Saturday, August 2, 2014

பொது அறிவு-4

* கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
* ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.
* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல்          பெற்றது.
* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே                            மிகப்பெரிய விதையாகும்.
* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும்                ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.

காமராஜர்

கணக்குன்னா.. கணக்குதான்...
*******************************************
காங்கிரஸ் பொன்விழா 1935, டிசம்பர் 28-ம் நாள் விருதுநகரில் காமராஜர் விருப்பப்படி நடத்தப்பட்டது. விழா முடிந்ததும் வரவு, செலவு கணக்கைச் சரிபார்த்தனர்.
வரவுக்கும் செலவுக்கும் 67 ரூபாய் 3 அணா வித்தியாசம் வந்தது.
பொருளாளர் பொறுப்பில் இருந்த தனது ஆரூயிர் நண்பர் முருக தனுஷ்கோடியிடம் காமராஜர் கணக்கு கேட்டார். எப்படியோ, செய்த செலவை எழுத மறந்து விட்டேன். என் மேல் நம்பிக்கை வைத்து வித்தியாசத் தொகையை தள்ளுபடி செய்து விடுங்கள் என்று முருக தனுஷ்கோடி வேண்டி கேட்டுக்கொண்டார்.
ஆனால் கணக்குன்னா கணக்குதான். இது நம்ம பணம் இல்லை என்று கூறி சமரசம் ஆக காமராஜர் மறுத்து விட்டார்.
பொதுப் பணத்தைப் பொறுப்பாகக் கையாள வேண்டும். அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன். கணக்கைச் சரியாக எழுதிக் கொடு, இல்லை என்றால் 67 ரூபாய் 3 அணாவைக் கட்டி விட வேண்டும் என்று காமராஜர் கட்டளையிட்டார்.
எதற்குச் செலவு செய்தோம் என்பதை மறந்து விட்ட தனுஷ்கோடி அந்த மறதிக்குத் தண்டனையாக கணக்கில் குறைந்த பணத்தை செலுத்தினார்.
இப்போது கூட காமராஜர் நினைவு இல்லத்திற்குச் சென்றால் மாடிக்கு செல்லும் பகுதி அருகே அவர் கைப்பட வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு தந்தது. நோட்டுப் புத்தகம் வாங்கியது என்று அணா, பைசா, விவரத்துடன் கணக்கு எழுதி வைத்திருந்ததை நாம் காணலாம்.

எலுமிச்சை

1. நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.
2. புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது.
3, எலுமிச்சை பழத்தில் உள்ள "சிட்ரிக் அமிலம்" நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்கு பித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.
4. ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது.
5. உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும்.
6. இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம்.
7. எலுமிச்சை கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும். இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும்.
8. மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.
9. சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுதூள் அல்லது பச்சை மிளகாய் கலந்து சாலட் ஆக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த சாலட்டை நீரிழிவு நோயாளிகள் தினமும் 1 கப் அளவிற்கு சாப்பிட்டு வருவது உடலுக்கு மிக நல்லது.
10. நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால், ரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும்.
11. கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும்.
12. எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது

பொது அறிவு-3 [கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்]

கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்

* ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் - ஃபிராங்க்விட்டில்
* பார்வையற்றவருக்கான எழுத்துமுறையை கண்டறிந்தர் - லூயி பிரெய்லி
* தொலைக்காட்சி பெட்டியை கண்டு பிடித்தவர் - J.L பெயர்டு
* அம்மை தடுப்பூசியை கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்
* போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் - டாக்டர். ஜோன்ஸ் சால்க்
* டைனமைட்யை கண்டு பிடித்தவர் - ஆல்பர்ட் நோபல்
* இதயமாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில் செய்தவர் - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்
* குளோரோஃபார்ம் கண்டறிந்தவர் - ஹாரிஸன்
* இன்சுலின் கண்டறிந்தவர் - பேண்டிங்
* வெறிநாய்க்கடி மருந்தை கண்டறிந்தவர் - லூயி பாயஸ்டியர்
* எலக்ட்ரோ கார்டியோகிராமை கண்டறிந்தவர் - எயின் தோவன்
* பாக்டீரியாவை கண்டறிந்தவர் - லீவன் ஹூக்
* புரோட்டினை கண்டறிந்தவர் - ரூதர் போர்டு
* எக்ஸ்-ரே முறையை கண்டு பிடித்தவர் - ராண்ட்ஜன்

இயற்கை மருத்துவம்

வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
உணவே மருந்து
பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதா ரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணராமல் எப்படி தூக்கி ஏறிகிறோமோ, அதைப் போல் வாசனைப் பொருட்களின் மகத்துவத்தை அறியா மல் நாம் அதனை கறிவேப்பிலை போலவே பயன்படுத்தி வருகிறோம்.
விவரம் அறிந்தவர்களைக் கேட்டால் அவற்றில் உள்ள பல விஷயங்கள் புரியவரும். அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப் போம்.
பெருங்காயம்
ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மன தில் நீண்ட நாட்களாக இருக்கும் “பெருங்காயம்”, பெருங்காயத்தால் ஆறிவிடும்.
ஏலக்காய்
ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட் டால் நல்ல பலன் தெரியும்.
ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவிரகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர் கள் எச்சரிக்கின்றனர்.
மிளகு
மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் உள்ளது. பண்டைய கிரேக்கர்கள், ரோமனியர்கள் கூட உணவில் மிளகு சேர்த்து வந்தனர். அரேபியர்கள் பல்வேறு விதங்களில் மிளகை உட்கொண்டனர். நான்கைந்து மிளகு களைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்யத்துக்கு முன்பு சில மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
லவங்கம்
லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப் படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர் 1642-ம் ஆண்டின் சுவிடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லவங்கத் தைப் பற்றி எழுதியிருந்தார்.
பூண்டு
பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. அதன் மகத்துவத்தை எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமனியர்கள், சீனா மற்றும் ஜப்பானியர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சாப்பிட்டரத எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப் படு கிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி
இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக் கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள் ளதே அதற்கு சான்று.
சாதிக்காய்
சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பே இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.
ஓமம்
உணர்ச்சியைத் தூண்டும் ஓமத்தின் ஆற் றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்துள்ளனர். இதன் விதைகள் “தைமால்” என் னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத் துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங் கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை (ஓம விதைக்கு சம அளவில்) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்து டன் கலக்கி, நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கல வையை பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய முன் சாப்பிடலாம்.
வெங்காயம், முருங்கை, பாதாம்
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய் கறிகள், தின்பண்டங்களில் கூட ஆண்மையை அதி கரிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அமுக்கராகிழங்கை செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.
இது எல்லாம் கடையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும்.
நன்றிகடலூர் அரங்கநாதன். . . .

பொன்மொழிகள்-12

• நாடு நலம் பெற வீட்டுக்கோர் புத்தக சாலை வேண்டும் - அண்ணா.
• உலகில் ஒரு துண்டு ரொட்டிக்காக ஏங்குபவர் பலர். ஆனால் ஒரு சிறிது அன்புக்காக            ஏங்குவோர் மிகப்பலர் - அன்னை தெரசா.
• ஒவ்வொரு ஒளியுடனும் நிழலும் சேர்ந்துதான் இருக்கிறது - ஜான் ரே.
• இறிவற்றவனின் இதயம் அவன் வாயில் இருக்கிறது. அறிஞனின் வாய் அவனது                இதயத்தில் இருக்கிறது - பெஞ்சமின் பிராங்ளின்.
• விவேகத்துடன் செயல்படும் வீரமே வெற்றி பெறுகிறது - தா. அருளினி.

பொது அறிவு-2

இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு
-----------------------------------------------------------------------
* பொருளாதார திட்டமிடுதலை முதன் முதலில் கூறிய அறிஞர் - விஸ்வேஸ்வரய்யா
* தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.
* 1934 - ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்- விஸ்வேஸ்வரய்யா.
* 1944 - ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக 8 முன்னணி தொழில் அதிபர்களால் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.
* 1945 - காந்திய திட்டம் - ஸ்ரீமன் நாராயணன்
* 1950 - மக்கள் திட்டம் - M.N. ராய்
தேசிய திட்டக் குழு:
* தேசிய திட்டக்குழு மார்ச் 15, 1950 இல் தொடங்கப்பட்டது.
* திட்டக் குழுவின் முதல் தலைவர் - ஜவஹர்லால் நேரு.
* திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் - குல்சாரிலால் நந்தா.
* திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
* திட்டகுழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு.
திட்டக் குழுவின் நோக்கம்:
* நாட்டின் பொருளாதாரம் மூலதனம் மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்.
* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்.
* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்
* விவசாயம், தொழில்துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.
* சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.
தேசிய வளர்ச்சிக் குழு:
* தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
* தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.
* தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் - மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள்.
தேசிய வளர்ச்சி குழுவின் முக்கியப் பணி:
* ஐந்தாண்டு திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம் அளித்தல்.
மாநில திட்டக் குழு:
* மாநில திட்டக்குழுவின் தலைவர் மாநில முதல்வர்.
* மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.
* ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் காண 1928 ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத் ரஷ்யா.
முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 - 1956
முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் - ஹரோல்டு தோமர்
முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.
சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டது.
வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, போக்குவரத்து தொழில் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட முக்கிய அணைகள்:
தாமோதர் அணை, ஹிராகுட் எணை, பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல் அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை போன்றவை.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 - 1961
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட முக்கிய கனரக தொழிற்சாலைகள்:
* ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக தொழிற்சாலை.
* பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக தொழிற்சாலை.
* ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக தொழிற்சாலை.
* தசம முறையில் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில் அமைக்கப்பட்டது.
மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 - 1956
* மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் - P.G.மஹல நாபிஸ்.
* மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.
* பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்
* சீனர் படையெடுப்பு, பாகிஸ்தான் போர், பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.
ஆண்டுத் திட்டம்: 1966 - 1969
* இது திட்ட விடுமுறை காலமாகும்
* இக் காலக்கட்டத்தில் புசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
* முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.
நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 - 1974
* நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை.
* பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ் அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு திட்டம் தோல்வி அடைந்தது.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: 1974 - 1979
* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் மறுபெயர் குறைந்தபட்ச தேவை திட்டம்.
* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள் வறுமையை ஒழித்தல்.
* ஒர் ஆண்டுக்கு முன்பே நிறுத்திக் கொள்ளப்பட்ட திட்டமாகும்.
* இந்திராகாந்தி அவர்களால் இருபது அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* கரிபீ ஹட்டாவோ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* ஊரக வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுழற்சி திட்டம்: 1978 - 1980
இது ஜனதா அரசு திட்டமாகும்.
* முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயம் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு அளித்தல்.
* குடிசை மற்றும் சிறுதொழிலை மேம்படுத்துதல்.குறைந்தபட்ச வருமானம் பெருபவர்களைக் குறைந்தபட்ச தேவை அடைய வைக்கவும் முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: 1980 - 1985
ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
* வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் வறுமையை அகற்றுதல்.
* குறைந்தபட்ச தேவை திட்டமும், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டமும் கொண்டுவரப்பட்டன.
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்: 1985 - 1990
ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
* உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன, தற்சார்பு ஆகியவை பெருகுதல்.
* ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்திய முக்கிய திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு திட்டத்தையும் இணைத்து ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* வேலைக்கு உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* முதன் முதலில் தனியார் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆண்டுத் திட்டம்: 1990 1992
* இந்த ஆண்டு திட்டத்தில் சமூக மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்.
* இந்த ஆண்டு திட்டத்தில் இந்தியா உலக சந்தையில் நுழையத் தொடங்கியது.
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1992 - 1997
எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:
* முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி, மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, வேகமான பொருளாதார வளர்ச்சி.
* புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது.
* பிரதம மந்திரி ரோஜ்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: 1997 - 2002
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்.
* வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் 2004க்குள் முழு கல்வி.
* ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய கொள்கை வளர்ச்சியுடன் கூடிய சமநிதி மற்றும் சமத்துவம்.
* ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய சுதந்திர பொன்விழா கொண்டாடியது. சர்வ சிக்க்ஷ அபியான் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பத்தாம் ஐந்தாண்டு திட்டம்: 2002 - 2007
பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:
* நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி.
* தலா வருமானம் பத்து ஆண்டுக்குள் இரண்டு மடங்கு அதிகரித்தல்.
* கல்வி அறிவு 75 சதவிகிதம் அதிகரித்தல்.
* 2011க்குள் மக்கள் தொகை வளர்ச்சி 16 சதவிகிதம் குறைத்தல்.
பதினோராவது ஐந்தாண்டு திட்டம்: 2007 - 2012
* மொத்த உள் நாட்டு உற்பத்தி 8 முதல் 10 சதவிகிதம் அதிகரித்தல்.
* வேளாண்மை உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம் அதிகரித்தல்.
* 70 மில்லியன் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல்
* வறுமையை 10 சதவிகிதம் குறைத்தல்.
கல்வி:
* ஆரம்ப கல்வி நிலையத்திற்கு மேல் செல்லாத குழந்தை விகிதம் 52 சதவிகிதமாக குறைத்தல்.
* 7 வடதுக்கு மேற்பட்ட கல்வி கற்கும் குழந்தை விகிதத்தை 85 சதவிகிதம் அதிகரித்தல்.
சுகாதாரம்:
* குழந்தை இறப்பு விகிதம் 28 ஆகவும்,
* பிரசவத்தின் போது இறக்கும் இறப்பை 1000க்கும் 1 எனவும் குறைத்தல்.
* மொத்த கருவுறு விகிதத்தை 2 சதவிகிதம் குறைத்தல்.
* 2009 க்குள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்குதல்.
* ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் விகிதம் 50 சதவிகிதம் குறைத்தல்.
மகளிர் மற்றும் குழந்தைகள்
* ஆண் பெண் பால்விகிதத்தை 2011 - 12க்குள் 935 ஆக உயர்த்துதல் மற்றும் 2016-17க்குள் 950 ஆக
உயர்த்துதல்.
* பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்து தருதல்.
உள்கட்டமைப்பு:
* அனைத்து கிராமங்களிலும் வசதி செய்து தருதல்.
* 500 மக்கள் தொகை உள்ள மலைவாழ் மக்களுக்கும் 1000 மக்கள் தொகை உடைய கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தருதல்.
* 2007 க்குள் அனைத்து கிராமங்களிலும் தொலைபேசி வசதி செய்து தருதல்.
* 2012 க்குள் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி செய்து தருதல்.
சுற்றுப்புறச் சூழல்:
* வனம் மற்றும் மரங்கள் 5 சதவிகிதம் அதிகரித்தல்.
* உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்தவாறு தூய்மையான காற்று வழங்குதல்.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 2012 - 2017
* பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்குத் தேசிய வளர்ச்சிக்குழு இறுதி அங்கீகாரம் அளித்த நாள் டிசம்பர் 2012.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் பொருளாதார வளர்ச்சி:
* மொத்த உள் நாட்டு வளர்ச்சி 8 சதவிகிதம்.
* விவசாயத் துறை வளர்ச்சி 4 சதவிகிதம்
* உற்பத்தி துறை வளர்ச்சி 7 சதவிகிதம்
* தொழிற்சாலை வளர்ச்சி 7.6 சதவிகிதம்
* சேவைத்துறை வளர்ச்சி 9.0 சதவிகிதம்
வறுமை மற்றும் வேலைவாய்ப்பு:
* 10 சதவிகிதம் வறுமையை ஒழித்தல்
* 50 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்குதல்
கல்வி:
* 2 மில்லியன் புதிய கல்வி இடத்தை உருவாக்குதல்
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இஸ்லாம் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தத்தைக் குறைத்தல்.
சுகாதாரம்:
* பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 25 ஆக குறைத்தல்
* பேறுகால இறப்பு 1000க்கு 1 ஆக குறைத்தல்.
உள்கட்டமைப்பு:
* விவசாய நிலத்தை 90 மில்லியனிலிருந்து 103 மில்லியனாக அதிகரித்தல்.
* அனைத்து கிராமங்களிலும் மின் வசதி செய்து தருதல்.
* அனைத்து கிராம சாலைகளை இணைத்தல்
* தொகைதொடர்பு நெருக்கத்தை 70 சதவிகிதம் அதிகரித்தல்.
சுற்றுப்புறச் :சூழல்:
* ஆண்டுக்கு 1 மில்லியன் ஹெக்டர் வனங்களை உருவாக்குதல்
* காற்று மாசுபடுதலை 20 முதல் 25 சதவிகிதம் 2020க்குள் குறைத்தல்.
சேவைத் துறை:
* 90 சதவிகித இல்லங்களுக்கு வங்கி சேவைகள் அளித்தல்.
* அனைத்து குடும்பங்களுக்கு ஆதார் அட்டை வழங்குதல்.
நன்றி ; புத்தன் சாத்தூர்

தயிர்

தயிருக்கு நல்ல குணமும் உண்டு, கெட்ட குணமும் உண்டு. எந்த ஒரு பொருளையும் முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடாது, முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதைப் பயன்படுத்துகிற ஒருவர், அவருடைய அக்னி பலம், தேசம், காலம், ரோகம் ஆகியவற்றைப் பொறுத்தே பத்தியம் சொல்ல முடியும்.
தயிர் செரிப்பதற்குச் சற்றே கடினமானது, இனிப்பும் புளிப்பும் கலந்தது. வாதத்தைத் தணிப்பது, உடலுக்குப் பலம் தருவது. நீர்ச்சத்தை இழக்க வைக்காமல் இருக்கும். விஷ ஜுரம் போன்ற நோய்களுக்கும், நாள்பட்ட ஜலதோஷ நோய்களுக்கும் இது நல்லது.
இரவு வேளைகளில் தயிர் சாப்பிடுவது தவறு என்று பாப பிரகாசம் என்ற நூல் சொல்கிறது. தயிரை இந்துப்புடனோ, மிளகுடனோ, நெய்யுடனோ, சர்க்கரையுடனோ, பச்சை பயறுடனோ, நெல்லிக்காய், தேன் போன்றவற்றுடனோ சேர்த்தே சாப்பிட வேண்டும்.
இலையுதிர் காலத்திலும், வசந்த காலத்திலும், வெயில் காலத்திலும் தயிரை அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாக்கிச் சாப்பிடக் கூடாது. பித்த நோய்கள், கப நோய்களுக்குச் சாப்பிடக் கூடாது.
வாத-கப நோய்களுக்குச் சாப்பிட்டாக வேண்டும் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்தோ அல்லது கடுகுப் பொடி சேர்த்தோ சாப்பிட வேண்டும். குளிர் காலங்களுக்கு தயிர் சிறந்தது. உடலுக்கு வலுவைத் தருவது. மழைக் காலங்களில் இதைச் சாப்பிட வேண்டும் என்று பாப பிரகாசர் சொல்கிறார்.
எத்தனையோ நிகண்டுகள் இருந்தாலும் ஸ்ரீ நரஹரி பண்டிதரின் ராஜ நிகண்டில் தயிர் பற்றி கூறப்படும் விளக்கங்கள் ஏற்புடையதாக உள்ளன.
தயிர் மனச்சோர்வை மாற்றுவது, சீரணத்தை அதிகரிப்பது. ஆனால் தோல் நோய்கள், குஷ்ட நோய்கள், பிரமேக நோய்கள் மற்றும் சில நோய்களுக்குச் சாப்பிடக் கூடாது.
நன்றி ; டாக்டர் எல்.மகாதேவன் / தி இந்து

‪‎பணம் கொட்டும் தொழில்கள்‬-1

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருத்துவச் செடி. அழகுசாதன, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. எனவே, இந்தத் திட்ட அறிக்கையில் கற்றாழை சாகுபடி மற்றும் அதிலிருந்து ஜெல் பிரித்து எடுப்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மேற் கொள்ள ஏதுவான தொழில் என்றாலும், குத்தகை நிலம் மூலமும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும்.
வணிக ரீதியாக பயிரிட்டால் நல்ல வருமானம் நிச்சயம் என்றாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் கற்றாழை சாகுபடி குறித்து யோசிப்பதில்லை. வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்கள் மற்றும் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பவர்களுடன் கூட்டுவைத்துக் கொள்ளும்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்பது உண்மை.
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்தின் ஈரத் தன்மையைப் பாதுகாத்து சருமத்துக்கு கூடுதல் பொலிவையும் தருகிறது என்பதால் இதன் ஜெல்லை ஷேவ் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. தவிர, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக் காயங்கள் ஆகியவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
கற்றாழையில் குர்குவா, சாகோட்ரின், கேப் என மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் முதல் இரண்டு வகைகள் பார்பலோயின் (Barbaloin) மற்றும் அலோ எமோடின் ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது.
இவற்றி லிருந்து வலி நிவாரணி மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கேப் கற்றாழை கால்நடை மருத்துவத்துக்குப் பயன்படுகிறது.
வறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளரும். எனினும் 25 - 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்வதற்கு ஏற்றது. தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும், எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையைச் சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து வாங்க வேண்டும். இந்தக் கன்றுகள் அனைத்தும் ஒரே அளவில் இருந்தால்தான் செடிகள் சீராக வளர்ந்து ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை வாங்கிவந்து அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடம் நனைத்தபிறகு நடவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செடி அழுகல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கற்றாழையைத் தனிப் பயிராக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும். வளர்ந்த செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்து இருக்கும் என்பதால் காய் மற்றும் விதைகள் வராது. இதனால் கற்றாழையைப் பக்கக் கன்றுகள் மூலமாகத்தான் பயிர்ப்பெருக்கம் செய்ய வேண்டும்.
சாகுபடி பருவம்!
வருடத்துக்கு இரண்டு பருவங்களில், அதாவது ஜூன் - ஜூலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். அப்போதுதான் இலையி லிருந்து தரமான ஜெல் கிடைக்கும். இதற்காக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. என்றாலும், கூடுதல் நிலம் உள்ளவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஓர் அறுவடை எடுப்பதுபோல சுழற்சி முறையிலும் மேற்கொள்ளலாம்.
நிலத்தை இரண்டுமுறை உழவேண்டும். ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தைச் சமன் செய்து சிறிய சிறிய பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிகள் வாளிப் பாக வளர்வதற்கு ஏற்ப ஒவ்வொரு செடிக்கும் மூன்று அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
வளமான நிலம் எனில் தொழு உரம் மட்டும் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து உரம் கொடுக்க வேண்டும். இதனால் செடிகள் வாளிப்பாக வளர்வதுடன் அதிக ஜெல் கொண்ட இலைகள் கிடைக்கும்.
கற்றாழையை மானாவாரிப் பயிராக வும் பயிர் செய்யலாம். அதன் மொத்த பயிர் காலத்தில் ஐந்து முறை நீர்த் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும். கற்றாழை செடியில் அதிகப் பூச்சிநோய் தோன்றுவதில்லை. நீர் தேங்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே, நன்கு வடிகால் வசதி வேண்டும்.
ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிட வாய்ப்புள்ளது. இதனால் அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும்.
அதாவது, செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த ஆறு மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்த எடுத்துச் செல்ல வேண்டும். நடவு நட்ட காலத்திலிருந்து 7-8 மாதங்களில் மகசூல் எடுக்கலாம்.
செலவுகள் (ரூ)
நிலம் உழுதல் : 2,500
உரம் : 15,000
கற்றாழை கன்று : 70,000
(ஒரு கன்று ரூ.7)
நடவுக் கூலி : 10,000
பராமரிப்பு : 20,000
அறுவடை கூலி : 10,000
இதர செலவுகள் : 10,000
மொத்த செலவுகள் : 1,37,500
செடிகளை அறுவடை செய்து அப்படியே விற்பனை செய்யும்பட்சத்தில் விற்பனை வருமானம் குறைவாகத்தான் கிடைக்கும். அதாவது, அறுவடை செய்த கற்றாழை செடிக்கு கிலோ ரூ.15 - ரூ.20 வரைதான் கிடைக்கும். அதே சமயத்தில் ஜெல் பிரித்து விற்பனை செய்கிறபோது, ஒரு கிலோ ஜெல்லுக்கு ரூ.75 - 100 வரை கிடைக்கும்.
ஜெல் எடுக்கத் திட்டமிடுகிறபோது 25% வரை கழிவு போகும். ஒரு கிலோ கற்றாழை ரூ.18 என சராசரியாக வைத்துக்கொண்டாலும் நமது உற்பத்தி 15 டன் என்கிறபோது, மொத்த விற்பனை வரவு ரூ.2,70,000. (15000
X 18=2,70,000) ஜெல் எடுத்து விற்பனை செய்வதற்கேற்ப ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறபோது விற்பனை வரவு கூடுதலாகும்.
லாபம்!
மொத்த விற்பனை : ரூ.2,70,000
மொத்த செலவு : ரூ. 1,37,500
லாபம் : ரூ.1,32,500
(இந்த வருமானம் 8 மாதங்களுக்கு. இதுவே கூடுதல் நிலம் வைத்து சுழற்சிமுறையில் செய்தால், ஒவ்வொரு மகசூலுக்கும் இந்த வருமானம் பார்க்க முடியும். இந்தத் தொழிலுக்கு மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் மூலம் மானியம் கிடைக்கும். தவிர விவசாயக் கூட்டுறவு சங்கம் மூலமாக மாநில அரசின் விவசாயக் கடன்கள் பெற முடியும்.

பொன்மொழிகள்-11

1. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை. -ஹெலன் கெல்லர்.
2. நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா? -அன்னை தெரசா.
3. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
-அம்பேத்கர்.
4. வீரன் ஒரு முறைதான் சாகிறான். கோழை ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டேயிருக்கிறான். -ஷேக்ஸ்பியர்.
5. கல்வியின் வேரானது கசக்கும். ஆனால் அதன் விளைச்சல் இனிக்கும். -அரிஸ்டாட்டில்.
6. சோம்பல் மாவீரனையும் வீழ்த்திவிடும். - பார்ட்டன்.
7. பழிவாங்குதல் வீரமன்று. ஆனால் பொறுப்பதே வீரம். - ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
8. ஊக்கத்தைக் கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. -அண்ணா.
9. கோபத்தைக் கொன்று விடு. இல்லையேல் அது உன்னைக் கொன்றுவிடும். -குருநானக்.
10. உயர்ந்த எண்ணங்களை உடையார் ஒரு நாளும் துன்பம் அடையார். - காந்தியடிகள்.

உடல் எடை குறைய

உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது ஆண்களுக்கு கம்பீரத்தையும், பெண்களுக்கு அழகையும் தரும். உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதில் அக்கறை கொள்ளவேண்டும். எடை அதிகரித்தால் மூட்டுவலி, இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களும் கூடவே வந்து விடும்.
இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. உடல் மெலிந்து இருப்பவர்கள் உணவில் எள்ளை அதிகம் சேர்த்துக்கொண்டால் எடை கூடும். அதுபோல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு பயன்படுத்துவது நல்லது. கொள்ளு பருப்பை ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்டநீர் வெளியேறும். ஊளைச்சதையை குறைக்கும் குணம் கொள்ளுக்கு உண்டு.கொள்ளு பருப்பை வேக வைத்து உண்ணலாம். வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை வேகவைத்து தண்ணீரை குடித்தால் ஜலதோஷம் கட்டுப்படும். அரிசியும் கொள்ளுபருப்பும் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். கொள்ளை ஆட்டி பால் எடுத்து சூப் வைத்தால் சுவையாக இருக்கும். பொடி செய்து ரசம் வைக்கும் போதும் பயன்படுத்தலாம்சோம்பை அவித்து தண்ணீர் குடித்தால் எடை குறையும். கேரட்டை துருவி தேன் விட்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடியை தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் போட்டு தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
தினமும் 5 கப் காய்கறி அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். கீரை வகைகள் அல்லது கொடியில் காய்க்கும் பீன்ஸ், அவரை, பூசணி, புடலங்காய் போன்றவற்றை அதிகம் சேர்க்கவும். ஆனால் மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை கூட்டும். பப்பாளி, முள்ளங்கி உடல் எடையை குறைக்கும். வாழைத்தண்டு, அருகம்பூல் சாறு நல்ல பலன்தரும். தினமும் காலை இஞ்சி சாறுடன், தேன்கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை குறையும்.

பொது அறிவு-1

*  வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.
* தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.சிங்கப்பூரின்         முந்தைய பெயர், டெமாஸெக்.
* பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.
* `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
* ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
* வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
* சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
* `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
* சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு                                               அறிமுகப்படுத்தியவர்கள்.
* `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.                   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
* இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.
* முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
* `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
* குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
* சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
* ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.
* கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
* ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.
* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.
* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.
* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
* ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.
* நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.
* பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.
* ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.
* தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.
* குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.
* நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.
* பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.
* அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.
* ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.
* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.* கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.
* பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.
* மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.
* விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.
* ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.
* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
* இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.
* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
* உலகின் வெண்தங்கம் - பருத்தி.
* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.
* இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).
* ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.
* விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
* `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.
* வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.
* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.
* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.
* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
* சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.
* திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.
* `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.
* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.
* இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
* தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.
* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.
* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.
* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.
* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.
* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.
* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
* அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.
* `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.
* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
* உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
* பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
* பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.
* `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.
* ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.
* பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.
* ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
* தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.
* நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
* நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.
* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.
* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.
* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.
* சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.
* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.
* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
* வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.
* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
* இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.
* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.
* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
* ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
* `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.
* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.
* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.
* `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.
* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.* ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.
* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.
* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.
* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.
* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).
* தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.
* உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.
* புத்தர் பிறந்த இடம், லும்பினி.
* `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.
* `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா).
* உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.
* தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.
* ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
*`கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.
* சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.
* மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'.
* பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.
*100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.
* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.
* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
* பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.
* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
முதலைக்கு 60 பற்கள் உண்டு.* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.
* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.
* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.
* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.
* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
* `பெருலா' என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான், பெருங்காயம்.
* கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர், திருமாவளவன்.
* உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம்.
* மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி.
* `சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் பெயர் பெற்ற மன்னன், முதலாம் குலோத்துங்க சோழன்.
பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.
கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.
யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.
நாய்க்கு வியர்ப்பது கிடையாது.*`பறவைத்தீவு' என அழைக்கப்படுவது, நியூசிலாந்து.
* நாகலாந்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் தான் உள்ளது.
* வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து.
* பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம்.
* எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
* `வாதாபி கொண்டான்' என்று அழைக்கப்படும் மன்னன், நரசிம்ம பல்லவன்.
* தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம், தொட்டபெட்டா.
* வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு.
* `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம்.
* டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர், சுஷ்மா சுவராஜ்.
* முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.
* `உயிரியல் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர், சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.
ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.
மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.
உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.
ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.
சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.
தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.
* உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.
* கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
* மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.
* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.
* நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962.
* ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.
* தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.
* மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.
* செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.
* ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.
* மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.
* மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம், நீலகிரி.
* இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள்.
* இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்.
* ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.
* சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.
* தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
* செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.
* இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.
* 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.
* ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.
* முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர் ராதாகிருஷ்ணன்.
* ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்.
* உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.
* கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.
* சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ்.
* செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.
* அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.
* ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.
* நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.
புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.
ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.
துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.
நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.* பச்சையம் இல்லாத தாவரம், காளான்.
* காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.
* பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.
* திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.
* எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.
* தலை இல்லாத உயிரினம், நண்டு.
* அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.
* உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.
* சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது.
* உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.
* புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம்.
* அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.
* `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.
* `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய்.
* தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்.
* குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா.
* உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர், எனியாக்.
* எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.
* `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன்.
* இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948.
* மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.
* காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.
* `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.* நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.
* நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம்.
* மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.
* முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.
* மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம்.
* வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.
* இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி.
* சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.
* முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே.
* தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.
* ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.ஏப்ரல் முதல் தேதியை அனைவரும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் நடைபெற்ற சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இங்கு பார்ப்போம்.
* 1793 - ஜப்பானில் உள்ள உன்சென் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர்.
* 1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
* 1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.
* 1948 - பரோ தீவுகள், டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றன.
* 1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம், இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
* 1976 - ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது.
* 1979 - 98 சதவீத மக்கள் ஆதரவுடன் இஸ்லாமியக் குடியரசாகியது, ஈரான்.
* 2001 - நெதர்லாந்து, சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.
* 2004 - ஆயிரம் மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜி-மெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது, கூகுள்.* பறக்கத் தெரியாத பறவை, பெங்குவின்.
* கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான்.
* ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி.
* கரையான் அரிக்காத மரம், தேக்கு.
* ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.
* அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.
* `திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல்.
* உலகின் முதல் கண்வங்கி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது.
* கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.
* ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.
* கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர். * 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.
* ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.
* பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன.
* அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.
* நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.
* கால் நகங்களைவிட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன.
* மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை.
* நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும்.
* டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.
* 13-ம் நூற்றாண்டில், ஞானதேவ் என்ற கவிஞர் தான் `பரமபத' விளையாட்டைக் கண்டுபிடித்தார்.
* நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை.
* ராணி எறும்புகள், 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
* மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம்.
நன்றி ; niroshan k.