Saturday, November 15, 2014

குளிப்பு எப்போது கடமையாகும்?

இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது மனிதனுடைய வாழ்க்கையுடன் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் வழி காட்டுகிறது. அந்த அடிப்படையில் குளிப்பது பற்றிய பூரண விளக்கத்தையும் இஸ்லாம் தந்துள்ளது. எனவே இத்தொடரில் குளிப்பின் சட்டங்கள் பற்றி விரிவாக நோக்கலாம்.

Thursday, November 13, 2014

இகாமத்

தொழுகைக்கான இகாமத்: -
”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்-
ஹய்ய அலஸ்ஸலாஹ்
ஹய்ய அலல்ஃபலாஹ்
கத்காமத்திஸ்ஸலாஹ் –
கத்காமத்திஸ்ஸலாஹ்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாஇலாஹ இல்லல்லாஹ்"

இகாமத்துக்கான மறுமொழி: -
அபூ உமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவித்துள்ளார்கள். பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ”இகாமத்” சொல்லத் துவங்கி, ”கத்காமத்திஸ்ஸலாஹ்” என்று அவர் கூறும்போது, நபி صلى الله عليه وسلم அவர்கள் (அதற்கு பதில் சொல்லும் வகையில்), ”அகாமஹல்லாஹுவ அதாமஹா” (அல்லாஹ் அதை நிலைநிறுத்தி, நேமமாக்கியருள்வானாக!) என்று கூறினார்கள். ஏனைய இகாமத்துடைய வாசகங்களுக்கு (மேலே) உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் அறிவிப்பில் உள்ளவாறு பாங்கின் வாசகங்களுக்கு பதில் சொன்னது போல் பதில் சொன்னார்கள். நூல் : அபூதாவுத்

பாங்கு

பாங்கு அல்லது அதான் என்பது முஸ்லீம்களின் தொழுகைக்கான அழைப்பு ஆகும். ஒரு நாளில் ஐந்து முறை அதான் விடுக்கப்படும். பாங்கு என்பது பாரசீகச் சொல்லாகும். அதான் [அரபி:أذان] என்பது அரபிச் சொல்லாகும்.

தொழுகையின் சிறப்புகள்

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்: (பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கூட்டுத் தொழுகையின் சிறப்பு: ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

ஐ வேளை தொழுகை

ஐ வேளை தொழுகை
தொழுகை என்பது முஸ்லிம்களின் ஐந்து முக்கிய கடமைகளுள் முதன்மையான ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.

Wednesday, November 12, 2014

பொது அறிவு,

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

இனிப்பான லாபம் கொடுக்கும் 'ஸ்வீட் கார்ன்’

ஒரு காலைவேளையில் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த சேகரைச் சந்தித்தோம். ''நான் ஒண்ணரை வயசு குழந்தையா இருந்தப்பவே அப்பா இறந்துட்டார். அம்மாதான், வெண்டைக்காய், கத்திரிக்காய்னு விவசாயம் பண்ணி, என்னை வளர்த்தாங்க.

Tuesday, November 11, 2014

நவம்பர் 11 தேசிய கல்வி நாள்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள்தான் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானா

பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப்படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.

ஹதீஸ்-இரவுத்தொழுகை

ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (இரவுத்) தொழுகையாக இருந்தது.      
உங்களில் ஒருவர் சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தாமல் ஐம்பது வசனங்கள்
ஓதக் கூடிய நேரம் அத்தொழுகையில் ஒரு சஜ்தாச் செய்வார்கள்.

ஹதீஸ்

அபூ மூஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்...!
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு
வரச் சொல்லி அதில் தங்கள் இரண்டு கைகளையும், தங்கள் முகத்தையும் கழுவினார்கள்.
அதில் தண்ணீரைத் துப்பினார்கள். பின்னர் என்னிடமும், பிலால் ரழியல்லாஹுஅன்ஹு
அவர்களிடமும் தந்து இதிலிருந்து நீங்கள் இருவரும் குடியுங்கள்...., உங்களின் முகத்திலும், கழுத்திலும் ஊற்றிக் கொள்ளுங்கள்...!  என்று இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.!                                                                                                                                          புகாரீ-( 188 )                    
யா அல்லாஹ்...!
வஹ்ஹாபிசத்தின் தீங்குகளை விட்டும் எம்மையும், எமது குடும்பத்தார் அனைவரையும் பாதுகாத்தருள்வாயாக...!