Saturday, August 9, 2014

இயற்கை மருத்துவம்

கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

தெரிந்துகொள்வோம்

1.இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்றவர் பானு ஆதித்யன் ஆவார் 
2.எப்போதும் புயல் வீசிக்கொண்டிருக்கும் கோள் வெள்ளி 
3.நமது உடலின் மெல்லிய சருமம் கண் இமை ஆகும் 
4.அதிகம் தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை ஆர்டிக் என்னும் கடற்பறவை ஆகும் 
5.குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி பிட்யூட்டரி ஆகும் 

ஹதீஸ்-சூனியம்

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:
பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அல்அஃஸம் எனப்படும் யூதன் ஒருவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சூனியம் செய்துவிட்டான். 

தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம் !!!

நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் இப்படி சொன்னவர் யார் தெரியுமா ? நம் தேச தந்தை காந்தியடிகள் !
மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள்
கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும்
எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.
இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே...
இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும்.
அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்..
தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம் !!!

காமராஜர்

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும்
தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது.
இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர் 
மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர். பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி,
போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால்
காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும்  உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும்
அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார்.
அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர
அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர். ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின்
மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் “காவிரியாற்றங்க ரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?”, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள். “ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்றார்.
என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தோன்றியது. அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன்
செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப்
படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல்
வார்த்தைகளை வீசியதுண்டு.
அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார்,
“பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும்
கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத்
தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”..

வாகன சட்டம்

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine
7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .
12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine
13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine
14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine
15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine
16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine
17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine

காச நோய்க்கு மருந்தாகும் கற்பூர வள்ளி



கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனை பல்வேறு நோய்கள் தீர்க்க பயன்படுத்தலாம். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். 


இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும். 

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம். 

புகைப்பிடிப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது. இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். 

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

இயற்கை மருத்துவம்

1. மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.
2. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலானவற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.
3. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.
4. சோம்பு (பெருஞ்சீரகம்)பை லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.
5. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
6. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.
பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.
வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.
7. பெருங்காயம் கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.
8. 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்.
9. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

மூலிகை சாறு

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!
நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்

முடி உதிர்தல்

ஆயுர்வேதத்தில் அஸ்தி தாதுவின் மலமாக முடி சொல்லப்பட்டுள்ளது. தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் எனும் சிரோ அப்யங்கம் நமது கலாசாரத்தின் ஒரு அங்கம். தென் பகுதிகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். வடப் பகுதிகளில் குளித்து முடிந்து நன்றாக உலர்ந்த பிறகு, எண்ணெய் தேய்ப்பார்கள். முடி வளர்வதற்குத் தேங்காய் எண்ணெயில், மற்றப் பொருட்கள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட எண்ணெய்களே சிறந்தவை.
முதலில் முடியை நன்றாகச் சுத்தி செய்வதற்கு ஒரு மருந்தை எடுத்துக்கொண்டு (20 கிராம் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் இரவு எடுத்துவிட்டு), பிறகு சிகிச்சையைத் தொடங்கலாம். வீட்டிலேயே எளிமையாகத் தைலம் காய்ச்சிக் கொள்ளலாம்.
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சலாம். இந்த எண்ணெயை முடிக் கால்களில் படுவதுபோல் தேய்க்க வேண்டும். 20 நிமிடம் வரை விடலாம்.
பொடுகு அதிகம் உள்ளவர்கள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயை புளிக்காத மோருடன் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். இளநரை உள்ளவர்கள் அகஸ்திய ரசாயனம் தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடுக்காயும், தசமூலமும் முக்கியப் பொருளாக உள்ளன.
மற்றவர்கள் நரசிம்ம ரசாயனம் எனும் லேகியத்தைச் சாப்பிடலாம். பாலும் எள்ளுருண்டையும் சாப்பிடலாம். இரும்புச் சத்தை அதிகரிக்கக் காந்தச் செந்தூரம் (500 மி.கி.) மாத்திரையில் 2 மாத்திரையை மதியம் சாப்பிடலாம். பித்தத்தின் வேகத்தைத் தணிப்பதற்காக அணு தைலமோ, மதுயஷ்டியாதி தைலமோ மூக்கின் வழியாக 2 துளிகள் விட்டுக் கொள்ளலாம்.
எக்காரணம் கொண்டும் பிறர் பயன்படுத்திய சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும். முடியைக் குறைவாக வெட்ட வேண்டும். ஒரு வருடமாவது பொறுத்திருக்க வேண்டும். இன்று எண்ணெயைத் தேய்த்துவிட்டு நாளை முடி வளரவில்லையே என்று வருத்தப்படக் கூடாது.
முடி வளர 60 மூலிகைகள் உள்ளன. எல்லா மருத்துவர்களும் இந்த மூலிகைகளை மாற்றி மாற்றி போட்டே விளம்பரம் செய்கிறார்கள். பல நேரங்களில் விளம்பரங்கள், எண்ணெய் பாட்டில் அட்டைப் படத்தைப் பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள். வீட்டிலேயே எண்ணெய் காய்ச்ச முயற்சிக்க வேண்டும்.
ஒரு சிலருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்தால் ஜலதோஷம் வரும். அவர்கள் ஒரு கரண்டியை லேசாகச் சூடு செய்து, அதில் எண்ணெயை விட்டுப் பிறகு தேய்க்கலாம். அப்படியும் ஜலதோஷம் வந்தால் கடையில் கிடைக்கும் திரிபலாதி கேரம் எனும் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது. எந்தக் கெடுதலும் செய்யாது.

கூந்தல் உதிர்வதைத் தடுக்க

# அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை ஆகியவற்றைத் தலா ஒரு கப்     எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டுப்         பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள்       வைத்திருந்தால் தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயைத் தனியாகப் பிரித்துச் சேமியுங்கள்.         வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் கூந்தல் உதிர்வது   நின்றுவிடும்.

# வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பொடி செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில்           ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

# அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று   வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்சினை     குறையும்.

ed;wp : பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன் 

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் 'Bro n Sis'..???
01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.
02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.
04. 1835 ல் அவரது காதலி மரணம்.
05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.
06. 1838 ல் தேர்தலில் தோல்வி.
07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.
10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.
11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.
12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.
இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் தான்.
அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்...!

பொன்மொழிகள்-13-தோழர் லெனின்

"தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே!
தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள
வேண்டியது நிறைய இருக்கிறது!!"
- தோழர் லெனின்

சாலைகளில் உள்ள மைல்கல்

சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க... * மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை * பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை * நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை * பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை

மேலும்
இந்தியாவின் மையப்புள்ளி நகரம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இடையேயான தூரம் சாலை வழிகாட்டி பலகையில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்து தூரத்தில் ஆரம்பப்புள்ளி துவங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தியாவின் மையப்புள்ளி நாக்பூர் நகரம். இந்த நகரத்தில் இருந்துதான் நமது தூரங்களின் கணக்கீடுகள் ஜீரோ மைல் கல் துவங்குகிறது. நாக்பூர் நமது நாட்டின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இங்கு இந்த ஜீரோ எல்லைக்கல் அமைக்கப்பட்டது. இந்த ஜீரோ எல்லைக் கல் சின்னம் நான்கு குதிரைகளும் ஒரு தூணும் கொண்டதாக உள்ளது. உதாரணமாக இங்கிருந்து சில நகரங்களின் தூரம்: நாக்பூரில் இருந்து அகமதாபாத் 851 கி.மீ, பெங்களூர் 1062 கி.மி, சென்னை 1117 கி.மீ, டெல்லி 1029 கி.மீ,ஐதராபாத் 493 கி.மீ, கோல்கத்தா1118 கி.மீ, மும்பை798 கி.மீ

சோர்வை நீக்கும் உளுத்தம் புட்டு

சோர்வை நீக்கும் உளுத்தம் புட்டு
தேவையானவை: தோல் உள்ள உளுந்து - 200 கிராம், புழுங்கல் அரிசி - 100 கிராம், தேங்காய் - ஒரு மூடி, நெய், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் - தேவையான அளவு.
செய்முறை: உளுந்தையும் அரிசியையும் தனித்தனியே நன்றாக ஊறவைத்து, கழுவிச் சுத்தம் செய்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கவும். இதில், தேவையான அளவு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக, சற்றே கரகரப்பான பதத்தில் எடுக்கவும். பிறகு, ஆவியில் புட்டு மாதிரி உதிராக வேகவைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும்.
புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சூடாகச் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமல், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.
பலன்கள்: உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச் சத்தும் கிடைக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண் களுக்கு, கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும். ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.

ஹதீஸ்-ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது

"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) (2:156) என்றும், "அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா' (இறைவா! எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அவர் துன்பத்தை பொறுத்துக் கொண்டதற்கு ஈடாக அவர் இழந்ததை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)                                                               நூல்: முஸ்லிம் 1674

வாகன சட்டம்

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை...
அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை...
நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை...
15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதிமன்றத்தில் காட்டினால் பொதுமானது...
இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை....
license இல்லையா vehicle papers இல்லையா...
பணத்த எடுனு போலிஸ் சொன்னா...
நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி சல்லான் வாங்கிக்கோங்க..

ஹதீஸ்-பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....
பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை  
பெண்களுக்கு ஏனையத் தொழுகையைப் போன்றே ஜும்ஆ தொழுகைக்கும் நபி (ஸல்) அவர்கள் தொழ அனுமதித்துள்ளார்கள்.

வைரஸ் தாக்கிய பென்ட்ரைவ்-இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்

Monday, August 4, 2014

பயனுள்ள இணையதள முகவரிகள்...



பயனுள்ள இணையதள முகவரிகள்...
1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.
HTTP://WWW.CUTMYPIC.COM/
2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.
HTTP://WWW.WORDIA.COM/
3. தமிழில் கணினி செய்திகள்
HTTP://TAMILCOMPUTERTIPS.BLOGSPOT.COM/
4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்
HTTP://WWW.FOTOSKETCHER.COM/PORTABLEFOTOSKETCHER.EXE
5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
http://yttm.tv/
6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.
http://classbites.com/
7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.
http://www.helioid.com
8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.
HTTP://WWW.8ON.TV
9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க
HTTP://VIDEO.KIDZUI.COM
10. வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்.
HTTP://WWW.LIGHTWORKSBETA.COM
11. பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை கொடுக்கும் பிரத்யேகமான தளம்.
HTTP://WWW.FREEBIRTHDAYMESSAGES.COM
12. வலைப்பூவுக்கு அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்க.
HTTP://BGMAKER.VENTDAVAL.COM
13. வீடியோ மெயில்ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்ப.
HTTP://MAILVU.COM
via http://vienarcud.blogspot.com/2011/09/blog-post_5975.html

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் :-
கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

ஹதீஸ்-நட்பு

நட்பு பற்றி இஸ்லாம்
அறிமுகமாகிக் கொள்ளவேண்டும்
ஆத்மாக்கள் எல்லாம் குழுக்களாக பிரிக்கப்பட்ட படைகளாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொள்பவை இணைந்து கொள்கின்றன. அறிமுகமாகிக் கொள்ளாதவை வேறுபட்டு விடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்,                                                            நூல் : புகாரீ 3088

ஹதீஸ்-முஸ்லிமீன் கடமை

முஸ்லிமீன் கடமை...
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்,                                                               நூல் : புகாரீ 2262, முஸ்லிம்)

HOMEMADE MOSQUITO TRAP

HOMEMADE MOSQUITO TRAP:
Items needed:
1 cup of water
1/4 cup of brown sugar
1 gram of yeast
1 2-liter bottle
HOMEMADE MOSQUITO TRAP
HOW:
1. Cut the plastic bottle in half.
2. Mix brown sugar with hot water. Let cool. When cold, pour in the bottom half of the bottle.
3. Add the yeast. No need to mix. It creates carbon dioxide, which attracts mosquitoes.
4. Place the funnel part, upside down, into the other half of the bottle, taping them together if desired.
5. Wrap the bottle with something black, leaving the top uncovered, and place it outside in an area away from your normal gathering area. (Mosquitoes are also drawn to the color black.)
Change the solution every 2 weeks for continuous control.
Courtesy : http://www.ideadigezt.com/how-to-make-a-homemade-mosquito-trap/

Back Pain Natural Remedies

*****Back Pain Natural Remedies*****
A very common problem from ages in man-kind is the pain in the lower back referred as back pain It can be due to poor postural habits, strains, and also muscle tension. It is also very common in pregnant woman due to the stretching of ligaments around uterus. Here are some remedies for the lower back pain.
1. Keep one warm and eat only hot items in-case of a chronic back pain.
2. Garlic should be included in diet on regular basis.
3. Tulsi is the best medicine. Boil tulsi in water until the syrup is reduced to half of actual size and add salt after       cooling.
4. Massage with eucalyptus and mustard oil is very favorable for severe back aches
5. Half a tea spoon of jaggery is very effective medicine that can be eaten with warm water after meals only.
6. Cardamom with honey shows the best results at times of back ache.
7. Massage with any ointment will be useful
8. Take a cloth or jute bag full of ice. Now start massaging with that back. It helps to reduce the inflammation in       the back.
9. Sleeping on firm mattresses facing to the ceiling helps to have proper blood flow and there by reducing the           aches.
10. Exercise is the best way to keep fit from all types of ache.

Courtesy : http://www.healthdigezt.com

விளாம் பழம்



விளாம் பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. இதன் மருத்துவ மகத்துவத்தை படித்துப்பாருங்கள். அடுத்த முறை எங்கு 
விளாம் பழத்தைப்பார்த்தாலும் வாங்கி சுவைப்பீர்கள்.
*தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.
* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.
* தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.
* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.
* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.
* விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.
* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.
* விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
* விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
* சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

Sunday, August 3, 2014

பொது அறிவு-5

* ஆஸ்கார் விருது மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
* யானையின் துதிக்கையில் எலும்பு கிடையாது.
* நெருப்பு கோழி மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது.
* அதிகக் கேட்கும் சக்தி கொண்ட பறவை இனம் கிளி.
* மண்புழுக்களுக்கு கண், காது, தாடை, பல் போன்ற அமைப்புகள் கிடையாது.* ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
* கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
* பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
* மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
* குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
* புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
* ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
* நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
* ஒரே சமயத்தில் அதிக முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
* மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
* வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
* வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
* நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது. குதிரையின் சராசரி ஆயுள்காலம், 60 ஆண்டுகள்.
நூர்ஜஹானின் இயற்பெயர், மெஹருன்னிசா.
சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம், அபிமன்யு.
அமைதியின் தூதுவர் என்று அழைக்கப்பட்டவர், ஜவஹர்லால் நேரு.
உயிர் காக்கும் உலோகம் என்று அழைக்கப்படுவது, ரேடியம்.
நோபல் பரிசை நிறுவியவர், ஆல்பிரட் நோபல்.
சனிக்கிரகத்துக்கு வளையம் உண்டு என்பதைக் கண்டறிந்தவர், கலிலியோ.
விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள், அக்டோபர் 8.
ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர், வில்லியம் ஹார்வி.
இந்திராகாந்தி முதன்முதலில் இந்தியப் பிரதமரான ஆண்டு, 1966.
டெல்லியின் பழைய பெயர், இந்திர பிரஸ்தம்.
வானத்தில் இருந்து பார்க்கும்போது வானவில் முழு வட்டமாகத் தெரியும்.
நவீன ஓவியக்கலையின் தந்தை'என்று அழைக்கப்படுபவர், பிகாசோ.
மோனாலிசா ஓவியத்தில் உள்ள பெண்ணுக்கு கண் புருவங்கள் கிடையாது.
கழுதைப்புலி, நாய் இனத்தைச் சேர்ந்தது.
ஈசலின் வாழ்வு ஒருநாள் மட்டுமே. * ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம் உள்ள இடம் - கர்நாடகா
* குருதேவ் என்று அழைக்கப்படுபவர் - ரவீந்திரநாத் தாகூர்
* இந்தியாவின் முதுபெரும் மனிதர் - தாதாபாய் நவுரோஜி
* இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் வந்த சீனப்பயணி - பாஹியான்
* அக்னி, பிருத்வி ஏவுகணைகளை வடிவமைத்தவர் - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
* இந்தியாவில் உள்ள இளஞ்சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர்
* புயலடிக்கும் நகரம் என்று அழைக்கப்படுவது - சிகாகோ
* டி.என்.ஏ.வை ஒட்ட வைக்க பயன்படும் நொதி - லிகேஸ் நொதி
* முதன் முதலில் வைரசைக் கண்டறிந்தவர் - பெய்ஜரிங்க். * அலாவுதீன் கில்ஜியின் அரசவைப் புலவர் - அமீர் குஸ்ரு
* பஞ்சாபில் நடக்கும் ஒருவகை நடனம் - பாங்கரா
* இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கி - எஸ்பிஐ
* ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பில் பயன்படும் தத்துவம் - அணுக்கரு இணைவு
* திட்டமிட்டு வனங்களை ஏற்படுத்துவதன் பெயர் - சில்விகல்ட்சர்
* தடுப்பூசி முறையை முதலில் செய்து காட்டியவர் - எட்வர்ட் ஜென்னர்
* அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் - இடாநகர்
* தமிழகத்தில் தியாகராஜ ஆராதனை திருவிழா நடைபெறும் இடம் - திருவையாறு
* உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை - வாடிகன் அரண்மனை
* மூடிய விதைத்தாவரங்கள் என்று அழைக்கப்படுபவை எவை? - ஆன்ஜியோஸ்பெர்ம்கள்
* நியூக்ளியசைக் கண்டறிந்தவர் - ராபர்ட் பிரவுன்
* புரதச்சத்து குறைவால் உண்டாகும் நோய்கள் - க்வார்ஷியார்கர், மராஸ்மஸ்
* இன்சாட் செயற்கைக்கோள் வளிமண்டலத்தை தொலைவில் இருந்து உணர்வதற்கும், தானியங்கி தகவல் சேகரிப்பிற்குமாக பூமிக்கு இணையாக நிலையாக அமையும் வகையில் ஆளில்லா தகவல் சேகரிப்பு மேடை 1982-ல் தொடங்கப்பட்டது.
* புயலின் தீவிரத்தை துல்லியமாக கணக்கிடும் டாப்ளர் காலநிலை ரேடார்கள் புயல்களைக் கண்டறியும் கட்டமைப்பில் இணைக்கப்பட்டன. முதல் டாப்ளர் வகை ரேடார் சென்னையில் 2002-ல் செயல்படுத்தப்பட்டது.
* அமெரிக்க செயற்கைக்கோளில் இருந்து புகைப்படங்களை இந்திய வானிலைத்துறை 1964-ம் ஆண்டு முதல் பெறத் தொடங்கியது.
* வானிலையில் தகவல் குறிப்புகள் மற்றும் இன்சாட் நிழற்படங்கள் உலகளாவிய டிஜிட்டல் முறையிலான ஒளிபரப்புதல் மூலம் பெறப்படும் முறை 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்ரோலியத்தை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது கிடைக்கும் பொருட்கள்:
20 டிகிரி சென்டிகிரேடு - வாயுக்கள்
30- 130 டிகிரி சென்டிகிரேடு - பெட்ரோல்
120- 180 டிகிரி சென்டிகிரேடு - நாப்தா
180- 260 டிகிரி சென்டிகிரேடு - மண்ணெண்ணை
260- 340 டிகிரி சென்டிகிரேடு - டீசல்
340- 500 டிகிரி சென்டிகிரேடு - உயவு எண்ணை
500 டிகிரிக்கு மேல் - பாரபின் மெழுகு, வாசலின் சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? ரேய்ட்டர்.
சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
ஹேக்கல்.
கங்காரூ அதிகம் உள்ள நாடு?
ஆஸ்திரேலியா.
கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
முதலை.
ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி.
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890.
உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5.
இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
சூரியகாந்தி எண்ணெய்.
தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?
ஆக்ஸிஜன். * 2010-ல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற இடம் - புதுடெல்லி
* உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் - பீஜிங் சர்வதேச விமான நிலையம், சீனா
* `மதராஸ்' என்ற பெயர் `சென்னை' என்று மாறிய ஆண்டு - 1996
* ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையைக் கண்டறிந்தவர் - ஜோசப் லிஸ்டர், 1960
* துகேலா நீர்வீழ்ச்சி எங்குள்ளது? - தென் ஆப்பரிக்கா
* நூபியன் பாலைவனம் உள்ள நாடு - சூடான் * இடியோசையின் டெசிபல் அளவு - 110 டெசிபல்
* தொல் தாவரவியலைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாலியோ பாட்டனி
* பாஸ்ட் நார்கள் என அழைக்கப்படுபவை - புளோயம் நார்கள்
* சிவஞானபோதத்தை எழுதியவர் - மெய்கண்டார்
* பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க பயன்படும் கருவி - லாக்டோ மீட்டர்
* ஒற்றைச் சர்க்கரைக்கு எடுத்துக்காட்டு - குளுக்கோஸ்
* வான்கடே விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - மும்பை
* 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள இடம்- தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகர். * இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை எங்கு, எப்போது நடத்தியது?- ராஜஸ்தான் பாலைவனம், 1974
* காலை நேரத்திற்கு உரிய ராகம் எது? - மேகராகம்
* கஜுராஹோ நாட்டிய திருவிழா நடைபெறும் மாநிலம் - மத்தியப்பிரதேசம்
* 10-வது ஐந்தாண்டு திட்ட காலம் எது? - 2002 முதல் 2007 வரை.
* பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலின் பெயர் என்ன? - செரிக்கல்சர்.
* கடாபி விளையாட்டு மைதானம் எங்கு அமைந்துள்ளது? - லாகூர் (பாகிஸ்தான்). * இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு, மும்பையில் டபிள்யு.சி.பானர்ஜியின் தலைமையில் நடந்தது.
* முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர் சென்னையைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய அய்யர்.
* திலகரால் நடத்தப்பட்ட பத்திரிகைகள், மராத்தா மற்றும் கேசரி.
* சுதேசி நீராவிக்கப்பல்' என்ற நிறுவனத்தை தூத்துக்குடியில் தொடங்கியவர், வ.உ. சிதம்பரம்பிள்ளை.
* ஆஷ்துரை, வாஞ்சிநாதனால் 1911-ல் மணியாச்சி ரெயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக குருகுலத்தை நடத்தியவர், வ.வே.சு. அய்யர்.
* ஜாலியன் வாலாபாக் படுகொலை 13.4.1919-ல் நடந்தது. * எலிக்கொல்லியாக பயன்படும் தாவரம்- அர்ஜினியா இன்டிகா
* தெளிவாகத் தெரியும் காட்சியின் மீச்சிறு தொலைவு- 25 சென்டி மீட்டர்
* வானவியலைப் பற்றி படிக்கும் பிரிவு - அஸ்ட்ரானமி
* கவீர் பாலைவனம் உள்ள நாடு - ஈரான்
* ஐ.நா.சபையின் தலைமையகம் உள்ள இடம் - நியூயார்க்
*மகாத்மா காந்தியின் உருவப்படம் உள்ள தபால் தலை வெளியான நாள் - 15.8.1948 * விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி- டேகா மீட்டர்
* உலகப் புகழ் பெற்ற திலாடியோ தேசிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் - பரத்பூர்
* ஆசியாவிலேயே மிகப்பெரிய கோட்டை - சித்தவுட் கோட்டை
* `சிவப்பு நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் - ஜெய்ப்பூர்
* அபு மலையின் நினைவுச்சின்னம் - அச்சல்கார் கோட்டை
* காஷ்மீர் வரலாற்றைக் குறிக்கும் நூல் - ராஜதரங்கினி கண்மை பூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள்தான் ஏற்படுத்தினர். சூரிய ஒளியில் கண் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தோன்றியதுதான் கண் மை பூசும் வழக்கம்!
தேநீரைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்தான் என்றாலும் முதன் முதலில் அன்றாட வழக்கிற்குக் கொண்டு வந்து பயன்படுத்திய பெருமை இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும்தான்!
பறக்கும் பலூனைக் கொண்டு முதன் முதலில் வான்படையை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டைத்தான் சேரும்.
உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழக அருங்காட்சியகம் என்ற பெருமையை ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் பெறுகிறது. 1683-ம் ஆண்டு இந்த மியூசியம் தொடங்கப்பட்டது.
இரும்பு மற்றும் எலும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட குண்டூசிகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் சுமேரியர்கள்.
கலங்கரை விளக்கம் முதன் முதலில் கி.மு. 500-ல் எகிப்தியர்களால் அமைக்கப்பட்டது.
முதன் முதலில் பச்சை சிவப்பு விளக்குகளைக் கொண்டு டிராஃபிக் சிக்னல் 1868-ம் ஆண்டு லண்டனில் ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் தொலைபேசித் தொடர்பகம் 1851-ம் ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது.
டாங்கு என்றழைக்கப்படும் போர் ஊர்தி முதன் முதலில் இங்கிலாந்தில் 1916-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
முகச்சவரம் செய்து கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.
கிளி ஜோசியம் முதன் முதலில் தோன்றியது பர்மாவில்தான்.
விவசாயம் முதன் முதலில் தொடங்கியது தாய்லாந்து நாட்டில்தான்! தமிழகத்தில் 1943-ல்தான் ஜவ்வரிசி இறக்குமதியானது! ஜாவா தீவுகளில் இருந்து வந்ததால், ஜாவா அரிசி என்று வழங்கப்பட்டது. பின்னர் இது ஜவ்வரிசியாக சுருங்கிவிட்டது!
விமான விபத்து எப்படி நடந்தது என்று கண்டுபிடிக்கும் பெட்டிதான் கருப்புப் பெட்டி. இதைக் கண்டுபிடித்தவர் டேவிட் வாரன். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
இதயம் 60 விநாடிக்கு 72 முறை துடிக்கும். அப்படியென்றால் 15 விநாடிகளுக்கு 18 முறை துடிக்க வேண்டும். எனவேதான் நமது மணிக்கட்டின் (நாடி) நரம்புத் துடிப்பை வைத்து இதயத் துடிப்பை மருத்துவர்கள் அளந்து பார்க்கிறார்கள்.
ஐ.நா. சபை சின்னத்தில் பூமி உருண்டையுடன் உள்ள இலை ஆலிவ் இலை. இந்தியாவில் முதன்முதலாக அஸ்ஸாமில் 1867-ம் ஆண்டில்தான் நிலத்துக்கு அடியில் எண்ணெய்க் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
இந்தியாவில் முதன்முதலில் 1946-ம் ஆண்டில் சென்னையில் இந்தியாவின் திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டது.
இந்தியாவில் முதன்முதலில் காபிரைட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் நூல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரபிரசாத் எழுதிய "சுயசரித்திரம்' என்னும் நூல்.
இந்தியாவில் முதன்முதலில் 1962-ம் ஆண்டில் தும்பாவில் இந்திய முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் மிக அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் ஜோதிபாசு (மேற்கு வங்காளம்).
இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இருக்கும் இடம் காரக்பூர் (மேற்கு வங்காளம்). விண்வெளியில் முதன்முதலில் சாதனை படைத்த சாகச வீரர்களைப் பற்றிய விவரங்கள் வருமாறு:
* உலகின் முதல் விண்வெளி வீரர், யூரிகாகரின். முதன்முதலில் பூமியை வலம் வந்த விண்வெளி வீரரும் இவர்தான். (12.4.1961)
*முதல் விண்வெளி வீராங்கனை ரஷ்யாவைச் சேர்ந்த வாலன்டினா தெரஷ்கோவா (16.6.1963)
*அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர், ஆலன் ஷெப்பர்ட் (5.5.1961)
*இந்தியாவின் முதல் விண்வெளி வீரர், ராகேஷ் சர்மா (3.4.1984)
* இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை, கல்பனா சாவ்லா (19.11.2003)
*சீனாவின் முதல் விண்வெளி வீரர், யாங்லிவெய் (15.10.2003) * தீக்குச்சி முனையில் உள்ள வேதிப்பொருட்கள் - ஆன்டிமனி சல்பைடு, பொட்டாசியம் குளோரைட், கந்தகம்.
* உயர் வெப்பநிலையை அளக்க உதவும் கருவி - பைரோ மீட்டர்
* இந்தியாவில் ரஞ்சித் விளையாட்டு மைதானம் எங்குள்ளது? - கொல்கத்தா
* உலகிலேயே உயரமான பீடபூமி எது? - பாமீர், திபெத்
* காந்தி நிறுவிய ஆசிரமத்தின் பெயர் - சபர்மதி
* கனவுக்கோபுர நகரம் எது? - ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து. * முதன் முதலில் போரில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியவர் - திப்புசுல்தான்
* நம் உடலைச் சுற்றி வர ஒரு துளி ரத்தத்திற்கு சுமார் ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை ஆகிறது.
* சதுர வடிவில் ரூபாய் நோட்டை வெளியிடும் நாடு, தாய்லாந்து.
* கழுகு, மனிதனை விட 8 மடங்கு கூர்மையான பார்வைத்திறன் கொண்டது.
* நைல் நதியின் நீளம், 6 ஆயிரத்து 650 கிலோமீட்டர்.
* இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தும் முறைக்கு `எம்பாம்' என்று பெயர். 13 நாடுகளின் எல்லையைக் கொண்ட ஒரே நாடு, சீனா.
* உலக நாடுகளின் தேசிய கொடிகளில் அதிகம் இடம்பெற்ற ஒரே நிறம் - சிவப்பு
* `கடல் குதிரை' என்று சொல்லப்படும் மீன் இனத்தில் ஆண் மீன்களே கர்ப்பமாகின்றன.
* லிங் இன மீன் இடும் முட்டையின் எண்ணிக்கை 16 கோடி.
* நாய் மனிதர்களைப் போலவே கனவு காண்கிறது.
* ஜப்பானில், ஏப்ரல் முதல் நாளை பொம்மைகள் தினமாகக் கொண்டாடுகின்றனர்.
* இந்தியாவின் முதல் பைவ் ஸ்டார் ஓட்டல் மும்பை தாஜ்.
* போலார் கரடிகள் இடது கை பழக்கம் உள்ளவை.
* நோபல், மகசேசே, பாரத ரத்னா என்ற மூன்று உயர்ந்த விருதுகளைப் பெற்றவர், அன்னை தெரசா.
* தயான்சந்த் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? - ஹாக்கி
* வளிமண்டலத்தில் உள்ள இரண்டாவது அடுக்கின் பெயர் - ஸ்ட்ரட்டோஸ்பியர்
* நுண்கிருமிகளைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாக்டீரியாலஜி
* இத்தாலியில் உள்ள எரிமலையின் பெயர் - வெசூவியஸ்
* பாட்னா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? - கங்கை
* மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் - போர்ட் லூயிஸ்
* நத்தைகள் மூன்று ஆண்டுகள் கூட விடாமல் தூங்கும்.
*கடல் இறால் லாப்ஸ்டர்க்கு கண்களை இழக்கும் நிலை ஏற்பட்டால், உடனே அதற்கு மறுகண் முளைத்து விடும்.
*பெண் கொசுக்கள்தான் மனிதனைக் கடித்து அவன் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
*ஸ்ட்ராபெர்ரி ஒரு பழம் அல்ல. அது அந்தச் செடிப்பூவின் பருத்த தண்டுதான்.
*கோலா கரடிகளின் ஆகாரம் மூங்கில் தழைகள்.
*பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட, இரண்டு மடங்கு நீளம்.
*கருப்பு திமிங்கலங்கள் பிறக்கும்போது வெள்ளையாக இருக்கும். * அமெரிக்காவில் கடிகாரக் கடைகளில் விற்பனைக்கு இருக்கும் கடிகாரங்களில் நேரம் 10-10 என்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். ஏன் இப்படி? அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் கொல்லப்பட்ட நேரத்தை நினைவுகூறும் வண்ணம் அவ்வாறு வைக்கப்பட்டிருக்கும்.
* ஒட்டகச் சிவிங்கியின் பின் கால்கள் தான் அதனுடைய தற்காப்பு ஆகும். இது ஆபத்து காலத்தில், இந்தக் கால் மூலம் ஓர் உதைவிட்டால், அந்த உதை ஒரு சிங்கத்தைக்கூடக் கொல்லும் வலிமையுடையதாகும்.
* சீல் எனும் கடல் வாழ் உயிரினம் கருவுற்றிருக்கும்போது எளிதில் சாப்பிடாது. தன் உடற்சத்தையே கரைத்துத் தன் வயிற்றினுள் இருக்கும் குட்டிக்குச் செலுத்தும்.
* பெட்ரோல் என்பது பெட்ரோலியம் என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு கல் எண்ணெய் என்ற பொருள்.
* நார்வே நாட்டில் வீடுகளின் கூரைகளில் புற்களைப் பயிரிடுகின்றனர்.
* உடலில் உள்ள பல நோய்களையும் தண்ணீர் அருந்துவதன் மூலம் குணப்படுத்தமுடியும் என்று ஜப்பான் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
* உலகின் மிகப் பழமையான சுரங்கப் பாதை துருக்கியில் உள்ளது. இங்கு சாமோஸ் என்ற இடத்தில் சுண்ணாம்புக் கல் மலை ஒன்று உள்ளது. இம்மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைதான் உலகின் மிகப் பழமையான சுரங்கப்பாதை. இது 1000 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது.
* 1879-ல் இந்தியத் தபால் அட்டையின் விலை 1 பைசா.
* லெபனான் நாட்டில் எப்போதும் கிறிஸ்துவர்களிடமிருந்து ஜனாதிபதியும், முஸ்லிம்களிடமிருந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
* மற்ற நாள்களில் நடப்பதை விட பெüர்ணமியன்று 50 சதவீதம் கொலைகளும் 100 சதவீதம் தீய சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
* கோவாவின் தலைநகர் பஞ்சிம். அங்குள்ள இரண்டு சாலைகளின் பெயர்கள்: ஜூன் 18-ம் தேதி சாலை, ஜனவரி 31-ம் தேதி சாலை.
* சிம்பன்ஸி குரங்குகளுக்கும் மனிதனுக்கும் ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆய்வின்படி 98.4 சதவீதம் ஒரே உணர்வுகள் தான் இருக்கிறது. மற்றபடி நாம் என்னென்ன செய்கிறோமோ, அத்தனையும் அவை செய்யும். பேசமட்டும் தெரியாது. * நேபாளத்தில் பெரும்பாலும் இரவில்தான் மழை பெய்யும்.
* சோமாலியா நாட்டு சிங்கங்களுக்கு பிடரி மயிர் கிடையாது.
* நாகப்பாம்பின் நச்சு மயிலைப் பாதிக்காது.
* கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது.
* கப்பல் கிழக்கில் சென்றால் அதன் எடை குறையும்.
* கோலப் மைதானத்தில் 18 துளைகள் உள்ளன.
* உலகில் அதிகமானவர்களைப் பாதிக்கும் வியாதி என்ன தெரியுமா? பல்வலி!
நிலத்திலும், நீரிலும் மைல் என்ற அளவு பயன்படுகிறது. நிலத்தின் மைலுக்கும், கடலின் மைலுக்குமுள்ள வித்தியாசம் தெரியுமா?
நிலத்தில் ஒரு மைல் - 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6080 அடி.
* சுண்டெலியின் ஆயுட் காலம் 3 வருடங்கள்
* கரையான் அரிக்காத மரம் தேக்கு
* பாம்பிற்கு ஒரு நுரையீரல் மட்டுமே உண்டு.
* தக்காளியின் தாயகம் அமெரிக்கா.
* நமது உடலின் பெரிய சுரப்பி கல்லீரல்.
* இங்கிலாந்து ஈரான் நாடுகளின் தேசிய சின்னம், ரோஜாமலர்.
* நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டதாகும்.
* நில நடுக்கத்தின் கடுமையை துல்லியமாக அறிந்து கொள்ள `ரிக்டர் ஸ்கேல்' என்ற கருவி பயன்படுகிறது.
* இந்திய ரூபாய் நோட்டுகள் `நாசிக்' நகரத்தில் அச்சடிக்கப்படுகிறது.
* உலகிலேயே மிகப் பழமையான பல்கலைக்கழகம் `மொராக்கோ' நாட்டில் உள்ளது.
* சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முதல் தமிழ் புத்தகம் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய `தமிழ்இன்பம்'.
* மண்புழுவுக்கு கண்கள் கிடையாது.
* இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் நடிகர் ஷாருக்கான நடித்த `தில் வாலே துல்ஹனியா லே ஜாயங்கே''
* தமிழ் பத்திரிகையில் கார்ட் டூன் படங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் - பாரதியார்
* 1930-ம் ஆண்டு முதல் உலக கால்பந்து ஆட்டம் ஆடப்படுகிறது. அனைத்து உலக கால்பந்தாட்டத்திலும் பிரேசில் அணி பங்கேற்றுள்ளது.
* இந்தியாவில் இரு தலைநகரங்கள் கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர்.
* ஆக்டோபஸின் ஆயுட் காலம் 3 ஆண்டுகள்.
* உலோகங்களில் அதிக எடை கொண்டது அலுமினியம்தான். ஒரு கனசென்டி மீட்டருக்கு 22.6 கிராம் எடை உடையது.
* பிரபல துப்பறியும் நூல் ஆசிரியரான அகதா கிறிஸ்டி எழுதியுள்ள 87 நாவல்களும் 103 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகி உள்ளது.
* ராஜநாகத்தின் விஷம் மிகக் கொடியதாகும். அதன் ஒரு கிராம் விஷம் 150 பேரை கொல்ல போதுமானது.
* உலகின் மிகப்பெரிய கண்ணாடி சன்னல் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருப்பதுதான். அதன் நீளம் 300 அடி. உயரம் 23 அடி.
* இந்தியாவில் இருந்து கொண்டே ஆங்கில இலக்கியம் எழுதி பிரபலமானவர் ஆர்.கே.நாராயணன்.
* வியர்வையில் கந்தகச் சத்து இருப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுத்துப் போய்விடுகின்றன.
* கரையான் அரிக்காததும், காளான் உண்டாகாததும், இரும்புத்துரு ஏறாததும் தேக்குமரம் மட்டுமே.
* சீட்டுக்கட்டில் உள்ள 4 ராஜாக்கள் டேவிட், சார்லி மாக்னி, அலெச்சாண்டர், ஜுலியஸ் சீசர்.
* சீட்டுக்கட்டில் உள்ள 4 ராணிகள் கிளியோபாட்ரா, எஸ்தர், ஷிபா, போடிஸியா.
* ஈ, ஒரு நிமிடத்தில் 2 ஆயிரம் தடவை இறக்கை அடித்துப் பறக்கிறது.
* பாலைவனத்தில் வளரும் எல்லா செடிகளுக்கும் முட்கள் இருக்கும்.
நாணயங்கள்
ஆஸ்திரியா - ஷில்லிங்
அல்பேனியா - லெக்
அல்ஜீரியா - தினார்
கனடா - டாலர்
சிலி - பிசோ
லாவோஸ் - கிப்
மாலத்தீவு - ருபியா
மொராக்கோ - டிர்காம்
ஈரான் - ரியால்
நார்வே - கிரோன் கணிதத்தில் பூஜ்ஜியத்தை சேர்த்தவர் - ஆர்யபட்டர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை அமைந்துள்ள இடம் - வண்டலூர்.
நானோமீட்டர் என்ற அளவைக் கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் இன்ஸ்டினா
* உலகிலேயே குரங்குகளுக்குப் பள்ளிக்கூடம் உள்ள நாடு - தாய்லாந்து.
* நெருப்புக் கோழிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள்.
* முட்டாள் தினம் கொண்டாடும் ஏப்ரல் முதல்நாளில் ஜப்பானியர்கள் பொம்மைகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.
* எந்த வயதில் பல் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் பல் முளைக்கும் உயிரினம் சுறா மீன்கள்.
* தமிழ்நாட்டின் அரசு வரிவிலக்குப் பெற்ற முதல் திரைப்படம் கப்பலோட்டிய தமிழன்.
* நோபல், மகசேசே, பாரதரத்னா ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் பெற்றவர் அன்னை தெரசா.
* தவளைகள் கண்கள் மூலம் சத்தத்தை கேட்கின்றன.
* மாறு குரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.
* ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உள்ள நாடு சுவிட்சர்லாந்து.
* இரவைவிட பகலில்தான் மேகங்கள் வேகமாக நகருகின்றன. * மோனலிசா ஓவியம் இடதுகையால் வரையப்பட்டது.
* குழந்தைப் பாடல்களை இயற்றிய முதல் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
* சிவப்பு ரோஜா நகரம் எனப்படுவது ஜெய்ப்பூர்.
* சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் பிறந்த மாநிலம் லூ. * மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் - 2ம் நாள் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* உலகிலேயே அதிக மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற சிரபூஞ்சி (மேகலாயா) நகரம் சோக்ரா என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
* மனித கருவை ஆய்வுக்கு அனுமதித்துள்ள உலகின் முதல் நாடு இங்கிலாந்து. * குதிரையின் கண் எதிரெதிர் திசையில் அசையும்.
* மனநோய் மருத்துவ முன்னோடி சிக்மெண்ட் பிராய்டு.
* ஐம்பது வயதுக்கு மேல் சுவை உணரும் ஆற்றல் குறையும்.
* எலிகள் இசையை விரும்புகின்றன.
* உலகின் பெரிய பூச்சி கோலியாத் வண்டுதான்.
* அடிபட்ட கழுகு உயிர்போகும் வரை போராடும்.
* கார்ப்ஸ் மீனின் ஆயுள் ஐம்பது வருடம்.
* வெள்ளாடு பசுவைவிட அதிக பால் தரும்.
* ராக ஆலாபனை இந்திய இசைக்கு மட்டுமே உண்டு.
* உலகின் மிகப்பெரிய எரிமலை கொடபாக்சி. * பச்சோந்தியின் நாக்கு உடலின் நீளத்தைப்போல் இரு மடங்கு இருக்கும்.
* விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு நாய். அதன் பெயர் லைகா.
* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே விலங்கு மனிதன்தான்.
* யானையின் வெட்டுப் பற்களே அதன் தந்தங்கள்.
* நெருப்புக்கோழியின் முட்டை 22 கோழி முட்டைகளுக்குச் சமம்.
* நீலத் திமிங்கலத்தின் இதயம் ஒரு மனிதன் உயரத்திற்கு இருக்கும் * இந்தியாவில் ஆங்கிலேயக் கல்வியைத் தொடங்கியவர் வில்லியம் பென்டிங் பிரபு.
* ஆயுள் தண்டனை என்பது 14 வருடங்கள்.
* உலகில் தாய் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டினர்.
* நாம் பிறந்த பின் நம் உடலில் வளராமல் இருக்கும் உறுப்பு கண்ணின் கருவிழி.
* அமெரிக்க இந்துக் கோவில்களில் பாதாம் பருப்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது. * டிஸ்னி வேர்ல்டு அமைந்துள்ள ஜப்பான் நகரம் டோக்கியோ.
* ராஜராஜன் விருதை உருவாக்கிய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
* அமெரிக்காவின் சொர்க்கத் தீவு என அழைக்கப்படுவது ஹவாய் தீவு.
* இருபதாம் நூற்றாண்டில் துணிச்சல் நிரம்பிய முதல் மனிதராகக் கருதப்பட்டவர் காந்திஜி.
* கூரியர் சர்வீஸ் முதன் முதலில் தோன்றிய நாடு இங்கிலாந்து.
* ரஷ்யமேதை காரல்மார்க்சின் கல்லறை லண்டனில் உள்ளது.
* பின்கோடு முறைக்கு அமெரிக்காவில் `ஜிப்' என்று பெயர்.
உலகில் மிகப்பெரிய 5 பாலைவனங்களும் அதன் பரப்பளவும்...
* சகாரா பாலைவனம் (வடஆப்பிரிக்கா) - 90,64,650 ச.கி.மீ
* அரேபியன் பாலைவனம் (மத்திய கிழக்கு ஆசியா) - 25,89,900 ச.கி.மீ
* கோபி (சீனா) - 12,94,950 ச.கி.மீ
* படகோனியன் (அர்ஜென்டினா) - 6,73,374 ச.கி.மீ
* கிரேட் விக்டோரியா (ஆஸ்திரேலியா) - 6,47,475 ச.கி.மீ.
* பாஸ்பரசை கண்டுபிடித்தவர் - பிராண்ட் (1669)
* ரேடியத்தை கண்டுபிடித்தவர் - கிïரி (1898)
* பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் - டேவி (1807)
* ரேயானை கண்டுபிடித்தவர் - கார்டனேட்
*மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - கிர்க்பாடிரிக் மாக்மிலென் (1839-40)
*மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் - டெய்ம்லர் (1885) * `எஸ்கிமோ' என்ற சொல்லுக்கு உணவைப் பச்சையாகத் தின்பவர்கள் என்று பொருள்.
* `செப்டம்பர் 27' உலகச் சுற்றுலா நாளாகக் கொண்டாடப்படுகிறது.
* டெல்லி, ஆக்ரா, ஜெய்பூர் இந்த மூன்று ஊரையும் சேர்த்து `தங்க முக்கோணம்' என்கிறார்கள்.
நன்றி;;niroshan