Saturday, June 23, 2018

முகங்குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசப்படும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!!
அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளியுள்ளார்கள். 'கியாமத் நாளில் முதலில் தீர்ப்பு அளிக்கப்படுபவர் ஒரு ஷஹீத் (மார்க்கப் போரில் இறந்தவர்)  ஆவார். அல்லாஹ் அவரை அழைத்து உலகில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியங்களைச் சொல்லிக் காட்டுவான்.அவைகளை அவர் ஒப்புக் கொள்வார். அவைகளைக் கொண்டு என்ன அமல் செய்தாய்?' என்று கேட்கப்படும்.

Tuesday, June 19, 2018

வரலாற்றின் வெளிச்சத்தில் மன்னர் ஒளரங்கசீப்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்..தொழுகை நேரம் நெருங்கி விட்டது ..மன்னர் அவர்களும் வந்து விட்டார்..இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம் முறையிடுகின்றார்..மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும் யாரும் உதவிப் புரியவில்லை ..நான் பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில் சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன்..நீங்கள் உதவி செய்து நல்வழிக் காட்டுங்கள் ..என வேண்டுகிறார்..

Sunday, June 17, 2018

இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!!
இதை வரலாறு அறிந்தவர்கள் ,இந்த வரலாற்று உண்மையை மறுக்கமுடியாது!
இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே..
ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
வரலாற்றை அறிவோம்…
.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.