Tuesday, May 17, 2016

குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும் - மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம்.

Sunday, May 15, 2016

ஷஃபான் மாதத்தின் நோன்பு

* ரமலான் மாத நோன்பைத்தவிர மற்ற மாதங்களில் முழுமையாக நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததாக நான் கண்டதில்லை. மேலும் ஷஃபான் மாதத்தைவிட மற்ற மாதங்களில் அதிகமாக அவர்கள் நோன்பு வைத்ததாகவும் நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
* நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து ஓ! இன்னவரே! ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தில் நீர் நோன்பு வைத்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்று பதில் கூறினார். இதைக் கேட்ட நபியவர்கள் நீ வைக்காது இருந்தால் இரண்டு நோன்பு வைத்துக் கொள்ளும் என்று பதில் சொன்னார்கள். (அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹூஸைன் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)