Saturday, August 15, 2015

உமர் (ரலி) அவர்களை எதிர்கொள்ள துணிவில்லாத ஷைத்தான்!

(ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர்(ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது! ! ! !

“திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்”
” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்”எனவும் கூறப்பட்டது . (திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்வதில்லை” (திருக்குர்ஆன் 26:121.).

Friday, August 14, 2015

பொது அறிவு

* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
* ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.
* நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.

Wednesday, August 12, 2015

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குகிறது!!!

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். 
ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

"இஃப்தார் விருந்து எதற்கு?, கலாமின் அதிரடி - வெளிவராத உண்மைகள்.!

"இஃப்தார் விருந்து எதற்கு?, கலாமின் அதிரடி - வெளிவராத உண்மைகள்.!
புதுடெல்லி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவரது குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தில் இஃப்தார் விருந்து எதுவும் நடத்தப்படாததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது அவருக்கு தனிச்செயலாளராக இருந்த பி.எம். நாயர் என்பவர் கலாமுடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்ற புத்தகத்தில் கலாம் குறித்து சில அரிய தகவல்களை கூறியுள்ளார்.

Sunday, August 9, 2015

ஹதீஸ்-உலக முடிவு நாள் (லஹ்வுள் மஹ்பூலில் எழுதபட்டிருப்பது)

அக்கிரமக்காரர்கள் வசிக்கும் எந்த ஊரையும் உலக முடிவு நாளுக்கு முன்னதாக நாம் அழிக்காமலோ வேதனை செய்யாமலோ விடுவதில்லை .இப்படிதான் லஹ்வுள் மஹ்பூலில் எழுத பட்டிருக்கிறது -அல் குர்ஆன்
ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் .