Saturday, December 20, 2014

ஹதீஸ்-தஜ்ஜால் கால் வைக்காத இடம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!"
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி)                              நூல் : ஸஹீஹுல் புகாரி 1881.

47 வகையான நீர்நிலைகள்

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

Thursday, December 18, 2014

தேடி வந்த பதவிகள்

பதினைந்து வயது முதலே காங்கிரஸ் கட்சியின்பால் பற்றுக் கொண்டு, பணியாற்றத் தொடங்கினார் காமராஜர். இருப்பினும், 1924-ம் ஆண்டில் தான் தனது 21-வது வயதில் நான்கணா செலுத்தி காங்கிரசில் அடிப்படை உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் வகித்த பதவிகள் வருமாறு:-

ஹதீஸ்-இரண்டு நல்லறங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு
இரண்டு நல்லறங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்கும் முஸ்லிம் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும் அதனைக் கடைப்பிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே.

ஹதீஸ்-பத்து நன்மைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.

Wednesday, December 17, 2014

கலையும் காமராஜரும்

கருணை உள்ளம் படைத்த பெருந்தலைவர் காமராஜரிடம் கலையுள்ளம் நிரம்பி வழிந்தது. காந்தத்தை நோக்கி இரும்பு பாய்ந்து செல்வது போல் கலைஞர்கள் அனைவருமே பெருந்தலைவரை நாடிச் சென்றனர். கட்சிக் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துக் கலைஞர்களிடமும் அன்புடன் பழகிய பெருந்தலைவர் காமராஜர் அனைத்துக் கலைஞர்களையும் சமமாகப் போற்றினார்.

நபிமார்கள் பற்றிய தகவல்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
நபிமார்கள் பற்றிய தகவல்கள்
நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்தை தம் மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர்கள்.

துஆ-எந்த சோதனையும் திடீரெனத் தாக்காது

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
கீழ்காணும் துஆவை யார் ஒருவர் காலையில் 3 முறை கூறினாரோ அல்லாஹ் நாடினால், இரவு வரை அவரை எந்த சோதனையும் திடீரெனத் தாக்காது.

வக்பு வாரிய தலைவருக்கான் ஊதிய தீர்மானம் ரத்து : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் எழும்பூரைச் சேர்ந்த ஏ.கே.ரபீக் பெய்க் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் அவற்றின் சொத்துகள் மீதான நிர்வாகத்தை கண்காணிப்பதற்காகவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசால் தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப்பட்டது. இதில் 13 உறுப்பினர்கள் உள்ளனர்.

Monday, December 15, 2014

ஹதீஸ்-உலக முடிவு நாள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான “தஜ்ஜால்கள்“ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.                                                          ஷஹீஹ் புகாரி 3609

தொழில் முனைவோருக்கு `டின்’ அவசியமா ?

வரி செலுத்துபவர் அடையாள எண் (Taxpayer Identification Number) என்பதைத்தான் டின் நம்பர் என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் தங்களது தொழிலை மாநில அரசிடம் பதிவு செய்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.

ஹதீஸ்-சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்ளுடைய காலத்தில் நடந்த சம்பவத்தை இந்த பதிவில் காண்போம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா (ரலி) மிகவும் ஆவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா (ரலி) அவர்கள் கேட்டவுடன்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான்.

மரணத்தை நினைவு கூறுவோம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
வாருங்கள் மரணத்தை நினைவு கூறுவோம்!

நல்லகணவனின் அடையாளம்



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு..
கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன.

பொது அறிவு

* மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2 பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.
* இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.

காசு இல்லாமல் போன காமராஜர்

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம். அதன் துவக்க விழாவிற்கு நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார். தற்போது பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாய் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.

Sunday, December 14, 2014

தயிர் இயற்கையின் அரு மருந்து.

தயிர் இயற்கையின் அரு மருந்து. பாலிலிருந்து பெறப்படும் தயிரானது மிக எளிதில் ஜீரனமாகும் திறன் கொண்டது. பாலை நாம் எடுத்துக் கொள்ளும் முக்கிய காரணம், அதில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் மற்றும் வைட்டமின் பி தான்.

பொது அறிவு

* உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)
* அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்

துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
1) நோன்பாளி நோன்பு துறக்கும் வேளை.

உங்க கம்பியூட்டர் அதிகம் ஹேங் ஆகுதா….?? இதோ சில தீர்வுகள்…!!

கணிணியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது அனைவரும் அறிந்ததே. நாம் ஒரு புது லேப் டாப் அல்லது டெஸ்க்டாப் கம்பூடர் வாங்கும் போது இருக்கிற வேகம், கொஞ்ச நாள் கழிச்சு இருக்கிறது இல்ல.

மரணத்தை நினைவு கூறுவோம்

மரணத்தை நினைவு கூறுவோம்
மனிதனை படைத்த இறைவன் வாழ்வு, மரணம் என 2 நிலைகளை ஏற்படுத்தியுள்ளான்,,,,,
அதை தன் திருமறையில்,,,,,

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை -

இரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்கவேண்டும்.

பொது அறிவு

* தொடர்ந்து 42 கப்பு காப்பி குடிச்சா நீங்க செத்துப் போவிங்க!
* நீங்க இந்த வரிய படிச்சு முடிப்பதற்குள் உங்க உடலின் 25,000,000 உயிர் செல்கள் இறந்திருக்கும்!!

காந்தியை தூக்கி நிறுத்திய காமராஜர்

காந்திஜியின் வாரிசு எனப் போற்றப்பட்டவர் பெருந்தலைவர் காமராஜர். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜியின் பிறந்த நாளிலேயே காமராஜர் காலமானார்.

ஹதீஸ்-மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். 

இஸ்லாத்தை நிரூபித்தது விஞ்ஞானம்

அதிர்ச்சியில் விஞ்ஞான உலகம்…..!! இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.

கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?

கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.

ஹதீஸ்-ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது
அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப (2:156) "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும்,
"அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா' (இறைவா! எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அ(வர் துன்பத்தை பொறுத்துக் கொண்ட)தற்கு ஈடாக அ(வர் இழந்த)தை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)                                                                  நூல்: முஸ்லிம் 1674

இஸ்லாமிய வரலாற்றில் முதலில்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
இஸ்லாமிய வரலாற்றில் முதலில்...

ஹதீஸ்-உலகவாழ்வின் மேல் மனிதன் கொண்ட உவப்பைத் தடுக்க

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
நபி(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் ஒரு அறிவுரை கூறினார்கள்.