Saturday, August 19, 2017

கவலைப்படாதீர்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)
💠கவலைப்படாதீர்கள்..!💠
​நிச்சயமாக அல்லாஹ் எம்மோடு இருக்கிறான்...​
​​لا تحزن إن الله معنا​​
🔹 கணவன் சரி இல்லையே என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
ஆசியா நாயகி அவர்களுக்கும் கணவன் (பிர்அவ்ன்) மோசமானவன் தான்!
🔹 மனைவி சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
லூத் நபி, நூஹ் நபி (அலை) அவர்களின் மனைவியும் மோசமானவர்கள்தாம்!
🔹 குழந்தை இல்லையே என்ற கவலையா....???
கவலைப்படாதீர்கள்!
முஃமின்களின் தாயார்கள்
ஆயிஷா_ரலி அவர்களுக்கும், ஸைனப்_ரலி அவர்களுக்கும் குழந்தை இல்லை!
🔹 பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
நூஹ் நபியின் மகனும் மாறு செய்தவன் தான்!
🔹சொந்த வீடு இல்லையே என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
ஹாஜரா (அலை) அவர்கள் பாலைவனத்தில் வானம் பார்த்த பூமியில் வாழ்ந்து வந்தார்கள்!!!
🔹 தீராத நோய் என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
அய்யூப் (அலை) அவர்களுக்கும் நோய் வந்தது!
🔹 பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்!
இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தகப்பனும் மாறு செய்தவர்தான்!
🔹 படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்!
எல்லா நபியும் ஆடுதான் மேய்த்தார்கள்!
🔹 உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...???
கவலைப்படாதீர்கள்!
யூசுப் நபிக்கும் அதுதான் நடந்தது!!!
🔹 கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால் அவர்கள் முதுகில் குத்திவிட்டார்களா?
கவலைப்படாதீர்கள்!
கடலையே பிளந்து அற்புதத்தை கண்ணால் கண்ட பின்னும் மூஸா நபியின் முதுகில் ஒரு சமுதாயமே குத்தியது!
🔹 உம்மீதும்,குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா?
கவலைப்படாதீர்கள்!
கொடைவள்ளல் அபுபக்கர் (ரலி) அவர்களின் மகள்,அல்லாஹ்வின் தூதரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) மீதும் அவதூறு சொன்ன சமுதாயம் தான் இது...
நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப்போகிறார்கள்!
மனிதர்கள் அப்படித்தான்!
எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!
சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை!
ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித்தான் வரும்!
இஸ்லாம் கூறும் வழியில்
முஸ்லீம்களாக முமீன்களாக வாழ்ந்து காட்டுவோம்.
நன்றி : அலிஃப் கான் 

Friday, August 18, 2017

துஆ

அல்ஹம்துலில்லாஹ்! புகழனைத்தும் ஏக இறைவனுக்கே!
ஸலாத்தும்,ஸலாமும் அண்ணல்நபி ﷺ அவர்களின் மீது பொழியட்டுமாக!
யா அல்லாஹ் ! பரக்கத்தான இன்றைய ஜும்மா நாளில் உன்னுடைய மஃபிரத்தையும்,ஆபியத்தையும், ரஹ்மத்தையும் எங்களின் மீது இரக்குவாயாக!
யா அல்லாஹ்! எங்களின் துஆக்களை ஏற்றுக்கொண்டு உன்னுடைய அற்புதத்தை நிகழ்த்திக்காட்டுவாயாக!
யா அல்லாஹ்! அடியார்களின் மீது நீ வைத்துள்ள உள்ளன்பை எங்களின் மீது
வெளிப்படுத்துவாயாக!
எங்களின் காரியங்களை இலேசாக ஆக்குவாயாக!
பெற்றோர்களான நாங்கள் செய்த பாவங்களின் காரணமாக எங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையில் சிரமத்தை ஏற்படுத்திவிடாதே!
எங்களை மன்னித்து எங்களின் மீது கருணை காட்டுவாயாக!
எங்களின் பிள்ளைகளின் இம்மை,மறுமை வாழ்க்கையை நீ திருப்தியுறும் வகையில் அமைத்துத் தருவாயாக!
ஆமீன்.

கருணை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ....
இறைத்தூதர் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
🍀 "படைப்பினங்களின் மீது கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்".
#புகாரி : 6013.
 எப்பொழுதும் ஒருவரை ஊக்குவிக்கும் வார்த்தைகள் கொண்டு அணுகுங்கள்.,
 தட்டிக்கொடுப்பவராகஇருங்கள்.. வாடிப்போன முகங்களுக்கு புன்னகையை பரிசளிப்பவராக இருங்கள்..

குழந்தைகளைப் பரிபாலிப்பவர்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டியவை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவரது உலகத் தொடர்புகள் யாவும் அறுந்து விடுகின்றன.
மூன்று விஷயங்களைத் தவிர அவை 
  • நிரந்தரமாகப் பயன்பெறப்படும் தர்மம் 
  • பயன்தரத்தக்க கல்வி 
  • ஸாலிஹான குழந்தையின் பிரார்த்தனை. (முஸ்லிம்)

Thursday, August 17, 2017

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும்

#பெருந்தலைவர்_காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம்  குடிசை வாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்.
அப்போது, தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.
அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு  காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார்" ஜீவா.

ஹதீஸ் - மைய்யத்துக்கு கஷ்டமான கவலையான நேரம் எது?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 
நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகை விட்டு பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?
ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும் நேரம்
நபி(ஸல்): "இல்லை"
ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில் அடக்கி விட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.

ஹதீஸ் - உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள். 
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) 
'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறிது நேரத்தைச் செலவிடு. உன்னுடைய இறப்புக்குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறிது நேரத்தைச் செலவிடு' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி    

Tuesday, August 15, 2017

இரண்டு வயது வரை குழந்தைக்கு தலையணை வைப்பதை தவிர்க்கவும்

தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும்.
குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்நேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.