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு முன்னதாக சில முதலுதவி சிகிச்சைகள் செய்யலாம்.
பூரான் கடித்த இடத்தில் உடனடியாக ஆன்டிசெப்டிக் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் இதனால் அரிப்பும் கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் சூடாக இருக்கும். வலியும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும்.
பனை வெல்லம்
பூரான் கடித்தது என்று தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லாம் தந்து சாப்பிட சொல்லலாம். அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும். தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால் கவனத்துடன் செயல் படவேண்டும்..
குப்பைமேனி இலை
வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது.
குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும்.
ஊமத்தம் இலை
பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும். ஊமத்தம் செடியின் நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால்லிட்டர் நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

அரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ்

நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களின் சருமம் வளுவளுவென வெண்ணிறத்தில் பொலிவடைந்து காணப்படும். 

சருமத்தை பொழிவடையச் செய்யும் வழிகள்:  

வேக வைக்காத அரிசியை சரியாக இரண்டு டீஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அரிசியில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கற்களை நீக்கி நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.  

சுத்தப்படுத்திய அரிசியில் சுத்தமான நீரை ஊற்றி அந்த பாத்திரத்தை மூடி விடவும். அரிசி அனைத்தும் பாத்திரத்தின் அடி பாகத்தில் வந்தடைய, அதை 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். 

இப்போது பழுப்பு அல்லது பாலின் நிறத்திலான அந்த நீரை தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இந்த நீரை கொண்டு உங்கள் முகத்தை நன்றாக தேய்த்து கழுவுங்கள். பின் உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் வரை அப்படியே இருங்கள். 

காய்ந்த பிறகு அந்த அரிசி நீரை கொண்டு மீண்டும் ஒரு முறை முகத்தை கழுவுங்கள். உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் போது, அரிசி நீரில் இருக்கும் அனைத்து வைட்டமின் மற்றும் கனிமங்களும் உங்கள் சரும துவாரங்கள் வழியாக உள்ளேறும். 

முகத்தை கழுவிய பின்பு, உங்கள் சருமத்தை கையால் வருடும் போது அதிலுள்ள மென்மையை நீங்கள் உணரலாம். இதனால் ஆர்கானிக் மேக்-அப் வகையாக கருதப்படும் இதனை பின்பற்றி பொலிவடைந்து ஜொலிஜொலிக்கும் சருமத்தை பெறலாம். 

நாம் பயன்படுத்தும் அரிசி ஒரே தரத்தில் இருப்பதில்லை. அதனால் உங்கள் மேனியின் பளபளப்பு அதிகரிக்க விதவிதமான அரிசி வகைகளை பயன்படுத்தி பாருங்கள். 

இந்த வருடத்தின் (2014) முதல் ஹஜ் விமானம் ஆகஸ்ட் 27ல் இந்தியாவிலிருந்து பயணிக்கிறது!

வருகிற ஆகஸ்ட் 27 அன்று இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்ரீகர்கள் சவுதி அரபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புனித ஹஜ் யாத்ரீகளுடன் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு மதீனா சென்றடைகின்றனர்.

2014 ஹஜ் பயணம் – விமான புறப்பாடு மற்றும் திரும்பும் தேதி விபரம் அறிவிப்பு

2014 ஹஜ் பயணம் – விமான புறப்பாடு மற்றும் திரும்பும் தேதி விபரம் அறிவிப்பு

பிறப்பு செய்திகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
திண்டுக்கல் பேகம்பூர் நன்னப்பா நகரில் வசிக்கும் (திண்டுக்கல் மர்ஹும் T.காதர் ஷா அவர்களின் மகன் வழி பேரனும், ஜனாப் த.கே.முஹம்மது மைதீன் அவர்களின் மகனுமாகிய) ம.பரக்கதுல்லாஹ், கரூர் ஈசநத்தம் ம.வ.காதர் இப்ராஹீம் அவர்களின் மகன் வழி & பெரியகுளம் ப.அப்துல் சுக்கூர் அவர்களின் மகள் வழி பேத்தியும் திருச்சி ம.வ.கே.ஷாகுல் ஹமீது அவர்களின் மகளுமாகிய) ச.நஹிம்மா காத்தூன் தம்பதியர்களுக்கு 22-08-2014 வெள்ளிகிழமை பகல் 12.30 மணிக்கு திருச்சி துவாக்குடி அரசு மருத்துவமனை-ல் ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு ப,முஹம்மது யஹ்யா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறோம். அக்குழந்தையின் வளமான வாழ்விற்கு துவா செய்யுமாறு அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.

Thursday, August 21, 2014

பலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்!

டலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. 
பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.
குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக் கும் பயறு வகைகள்  அவசியம் தேவை. அதே சமயம், அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. சைவ உணவு சாப்பிடுபவர்கள், தினமும் ஏதேனும் ஒரு வகை பயறை 50 கிராம் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பயறுகளைச் சுண்டலாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது!'' என்கிறார் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.
எச்சரிக்கை: ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது.
முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்’ அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பச்சைப் பயறு
எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
கொண்டைக்கடலை
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer)  போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
மொச்சைப் பயறு
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.  
காராமணி
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
 கொள்ளு
எலும்புக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்; தசைகள் வலுப் பெறும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அதிகம் சாப்பிடக் கூடாது. அவ்வப்போது, கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது. புரதச் சத்து அதிகம் இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ராஜ்மா
தசைகளை நன்றாக இறுகச்செய்வதோடு, மலச் சிக்கலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உண்டு. மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஓரளவு இருக்கின்றன. சோடியம், பொட்டாஷியம் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடலை வருத்தி உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.
பட்டாணி
காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி மற்றும் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து ஓரளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் - சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடலாம். குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.
சோயா
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
துவரைப் பயறு
உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. இதில், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி, நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

இயற்கை மருத்துவம்

அன்னாசிப்பழம்
இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.
அரைக்கருப்பன் சரியாக!
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.
பப்பாசிப்பழச்சாறும் பசுப்பாலும் கலந்து பூசிலாம் தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினால்குணமாகிவிடும்,
ஆசனவாசலில் குடைச்சலுக்கு-இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவரகளுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்ரில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால. அரிப்பு குணமாகும்.
ஆரோக்கியத்திற்கு!
தேகஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி,யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.
ஆண்கள் மலடு தீர!
ஆண்களுக்கு அவரது இந்திரியத்தில்-ஈஜீஎப்| (EGF) என்னும் இரசாயனச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு இந்த ரசாயனச்சத்தை மருத்துவர் மேற்பார்வையில் பாவித்தால் மலடுதீரும். எமது சித்தரகள் அறிவுறுத்தலுக்கு அமைய யோகாசனம் செய்தாலும் குறிப்பாக ஹலாசனம், சர்வாங்காசனம், சற்பாசனம் சாந்தி ஆசனம் ஆகியவற்றை தினம் செய்தால் சிலநாட்களில் நற்பயன் கிடைக்கும்.
ஆண்மை வலுப்பெற!
அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.
இசைமருத்துவம்!
இன்றையநவீனவிஞ்ஞானமுறைப்படி மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும் இசையைப்பயன்படுத்துகின்றனர். சிலநோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில்பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பாரகள். இந்த இசை மருத்துவம அமோகவெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது எம்மவர் அறிந்ததே. இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள
இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.
இரத்தம் பெருக!
இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள் பழவகைகள் தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி,ஈரல்,மீன்முதலியவை அதைஉண்பவருக்கு உடன்இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளனிப்பழமும் -பீறுறூற்|இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும்சேரத்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.
இளநீர் மருத்துவம்!
இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொற்ராசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் :

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் :
1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory)
2. வீக்க உருக்கி (anti inflammatory)
3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic)
4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer)
5. மலேரியா போக்கி (Anti malarial)
6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal)
7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial)
8. வைரஸ் அகற்றி (Anti viral)
9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant)
10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous)
வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.
வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர்.
வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.
நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.
வேப்பிலையை பயன்படுத்தும் முறை :
* புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.
* வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.
* வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.
வேப்பிலையின் பொதுவான பயன்கள்
* வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.
* சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.
* சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.
* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
* வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.
* வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாகற்காய்ப் புட்டு

சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாகற்காய்ப் புட்டு


தேவையானவை: பாகற்காய் - 5, கடலைப் பருப்பு - அரை கப், வெங்காயம் - 2, சோம்பு தூள், கடுகு, மிளகாய் தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலை, உப்பு - தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் - 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன்.


செய்முறை: பாகற்காயைச் சிறுதுண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். கடலைப் பருப்பை ஊறவைத்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பாகற்காய் வெந்ததும் நீரை வடித்து பிழிந்து கொள்ளவும். கடலை மாவையும், பாகற்காயையும் வதக்கவும். இதில், உப்பு, மிளகாய் தூள் தூவிக் கிளறவும். புட்டு வதங்கியவுடன் நல்ல மணம் பரவும். அடுப்பை அனைத்துவிட்டு சோம்புதூளைத் தூவி இறக்கவும்.

பலன்கள்: பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. இதன் கசப்புதான் இனிப்பைக் குறைக்கும் மருந்தாக இருக்கிறது. கசப்பு என்பதால், சிலர் சர்க்கரை சேர்த்து, பொரியல் செய்வார்கள். சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம்.

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...



வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...
வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும்
கற்றாழை (AloeVera):
மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant):
வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig):
காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
மூங்கில் பனை (Bamboo Palm) :
காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant):
நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos):
நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

பேக்கிங் சோடா 
பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

எலுமிச்சை 
எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

ஆப்பிள் 
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும்.

உப்பு
அனைத்தையும் விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் தான் உப்பு. இந்த உப்பைக் கொண்டு பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.

சாம்பல் 
தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்களை வெண்மையாகும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்.

ஆரஞ்சு தோல் 
இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/body-care/2014/home-remedies-treatment-the-yellow-teeth-006424.html

நுங்கு

நன்மை தரும் நுங்கு!
நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.
பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.
சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும்.
குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.
நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.

தமிழ் மாநில ஜமாத்துல் உலமா' தலைவராக மவ்லவி A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தேர்வு

தொடர்ந்து மூன்றாவது முறையாக 'தமிழ் மாநில ஜமாத்துல் உலமா' தலைவராக மவ்லவி A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தேர்வு19/08/14 அன்று நடைபெற்ற தேர்தலில் தலைமை பதவிக்கு தற்போதைய தலைவர் மவ்லானா மவ்லவி A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும் சென்னை மவ்லானா மவ்லவி தர்வேஷ் ரஷாதி ஹஜரத் அவர்களும் போட்டியிட்டார்கள்.
ஈரோடு மவ்லானா மவ்லவி முஹம்மது சுல்தான் ரஷாதி ஹஜ்ரத் அவர்களும், சிவகங்கை மவ்லானா மவ்லவி முஹம்மது ரிளா ஹஜ்ரத் அவர்களும் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார்கள்.
மதுரை மவ்லானா மவ்லவி முஹம்மது காஸிம் பாகவி ஹஜ்ரத் அவர்களும் வேலூர் மவ்லானா மவ்லவி முஹம்மது இலியாஸ் ஹஜ்ரத் அவர்களும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.
வாக்காளார்களுக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்ணை பரிசீலித்த பின்னர் மூன்று வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டன . அதில், அவர்கள் விரும்பும் வேட்பாளர்களின் பெயருக்கு எதிரில் முத்திரையிட்டு அதற்கு உரித்தான பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டது. வோட்டு போடும் இடத்தில் வேட்பாளர்களும் தேர்தல் குழுவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மிக சுமூகமான முறையில் ஆலிம் பெருமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சுமார் ஒரு மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மவ்லானா மவ்லவி அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளராக சிவகங்கை முஹம்மது ரிளா ஹஜ்ரத் அவர்களும்,
பொருளாளராக மதுரை முஹம்மது காஸிம் பாகவி ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
- மவ்லவி கனியூர் இஸ்மாயில் நாஜி


Wednesday, August 20, 2014

இயற்கை மருத்துவம்,

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

ஹதீஸ்-உளூ

'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள்எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்)அவர்கள் எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக்கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.
புகாரி 60

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை!

நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடித்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும்.
அலோ வேரா ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
கற்றாழை
மஞ்சள்
தேன்
பால்
ரோஸ் வாட்டர்

செய்முறை:
மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர் என அனைத்திலும் ஒரு தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தயாரித்து வைத்துள்ள அலோ வேரா ஜெல்லைப் போட்டு கலந்தால் பேஸ்ட் தயாராகிவிடும். சுமார் 20 நிமிடங்கள் முகம், கழுத்தில் தேய்த்துக்கொள்ளலாம். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகி தூய்மையான முகம் துடைக்கும் டவல் கொண்டு முகத்தை ஒத்தி எடுக்கலாம்.
சன்லெஸ் நீக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
கற்றாழை
எலுமிச்சை சாறு

செய்முறை:
வெயிலில் அலைந்து விட்டு வீட்டிற்கு வந்தால் முகம் கருப்பாகி விடும். இதை போக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.
கற்றாலை ஜெல், எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு பின்னர் முகம் கழுவ வேண்டும்.

ஒளு செய்வது எப்படி?

ஒளுவின் ஃபர்ளுகள் ஆறு


”ஃபர்ளு”என்பது எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அதில் சில அம்சங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லாகும்.எனவே கீழ் வரும் செயல்களைக் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும். 

1.நாம் ஒளுச் செய்கிறோம் என்று மனதால் எண்ண(நிய்யத்) வேண்டும்.


2.அந்த எண்ணத்துடனே (நிய்யத்துடன்) முகத்தை கழுவ வேண்டும்.

l
                                                              
தலைமுடி ஆரம்பிக்கும் இடத்திற்கும் நாடிக்கும் இடையிலுள்ள பகுதிகள் அனைத்தும் தண்ணீரால் கழுவ வேண்டும்.


                                   


3. முழங்கைகள் உட்பட இரு கைகளையும் கழுவ வேண்டும்.


                                        

4.தலையின் சிறிது பாகத்தைத் தண்ணீரால் தடவ வேண்டும்.
 5.கணைக் கால்கள் உட்பட இரு கால்களயும் கழுவ வேண்டும்.             
6.இவையணைத்தையும் வரிசையாக செய்து முடிக்க வேண்டும்.



ஒளூவின் சுன்னத்துக்கள் பதினைந்து


1.أعود ،بسم அவூது, பிஸ்மி ஓதுதல்.
2.பல் துலக்கல்.
3.மணிகட்டுக்கள் வரை இரு கைகளையும் கழுவுதல்.


4.வாய்க் கொப்பளித்தல்.


5.மூககை சுத்தம் செய்தல்.



6.அடர்ந்த தாடியைக் குடைந்து கழுவுதல்.
7,8.கை, கால் களின் விரல்களைக் குடைந்து கழுவுதல்.
9.தலை முழுவதையும் தண்ணீரால் தடவுதல்.




10.இரு காதுகளையும் தடவுதல்.



11.வலது பாகத்தை முதலில் கழுவுதல்.
12.ஒளுவின் உறுப்புக்களை நன்றாக தேய்த்துக் கழுவுதல்.
13.ஒவ்வொரு உறுப்புக்களையும் மூன்று தட்வை கழுவுதல்.
14,15.பர்ழில் கூறப்பட்ட அளவைவிட அதிகமாய் கை கால்களை கழுவுதல்.
காரணம்(உதாரணமாக முழங்கைகளை கழுவும்போது சிறிது கூடுதல் இடத்தை கழுவுவதினால் கவனக் குறைவைத் தடுக்கலாம். கிடைக்கும் நன்மைகளை முழுமையாகப் பெறலாம்)