Saturday, March 24, 2018

அருமையான துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே!!!
ஒருமுறை முழுவதும் படித்துவிட்டு ஆமீன் சொல்லங்கள்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
சுப்ஹனால்லாஹ்...  சுப்ஹனால்லாஹ்...  சுப்ஹனால்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்...  அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் அக்பர்...  அல்லாஹ் அக்பர்...  அல்லாஹ் அக்பர்...

Thursday, March 22, 2018

இறையச்சம் நிறைந்த வீரப்பெண்மணி உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா...!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
                                                                எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் புரிந்து ஷஹீத் எனும் நற்பேற்றை அடைபவர்களுக்கான அளப்பெரும் பேறுகளைக் குறித்து, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அதிகமதிகம் ஆர்வமூட்டிக் கூறியிருக்கின்றார்கள்...!!
ஆதலால், நபித்தோழர்கள் அநேகம் பேர் அன்றாடத் தொழுகையின் பின்னர் பிரார்த்தனையாக கேட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்....!!
இன்னும் சிலரோ தாம் ஷஹீதாக மரணிக்க துஆ செய்யுமாறு அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டுப் பெற்றிருக்கின்றார்கள்....!!

வரலாற்றில் மிக மகத்தான ஜனாஸா!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
இது ஒரு உண்மைச் சம்பவம்!
சுல்தான் முஹம்மத் அல் கானூனி ஒரு நாள் இரவு திடீரென தூக்கத்தில் இருந்து விழித்து எழும்பினார். தான் கண்ட கனவினால் பதற்றம் அடைந்தவராக தனக்கு நெருக்கமான காவலாளியை அழைத்து குதிரையை தயார்படுத்தும் படி வேண்டினார்.
குடி மக்களின் நிலைமைகளை அறிந்து வருவதற்கு நாம் வேறு தோற்றத்தில் இன்று செல்ல வேண்டும் என வேண்டினார். மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக மாறு வேடத்தில் செல்வது மன்னரின் வழக்கமான இருந்தது .

ரஜபின் பிறையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயலும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
இம்முழு மாதத்தைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக உறுதியான ஆதாரத்துடன் அறிய வருவது என்னவென்றால் ரஜப் மாதத்தின் பிறையை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டவுடன் பின்வரும் துவாவை ஓதுவார்கள். '

Wednesday, March 21, 2018

அல்லாஹ் எங்கள் மீது திருப்தியுடன் இருக்கிறானா அல்லது அதிருப்தியுடன் இருக்கிறானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
‎وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (139ال عمران)
“நீங்கள் முஃமீன்களாக இருந்தால் நீங்கள்தான் உன்னதமானவர்களாய் இருப்பீர்கள்”

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ் எங்கள் மீது திருப்தியுடன் இருக்கிறானா அல்லது அதிருப்தியுடன் இருக்கிறானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது என்று, அல்லாஹ்விடம் கேட்டு எங்களிடம் கூறுங்கள். அதன்படி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்; அதற்கு அல்லாஹ் கூறினான், நான் மக்கள் மீது திருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம், நல்ல ஆட்சியாளர்களை நான் அமர்த்துவேன். நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம் அவர்களைக் கெட்ட ஆட்சியாளர்களின் மூலம் சோதிப்பேன் என அல்லாஹ் கூறினான்.

"நான் உடலைக் காட்ட மாட்டேன்; அது பாடி பில்டிங்கில் கட்டாயமுமில்லை!" 'கேரளாவின் பலமான பெண்' விருது வென்ற மஜிஸியா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
''தலையில் ஹிஜாப் (முஸ்லீம் பெண்கள் தலையைச் சுற்றிப் போடுகிற முக்காடு) போடுவது, முஸ்லிம் பெண்கள் சாதிப்பதற்கு எந்த வகையிலும் தடையாக இல்லை'' என்கிற மஜிஸியா பானுவின் வார்த்தைகளில் ஒரு கோடி நெருப்புத் துண்டங்கள். கேரளாவைச் சார்ந்த பளு தூக்கும் வீராங்கனை மற்றும் பாடி பில்டிங் வீராங்கனையான மஜிஸியா பானுவின் வார்த்தைகளில் ஏன் இத்தனை ரெளத்ரம்? அவரிடமே பேசினோம். 

குர்ஆன் ஓதும் போட்டியில் வெற்றியீட்டிய இந்து மத மாணவி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
-----------------------------------------------------------------------------------
ஆந்திர பிரதேசம் விஜய வாடாவில் ஒரு இஸ்லாமிய தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் கே.ஸ்வர்ண லஹரி. 
.
அந்த பள்ளியில் குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது. அதில் தானும் கலந்து கொள்வதாக ஆசிரியைகளிடம் சொன்னாள் ஸ்வர்ண லஹரி. மகிழ்ந்த ஆசிரியைகள் இந்த மாணவிக்கு குர்ஆனை ஓத பயிற்சி கொடுத்தனர்.