Saturday, July 29, 2017

நின்றுகொண்டு நீர் அருந்த தடை

1400 வருடம் முன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னது இன்று ஆய்வு சொல்லும் அறிவியல் பூர்வ உண்மை.!!!
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.  நூல் : முஸ்லிம்.4117
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். நூல் : முஸ்லிம் 4118

துஆ செய்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 
கண்மணி நாயகம் நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா? என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல் கப்ரில் மையித் தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து துஆவை பிராத்தனையை எதிர்பார்க்கின்றது.

வெள்ளிக்கிழமை சிறப்பு

உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன் விசாரணைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில் எடுத்துக்காட்டப்படும், நபிமார்கள் உடலை பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும் அல்லாஹ் ஹராமாக்கினான்”(ஆதாரம்: அஹ்மத்) 

Friday, July 28, 2017

இஸ்லாமிய கேள்வி பதில்

1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1) கூற வேண்டும்.
2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது
3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.
4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது
5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது.

துன்பம் நேரும்போது ஓதும் துஆ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது,
'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள். 
(பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.

அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ்(ரலி)                                                         நூல் : ஸஹீஹ் புகாரி.

Wednesday, July 26, 2017

எதிர்பாராத கஷ்டம், நோய், சோதனையில் போது அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்பு கேட்க துஆ...

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”  (அல்குர்ஆன் : 2:286)