Thursday, August 31, 2017

நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்...
------------------------------
🎀01. Fajr மற்றும், அஸர் மற்றும் மஃரிப், மஃரிப் மற்றும் இஷா இடையே தூங்க வேண்டாம்.
------------------------------
🎀02. நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம்.
------------------------------
🎀03. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
---------------------------------
🎀04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
------------------------------
🎀05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம். 

Wednesday, August 30, 2017

அரஃபா நோன்பு

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.
இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்:முஸ்லிம்(2151)

ஹஜ்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அதில் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. இப்ராஹீம் நின்ற இடமான மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் அச்சம் தீர்ந்தவராகப் பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அங்கு செல்வதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். 

ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:97)

மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..


🗣கேள்வி : ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது?
பதில் : ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள்பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

Tuesday, August 29, 2017

தக்பீர் கூறுவோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ, அபூஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்) பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள்....!!!
இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்....!!
(புகாரி: 1/ 339)

الله أكبر، الله أكبر، الله أكبركبيرا
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீறா

الله أكبر. الله أكبر. لاإله إلا الله والله أكبر .الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹு
வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில் லாஹில் ஹம்து

الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله ، الله أكبر. الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர். லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
மூலம் : Sahinath Isbha

Monday, August 28, 2017

*முஹம்மது நபியின் ﷺ அவர்களின் இறுதி பேருரை!*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்.....!!!!!!
இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.....!!!!!!
*பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!*
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

Sunday, August 27, 2017

நபி( ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் உரை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
6785. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “விடைபெறும்“ ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்) “மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியும்?“ என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்“ என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த ஊர் “(மக்கா“) தான்“ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள் “மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார்கள். மக்கள்,  “இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்“ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்“ என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?“ என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள்,“ஆம்“ என்று நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர். பிறகு, “உங்களுக்கு அழிவுதான்“ அல்லது “உங்களுக்குக் கேடுதான்“! எனக்குப் பின்னால் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்கள் நீங்கள் மாறிவிடவேண்டாம்“ என்றார்கள்.10 ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 86. குற்றவியல் தண்டனைகள்

பொறுமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…!
وَقَالَ تَعَالي: (وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلوةِ ط وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَي الْخشِعِينَ
மேலும், பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவருக்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும். (அல்பகரா:45)
குறிப்பு:- பொறுமை என்பது மன இச்சையை அடக்குவது, அல்லாஹ்வுடைய அணைத்து கட்டளைகளையும் நிறைவேற்றுவதுமாகும். மேலும் சிரமத்தின் போது சகித்துக் கொள்வதும் பொறுமையே (கஷ்ஃபுர்ரஹ்மான்) தீனின்படி அமல் செய்ய பொறுமை தொழுகையின் மூலம் உதவி தேடும்படி இந்த ஆயத்தின் மூலம் கட்டளையிடப்பட்டுள்ளது. (ஃபத்ஹுல் முல்ஹிம்)

பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
*💁🏻‍♂பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்*
💢🍂ஏழைகள் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக பணக்காரர்கள் *சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை கவனத்தில்* கொள்ள வேண்டும். ஏழைகளைக் கவனத்தில் வைத்தே பெருமானார் இவ்வாறு செய்துள்ளார்கள். நமது பகுதியில் *ஏழைகள் மிகுதியாக இருப்பதினால் அவர்களையும் அவசியம் பங்கில் இணைத்துக்* கொள்ள வேண்டும்.
💢🍃நபி (ஸல்) அவர்களின் காலத்தில் *பெருநாளன்று அண்டை வீட்டார்கள் உறவினர்கள் ஏழைகள்* ஆகியோருக்கு நபித்தோழர்கள் இறைச்சியைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக உள்ளன.