Saturday, January 10, 2015

கணினி SHUT DOWN ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா..?

கணினியை shut down செய்யும்போது சில நேரங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதே நேரத்தில் பல்வேறான செயல்கள் Background processes இல் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து, பின்னர் தான் கணினி shut down ஆகும் .

ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள்

ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள்

எண்
ஜுஸ்வு எண்
ஜுஸ்வுகளின் பெயர்கள்
ஸூராக்களின் பெயர்கள்
வசன எண்
1
9
காலல் மலவு
ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
2


ஸூரத்துத் ரஃது (இடி)
3


ஸூரத்துந் நஹ்ல் (தேனி)
4


பனீ இஸ்ராயீல்(இஸ்ராயீலின் சந்ததிகள்)
5


ஸூரத்து மர்யம்
6


ஸூரத்துல் ஹஜ்
7


ஸூரத்துல் ஹஜ்
8


ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)
9


ஸூரத்துந் றம்லி (எறும்புகள்)
27:26
10


ஸூரத்துஸ் ஸஜ்தா
11


ஸூரத்து ஸாத்
12
25
இலைஹி யுறத்து
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா
13
27
கால ஃபமா கத்புகும்
ஸூரத்துந் நஜ்ம் (நட்சத்திரம்)
14
30
அம்ம
ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)
15
30
அம்ம
ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)

Friday, January 9, 2015

ஹதீஸ்-கண்டெடுக்கப்பட்ட பொருள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வழிகேட்டிலேயே உள்ளார். இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் 3556

ஹதீஸ்-நரகவாசிகளில் அதிகம் பேராக பெண்கள்

132. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுகையில்), ”பெண்கள் சமுதாயமே! தானதர்மங்கள் செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் கண்டேன்” என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, ”நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீங்கள் அதிகமாகச் சாபம் கொடுக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும், அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் காணவில்லையே” என்று பதிலளித்தார்கள். அப்பெண்மணி, ”அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகராகிறது. இதுதான் (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழாமல் இருந்துகொண்டிருக்கிறாள்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்கிறாள். இதுதான் (அவளுடைய) மார்க்கத்திலுள்ள குறைபாடு” என்று கூறினார்கள். மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

ஹதீஸ்-மறுமைநாள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 
(ஒரு மனிதரிடம்), ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்‘ என்று கூறினார்கள். அவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?‘ என்று கேட்டார். அதற்கு, “(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்‘ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6496

ஹதீஸ்- சில உறவினர்கள்

ஒரு மனிதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்:
அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகின்றேன். அவர்கள் என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் மோசமாக நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுடன் பொறுமை யோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கிறார்கள்.''அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால், அது அவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்றதாகும். அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான், நீர் இதே பண்பில் நிலைத்திருக்கும் வரை.'' (முஸ்லிம்)

கணவனின் திருபொருத்தம் பெறாத பெண்ணின் கப்ரு நிலை என்ன ?

மஸ்ஜிதுன் நபவீயில் ஒரு பெண்ணின் ஜனாஸா வந்து விட்டது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.

சட்டத்தை மதித்த காமராஜர்

தமிழக முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஹதீஸ்-எல்லாவிதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பு பெற

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
“குல் ஹுவல்லாஹு அஹது மற்றும் முவத்ததைன் சூராக்களை மாலைப் பொழுதை அடையும்போதும், காலையில் எழும்போதும் மூன்று முறை ஓதுங்கள். அது உங்களை எல்லாவிதமான தீங்குகளிலி ருந்தும் பாதுகாக்கும்.” (திர்மிதி)

Thursday, January 8, 2015

ஹதீஸ்-நாய்க்கு தண்ணீர் கொடுத்தால் சொர்க்கமா ?

(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்: புஹாரி :3467
"While a dog was going round a well and was about to die of thirst, an Israeli prostitute saw it and took off her SHOE and watered it. So Allah forgave her because of that good deed."

ஹதீஸ்-பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்று

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.
அறிவிப்பாளர்: உமர் (ரலீ)   நூல்: அபூதாவூத் 1412.

Wednesday, January 7, 2015

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

யாருக்காக அழுதான்?

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையுமுடைய இறைவனைத் தொழும் புனித ஆலயம் அது. அங்கே ஒரு அதிகாலை நேரம், தொழுகைக்கான அழைப்பொலி இப்போதுதான் முடிகிறது. அந்த வெள்ளுடை மனிதர் பள்ளிவாசலுக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கிறார். அவரை அறிந்தோருக்குத் தெரியும் அவர் வீரத்தின் விளை நிலமென்பது, ஆனால் அவரோ ஒரு அடிமையின் பண்புடன் அந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைகிறார்!.

ஹதீஸ்-துக்கம் கடைப்பிடிக்க

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்து போன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர!
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  ஸஹீஹ் முஸ்லிம் 2982.

Tuesday, January 6, 2015

.ஹதீஸ்-உளுச் செய்து விட்டு உறங்குதல்

 “நீ படுக்கைக்குச் சென்றால் தொழுகைக்கு உளுச் செய்வதுபோல்
உளுச் செய்துகொள். பிறகு வலது புறமாகப் படுத்துக்கொள் “ என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் {ரலி}, புகாரி - 247, முஸ்லிம் - 2710

எதிர்பார்ப்பும் அச்சமும்

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்: அண்ணல் நபிகளார் (ஸல்) கூறினார்கள்:
‘அல்லாஹ்விடம் இருக்கிற வேதனையை இறைநம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அவர்களில் எவராலும் சுவனத்தைக் குறித்து ஆசைப்பட இயலாது. அல்லாஹ்விடம் இருக்கிற கருணையைப் பற்றி இறைமறுப்பாளர்களுக்குத் தெரிந்து விடுமேயானால் அவர்களில் எவருமே சுவனத்தைக் குறித்து நிராசை அடைய மாட்டார்கள்’.நூல் : முஸ்லிம் (5316)

Indian Toll Free Numbers - தெரிந்துகொள்வோம்

Cell Phone Toll Free Numbers
Nokia – 3030 3838
BenQ – 1600 22 08 08
Bird CellPhones – 1600 11 7700
Motorola MotoAssist – 1600 11 1211
Sony Ericsson – 3901 1111

ஐந்து கலிமாக்களும் அதன் பொருளும்…

கலிமா என்பது இறைவனை தவிர வேறு எதுவும் இல்லை என்பதும் முஹம்மது நபி இறைவனின் தூதராக இருக்கிறார்கள் என்பதை நம்புவதாகும். இதை ஒருவர் நம்பி சாட்சி பகர்ந்தால் மட்டுமே முஸ்லீம் ஆவார்.

சுன்னத்தான நோன்புகள்

சுன்னத்தான நோன்புகள்-ஆஷூரா நோன்பு, ஆறு நோன்புகள், அரஃபா நாள் நோன்பு, வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது, மாதம் மூன்று நோன்புகள்

Monday, January 5, 2015

ஹதீஸ்-முன்கர்&நகீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு!
"மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய
இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் முன்கர் மற்றொருவர் நகீர். இந்த
மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்?
என்று அவ்விருவரும் கேட்பர். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார்.

கூட்டு துஆ கூடுமா.???

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல் படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கிறேன்

தஸ்பீஹ் தொழுகை:

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருமுறை அல்லது வருடத்தில் ஒரு முறையாவது இதைத் தொழுவது சுன்னத்தாகும்.

Sunday, January 4, 2015

ஹதீஸ்-ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாராவது ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் தம் (கண்ணைவிட்டு) அந்த ஜனாஸா மறையும்வரை எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், (முஸ்லிமல்லாத) யூதரின் பிரேதமாயிற்றே?" இது என்று கூறப்பட்டது. 
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது ஓர் (மனித) உயிரில்லையா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்"                                   
1752 முஸ்லிம்...

அரிசிகளில் சிலவகை இதோ உங்களுக்காக !!!

கருங்குருவை:
விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா:
இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்

ஹதீஸ்-அர்ஷின் நிழல் யாருக்கு???

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்,