Friday, December 16, 2016

இஸ்லாமிய நோக்கில் "ஸுஹ்த் " என அழைக்கப் படும் துறவு நிலையின் நோக்கம் முற்றிலும் உலக விவகாரங்களில் இருந்து ஒதுங்கி , வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு விலகி நிற்பதல்ல ; தஸவ்வுப் என்பது செயலின்மை, அசைவற்றநிலை , உழைப்பின்மை ஆகியவற்றைப் போதிக்கும் துறவறக் கோட்பாடுமல்ல ; தஸவ்வுப் எனும் ஆத்மீகக் கோட்பாட்டின் இலட்சியம், உள்ளத்தின் கீழான உணர்ச்சிகளுக்கேதிராக போராடி அதனை அடிமைப்படுத்தி இறை நேசம் , உலக வாழ்க்கையைத் துச்சமாக மதிக்கும் மனநிலை, வீராவேசத்தோடு போராடும் உடல் வலிமை, மனப்பக்குவம் இஸ்லாமிய தஹ்வா பணியில் உற்சாகத்தோடு ஈடுபடும் மனோநிலை போன்றவற்றை மனிதருள் ஏற்படுத்தி அவர்களை பூரண மனிதனாக மாற்றுவதேயாகும் . இஸ்லாமிய வரலாற்றில் எழுந்த மகத்தான ஜிஹாத் இயக்கங்கள் (தற்போது " ஜிஹாத்" எனும் போர்வையில் இஸ்லாமிய கோட்பாடை மீறும் இயக்கங்கள் போலல்லாத ) எல்லாம் அவற்றின் பின்னணியில் ஓர் ஆத்ம ஞானியின் ஆளுமையின் தூன்டுதலை பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது. முஸ்லிம் உம்மத்தின் எதிர்காலம் அந்தரத்தில் ஊசலாடிய காலகட்டத்தில் ஆத்ம ஞானிகளே புத்துயிர் அளித்தனர். இஸ்லாமிய ஆட்சியை ஆட்டங்கானச் செய்த மங்கோலிய தத்தாரிய படை எடுப்பைத் தொடர்ந்து அவர்களின் தலைவனை ஆத்மீக இஸ்லாம் அரவணைத்த பின்பு முழு மங்கோலிய இனமே இஸ்லாத்தைத் தழுவியது சூபி ஞானிகளாலே என்பது இஸ்லாமிய வரலாறு கூறும் உண்மை ! இதுபோன்று ஆரம்ப காலத்தில் பைசாந்திரிய பேரரசுக்கேதிரான போராட்டம், ஆப்கானிய முஜாகிதீன்களின் போராட்டம், சோவியத் ரஷ்யாவின் கம்யுனிச நாத்திகவாதத்துக்கேதிரான போராட்டங்களில் சூபி ஞானிகளின் பங்களிப்பு மிக மகத்தானது. .

இஸ்லாமிய நோக்கில் "ஸுஹ்த் " என அழைக்கப் படும் துறவு நிலையின் நோக்கம் முற்றிலும் உலக விவகாரங்களில் இருந்து ஒதுங்கி , வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு விலகி நிற்பதல்ல ;
தஸவ்வுப் என்பது செயலின்மை, அசைவற்றநிலை , உழைப்பின்மை ஆகியவற்றைப் போதிக்கும் துறவறக் கோட்பாடுமல்ல ;

Thursday, December 15, 2016

அருமையான துஆ வரிகள்!

அருமையான துஆ வரிகள்! மாஷா அல்லாஹ்! அல்லாஹ் இவற்றை நமக்கு கபுல் செய்துத்தருவானாக ஆமீன்!
----------------------------------------------------------------------------------------------------------------------------
*யா அல்லாஹ்!*
நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே!
தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே!
மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே!
கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே!

நியூஸ் ரீல் காட்டறாங்களாம்!’’

காமராஜர் முதல்வராக இருந்தபோது ஓர் அதிகாரி அவரிடம், 'குந்தா அணைக்கட்டை மலையைக் குடைந்து அருமையாகக் கட்டியிருக்கீங்க! இதை நமது வாயால் சொல்வதை விட, திரைப்படமா எடுத்துக் காண்பித்தால் பாமர மக்களுக்குக்கூட நன்றாகப் புரியும்!' என்றார்
.
அதற்கு காமராஜர் 'சரி, அதற்கு எவ்வளவு செலவாகும்?' என்று கேட்டார்.
அந்த அதிகாரி, 'ஏறக்குறைய மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகும்' என்றார்.
காமராஜரோ, 'அடப்பாவிகளா...மூன்று லட்சமா? இந்த மூன்று லட்சம் ரூபாய் இருந்தால், நான் இன்னும் பத்து ஊர்களில் பள்ளிக்கூடங்கள் கட்டி விடுவேன். புள்ளைங்க படிக்க வழியைக் காணோம், நீ நியூஸ் ரீல் காட்டி அரசாங்கம் செய்ததை எனது சாதனைனு வெளிச்சம் போட்டுக் காட்டப் பாக்குறியா...போ...போ...'என்று மறுத்து விட்டார்.

Wednesday, December 14, 2016

ஹதீஸ் - சூறாவளிக் காற்று வீசும்போது...!!!

சூறாவளிக் காற்று வீசும்போது...!!!
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது
”இறைவா இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன்.
இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும் அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்”
என்று கூறுவார்கள்.
நூல் : முஸ்லிம் 1640

Tuesday, December 13, 2016

காமராஜர் ஒரு சகாப்தம்

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.
உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.
காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.