Saturday, October 25, 2014

முஹர்ரம்

உலக மக்களிடையே புது வருடப்பிறப்பு ஜனவரி மாதத்தின் முதல்நாள், பல்வேறு களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

1436 இஸ்லாமிய ( ஹிஜ்ரி) வருட பிறப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...
         


இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும்  இனிய 1436 இஸ்லாமிய ( ஹிஜ்ரி) புத்தாண்டு                                      
நல்வாழ்த்துக்கள்...

மகத்தான நற்பாக்கியங்கள் !!!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

மகத்தான நற்பாக்கியங்கள் !!!!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.) எவர் அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையை பெனுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்…

9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.

13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.

14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.

18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.

21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.

23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.

24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.

25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.

26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.

27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.

28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.

ஹதீஸ்-செல்வம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு... 
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்..

Friday, October 24, 2014

உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி எது ?

உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி எது ?
உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி என்றதும் அது எங்கோ அடர்ந்த ஊசியிலைக் காடுகளிலிலோ, மலைகளிலோ இருக்கும் என்று உங்கள் எண்ணம் ஓடினால்.. உங்கள் ஊகம் தவறு ! மிக கொடிய விஷமுள்ள பூச்சியினம் உங்கள் வீட்டு கொள்ளைப்புறத்திலும் இருக்க வாய்ப்புள்ளது.

ஹிஜ்ரி வருடம் எப்படி தோன்றியது?

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.

தடுப்பூசிகள்... ஆலோசனையும்.. அட்டவணையும்!

''வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்'னு வள்ளுவர் சொல்லியிருக்கிறதுதான்... தடுப்பூசியோட தத்துவமும்!'’

ஹதீஸ்-உடும்புக் கறி தடை செய்யப்பட்டதா?

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உடும்புக் கறி உண்ண  மறுத்த செய்தி ஸஹீஹுல் புகாரியில் பல அறிவிப்புகள் மூலம் நாம் காணலாம். அதில் ஒன்றில்

Thursday, October 23, 2014

தொழுகை

தொழுகை அதாவது சலாத் இந்த வார்த்தை எதை குறிக்கின்றது ?
என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்;

மனித உடல்: ஆச்சரியப்படத்தக்க செய்திகள்..............

> நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

Wednesday, October 22, 2014

ஹதீஸ்-மறுமையில் அல்லாஹ் மூவரிடத்தில் பேசவும் மாட்டான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"மறுமையில் அல்லாஹ் மூவரிடத்தில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையுமுண்டு. (அவர்கள் யாரெனில்) 'கணுக்காலுக்கு கீழ் ஆடை அணிபவன், செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் மூலம் பொருள்களை விற்பவன்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்."
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)                                                                                                                                    நூல் : புஹாரி

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும்.

புத்துணர்வு தரும் வெந்தயக்களி

தேவையானவை: அரிசி  ஒரு கப், உளுத்தம் பருப்பு, வெந்தயம்  தலா கால் கப், கருப்பட்டி  ஒன்றரை கப், நல்லெண்ணெய்  100 மி.லி.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

ஹதீஸ்-உழைப்பு பற்றி இஸ்லாம்

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

உலகின் முதல் நடமாடும் பள்ளிவாசல்....(mobile masjid)

உலகின் முதல் நடமாடும் பள்ளிவாசல்....(mobile masjid)
சௌதி தலைநகர் ரியாத்தில் உள்ள பூங்காவில் இந்த பள்ளியை காணலாம்..
சிறப்பு அதனுள் தொழுகை விரிப்பு...ஒளு  செய்ய  தண்ணீர்..அதான் சொல்வதற்கான ஒலி பெருக்கி..
மாஷா அல்லாஹ்

Tuesday, October 21, 2014

வெள்ளரி

வெள்ளரியின் மருத்துவ குணங்கள்:-
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது
அவசியம்.

ஷரீஅத் என்றால் என்ன? தரீக்கத் என்றால் என்ன?

ஷரீஅத் என்றால் என்ன? தரீக்கத் என்றால் என்ன?
********************************************************************
ஷரீஅத் - இஸ்லாமிய சட்ட கல்லூரிகள் (மத்ஹப்கள்)
1. ஹனபி 2. மாலிகி 3. ஷாபிஈ 4. ஹன்பலி
.
 தரீக்கத் - இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகள் (தரீக்காக்கள்)
காதிரி, ரிபாயி, நக்ஷ்பந்தி, ஜிஸ்தி, ஷாதுலி இன்னும் பல..
.
இந்த இரண்டு கல்விகளையும் கற்று முத்தி பெற்றவர்களையே ஸுபியாக்கள் அல்லது அவ்லியாக்கள் என்று கூறுவார்கள்.
.
ஷரீஅத் என்பது மனிதனின் உடல் என்றால்
தரீக்கத் என்பது மனிதனின் உயிர்
.
உடலை சுத்தப்படுத்த ஷரீஅத் (மத்ஹப் சட்டங்கள்) தேவை.
உயிரை (உள்ளத்தை) சுத்தப்படுத்த தரீக்கத் உடைய ஆன்மீக கல்வி தேவை.
.
ஷரீஅத்துடைய கல்வியை கற்று கொடுப்பவர்களுக்கு மௌலவிமார்கள் என்று அழைக்கப்படும்.
தரீக்கத்துடைய கல்வியை கற்று கொடுப்பவர்களுக்கு ஷெய்குமார்கள் என்று அழைக்கப்படும்.
.
இந்த இரண்டு கல்விகளையும் எவன் ஒருவன் சரியாக கற்கிறானோ அவன் மனித புனிதனாக மாறுவான்.

இயற்கை மருத்துவம்,

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்,,,,,,,,,,,

என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

பொன்மொழிகள்,

* மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தங்கள் மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது!
* வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை, நேர்மை, அடக்கம்,அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை!

பொது அறிவு,

1. நியூஸிலாந்தில் உள்ள கியா என்னும் பறவைக்கு பிடித்த உணவு - காரின் கண்ணாடியை சுற்றீ இருக்கும் ரப்பர் பீடுகள் தான்.
2. நம் உடம்பு ஒரு நொடிக்கு ஒன்னரை கோடி சிவப்பு அனுக்களை உற்பத்தி செய்யவும் அழிக்கவும் செய்கிறது - இதை எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் செய்ய இயலாத அதிசயம்.

முகப்பரு

முகப்பரு நீங்க :
1. சந்தனம் or டூத் பேஸ்டை பரு மீது 10 நிமிடம் வைக்கவும் அல்லது இரவில்                           வைக்கலாம் அதிகமாக இருந்த பரு காய்ந்து குறைந்து விடும்.
2. சின்ன சீரகத்தை நன்கு அரைத்து பால் கலந்து இரவில் முகத்தில் பூசவும்.

நுங்குவின் மருத்துவ குணங்கள்

வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பலவித பானங்களை அருந்துகிறோம். தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற விதவிதமான பழவகைகளை சாப்பிடுகிறோம். ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தது, நுங்கு. உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் இது முதலிடத்தை வகிக்கிறது.

Monday, October 20, 2014

பொன்மொழிகள்,


  • பல தன்மைகள் வாய்ந்த நபர்களின் தொடர்பை விட, சில நல்ல புத்தகங்களின் உறவு நன்மையை அளிக்கும்.
  • குழந்தைகளை வளர்க்கும்போது தான், உன் பெற்றோரின் அருமையை உன்னால் உணர முடியும்.

ஹதீஸ்-ஸலாம் கூறுதல்

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ"
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்."
"இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து (ஸலாம் கூறி) கை குலுக்கினால் அவர்கள் பிரியும் முன் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது."                                                                                                    (நூல்: அபுதாவூத்)