Saturday, October 11, 2014

ஜும்மா தொழுகை

ஜும்மா தொழுகையை சும்மா தொழுகையாக கருதும் அலட்சியமானவர்களே...!
ஐந்து நேர தொழுகையும் இல்லை. ..சுன்னத்தான தொழுகைகளும் இல்லை. .நபீலான தொழுகைகளும் இல்லை. ...பிறகு எதற்காக உன் பிறப்பு?

ஹதீஸ்-நயவஞ்சகனின் அடையாளம்

நயவஞ்சகனின் அடையாளம், மூன்றாகும் :
1) பேசினால் பொய் பேசுவான், 2) வாக்குறுதி தந்தால் மாறு செய்வான், 3) நம்பினால் மோசடி செய்வான், என்று நபி (ஸல்) கூறினார்கள்.
''அவன் நோன்பு வைத்தாலும்,தொழுதாலும், தன்னை முஸ்லிம் என எண்ணினாலும் சரியே...'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது.                               அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)         நூல் : புகாரி,முஸ்லிம்,ரியாளுஸ்ஸாலிஹீன்: 689

ஹதீஸ்-தொழுகைக்கு விரைதல்

'தொழுகைக்கு ''இகாமத்'' கூறப்பட்டால், நீங்கள் விரைந்து ஓடி வராதீர்கள். நீங்கள் நடந்தவர்களாக மெதுவாகவே வாருங்கள். அமைதியை நீங்கள் கடைபிடியுங்கள். கிடைத்ததை தொழுங்கள். உங்களுக்குத் தவறியதை நீங்கள் (தொழுது) முழுமைப்படுத்துங்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். 
(''உங்களில் தொழுகையை நாடி வந்தவர், தொழுகையில் இருந்தவர் போலாவார்'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூடுதலாக உள்ளது). 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)         நூல் : புகாரி,முஸ்லிம்,ரியாளுஸ்ஸாலிஹீன்: 704

ஹதீஸ்-முன் பின் சுன்னத் தொழுகை

முன் பின் சுன்னத்கள் யாவை?
தொழுகையின் முன், பின் சுன்னத் தொழுகையின் அவசியம் மற்றும் ஒவ்வொரு தொழுகையிலும் எத்தனை ரக்கத் சுன்னதாகத் தொழ வேண்டும்.

பொதுஅறிவு

பொதுஅறிவு:-
* நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
* சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர்  ஜூலியஸ்   சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

வெங்காயம்

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம் :-
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

Friday, October 10, 2014

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!

உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!
உங்களுக்கு வொயிட் பிடிக்குமா? ப்ரவுன் பிடிக்குமா? என்றால், அவரவருக்குப் பிடித்த நிறத்தை சொல்வார்கள். ஆனால், உணவு விஷயத்தில் நிறத்தைப் பார்த்து அதன் சத்துக்களை நிர்ணயிக்க முடியாது. எந்த நிற உணவுகள் நல்லது என்பதை முதலில் தெரிந்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்.

தெரிந்து கொள்வோம் :

தெரிந்து கொள்வோம் :
1. போன்'னை இடது காதில் வைத்து பேசுங்கள்!
2. மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது!

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்தஹு
அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

ஹதீஸ்-சுரைக்காய்


சுரைக்காய்

சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

  • சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

Wednesday, October 8, 2014

ஹதீஸ்-அர்ஷின் நிழலின் கீழ் ஏழு கூட்டத்தினர்

பொதுவான துஆ

"ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாஃகத லனா பிஹி வஅஃபு அன்னா வக்ஃபிர்
லனா வர்ஹம்னா அன்த மௌலானா ஃபன்சுர்னா அலல் ஃகவ்மில் காஃபிரீன்"

ஹதீஸ்-இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது' எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

இயற்கை மருத்துவம்,

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.......!

சத்துமாவு...

தேவையான பொருட்கள் :
கேப்பை (கேழ்வரகு) -------- 250 கிராம்                                                                                           கம்பு        ------------------------    250 கிராம்  

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்

இயற்கை மருத்துவம்

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக்                   குறைக்கலாம்.

வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்கும் வழிகள்

அதிக தண்ணீர் குடித்தல் (நீர் சிகிச்சை) அதிகரிக்கும்:
தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும். சுமார் 4 முதல் 5 லிட்டர் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டும்.

வீட்டுக் குறிப்புகள்-1

  • சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
  • உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

Tuesday, October 7, 2014

ஜைத்தூன் பீவி அவர்கள் மௌத்

பேகம்பூர் மறைஞான நகர் திருவள்ளுவர் தெரு மர்ஹும் மாட்டுவண்டி முகமது அனிபா அவர்களின் மனைவியும், மாட்டுவண்டி ஜமால் அவர்களின் தாயாருமாகிய (A.கனவா பிச்சை, A.ரபீக், A.சேட் மௌலானா ஆகியோரின் நன்னிமாவும் ஜனாபா A.சபியா அவர்களின் தாயாருமாகிய) ஜைத்தூன் பீவி அவர்கள் இன்று (07.10.2014) காலை காலமானார்கள். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 

M.U.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் மௌத்

பேகம்பூர் புலவர் தெரு மர்ஹும் மௌலானா அப்துல் வாஜீத்  (டில்லி குத்புகானா உரிமையாளர்) அவர்களின் மருமகனும் ஜனாப் A.அப்துல் ஹமீது & A.முஹம்மது பைஜூ  ஆகியோரின் தந்தையுமாகிய M.U.அபூபக்கர் ஸித்திக் இன்று (13.03.2014) மாலை 7.00 அளவில்அன்னாரின் இல்லத்தில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 14.03.2014 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 

ஹாபீஸ் M.V.K.ஷாகுல் ஹமீது அவர்கள் மௌத்

திருச்சி BHEL முன்னாள் ஊழியரும் கரூர் ஈசனத்தம் மர்ஹும் M.V.காதர் இப்ராஹீம் அவர்களின் மகனாரும் பெரியகுளம் மர்ஹும் P.அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனுமாகிய ஹாபீஸ் M.V.K.ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று (06.02.2014) காலை 10.00 அளவில் BHEL மருத்துவமனையில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 07.02.2014 வெள்ளிகிழமை காலை 11.00 மணியளவில் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 








Monday, October 6, 2014

மின்வெட்டு

மின்வெட்டு என்றாலே 1912 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம், மொபைலில் இருந்தும் பேசலாம். புகார் தெரிவித்த பிறகு சரிசெய்து விடுகிறோம் என்று டிமிக்கி கொடுத்துவிடுவார்கள்... தொடர்ந்து பேசி புகார் தெரிவித்ததற்கு ஆதாரமாக புகார் எண்ணை மறக்காமல் கேளுங்கள்.... கேட்டால்தான் கொடுப்பார்கள்.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

பேகம்பூர் ஜமாத்தார் சார்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (06.10.2014) காலை 8.00 மணியளவில் பெரியபள்ளிவாசலில் ஜமாத்தார் அனைவரும் கலந்து சிறப்பாக  நடைபெற்றது. 

Sunday, October 5, 2014

ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள்வாழ்த்துக்கள்


ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள்வாழ்த்துக்கள்

ஈதுல் அல்ஹா பெருநாள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஈதுல் அல்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் புரைதா ரலியல்லாஹு அன்ஹு - இப்னுமாஜா - 1756

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!
1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாள் இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)