அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
கிருஸ்தவர்கள் கேட்கிறார்கள்:-
இந்தப் பூமியில் இறைத்தூதராக தேர்த்தெடுக்கப்பட்ட எந்த ஒருவரேனும் இறைவனைத் தன் "பிதா" என்றும், தன்னை இறைவனின் "சொந்த மகன்" என்றும் உரிமை பாராட்டியது உண்டா...?????
(இயேசுவைத் தவிர)
இந்த கேள்வியை பதிவிட்டு அவர்களாகவே பெருமையும் பாராட்டிக் கொள்கிறார்கள். அது எப்படிப் பட்ட பெறுமை எனில், ஆதாம் முதற்கொண்டு இயேசு வரை உலகில் தோன்றிய எந்த இறைத்தூதருமே இறைவனைத் தன் "பிதா" (வாப்பா) என்று சொல்லவும் இல்லையாம்...! எந்த இறைத்தூதருமே தன்னை இறைவனின் "சொந்த மகன்" என்று உரிமை கொண்டாடவும் இல்லையாம்.! இறைவனை தன்னுடைய "பிதா" (அப்பா) என்று சொன்னது இயேசு மட்டுமே தானாம், தன்னை இறைவனின் "சொந்த மகன்"
என்றும் உரிமை கொண்டாடியதும் இயேசு மட்டுமே தானாம்!!!!!