Thursday, September 18, 2014

உணவு உண்ணும் முறை

சர்க்கரை வியாதி உடையவர்கள் வயிறு நிறையும் அளவில் உண்ணாமல் மூன்று வேளை உணவை நான்கு அல்லது ஐந்து வேளைகளில் உண்ணலாம். தினமும் குறித்த நேரத்தில் உண்ணவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் உண்ணக்கூடாது. உண்ணும்போது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், படித்துக் கொண்டும் உண்ணக்கூடாது. 

ஓமவல்லித் துவையல்.

ஓமவல்லித் துவையல்.
தேவையானவை: ஓமவல்லி இலை - 25, புதினா - ஒரு கைப்பிடி, புளி - சிறு உருண்டை, காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 8 பல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

முருங்கைக்கீரை அடை

தேவையான பொருள்கள்: 

பச்சரிசி - 21/2 கப் 
கடலைப் பருப்பு - 1/4 கப் 
உளுத்தம் பருப்பு - 1/4 கப் 
முருங்கைக்கீரை - 1 கட்டு 
வெங்காயம் - 3 
தேங்காய் துருவல் - 1/2 கப் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 8 
பெருங்காயம் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

* முருங்கைக்கீரையை சுத்தமாக ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். 

* வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

* அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். 

* பருப்புகளை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 

* அரிசியும் பருப்பும் ஊறியப்பின் அதனுடன் சீரகம், மிளகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

* அரைத்த மாவில் உப்பு, தேங்காய் துருவல், வெங்காயம் மற்றும் முருங்கைக் கீரை சேர்த்து கலக்கவும். 

* அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கனமான சிறிய அடைகளாக ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்த பிறகு எடுக்கவும். 

* சுவையான முருங்கைக்கீரை அடை தயார்.

இன்ஷா அல்லாஹ்வின் மகிமை

இன்ஷா அல்லாஹ்வின் மகிமை
ஒரு நாள் ஸெய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்களிடம் அவர்களின் மனைவி "இன்று கவசம் விற்று வரும் பணத்தை என்னிடம் தாருங்கள்" என்று கூறினர்.

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!
1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.

ஹதீஸ்கள்-பெண் குழந்தைகள்

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். 

Wednesday, September 17, 2014

நோய் பல தீர்க்கும் வேப்பமரம்

நோய் பல தீர்க்கும் வேப்பமரம்
தெய்வம் சார்ந்த பராரை வேம்பு " என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்!

செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்!
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

Tuesday, September 16, 2014

தாய்ப்பால் சுரக்க

  • தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம் :-
    பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

Monday, September 15, 2014

சளி தொல்லை

சளி தொல்லையா கவலை வேண்டாம் :
1. எலுமிச்சம்பழம்:
ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான வெந்நீரில் சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சினை தீரும். எலுமிச்சைபழம் விட்டமின் சி நிறைந்தது. இது நோய்க்காலத்தில் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சு சக்தியை குறைக்கிறது. மேலும் நோயின் காலத்தை குறைக்கிறது.

கேழ்வரகு - காய்கறி உப்புமா

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 100 கிராம் 
கேரட் - 100 கிராம் 
பீன்ஸ் - 100 கிராம் 
உருளைகிழங்கு - 50 கிராம் 
வெங்காயம் - 50 கிராம் 
மிளகாய் - 4 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு 
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்

பழச்சாறுகளும் அதன் நன்மைகளும்

பழச்சாறுகளும் அதன் நன்மைகளும் :
1. அத்திப்பழச்சாறு
‘‘அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை’’ என்று பழமொழி இருந்தாலும்கூட அத்திப்பழத்தை மருந்தாக உபயோகிகலாம்.
அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்

கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்னும் வியாதி நீங்க

கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்னும் வியாதி நீங்க சித்த மருத்துவம்:-
'அமீபியாஸிஸ் என்டமீபா ஹிஸ்டலிட்டிகா’ என்ற குடல்வாழ் தொற்றுக் கிருமியால், வயிற்றுப்போக்குடன் ரத்தம் கலந்து வெளியேறுவதை, 'கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்கிறோம்.

கால் வெடிப்பை போக்கும் உளுத்தம்பருப்பு

கால்களில் பாளம் பாளமாக பித்த வெடிப்புகள் இருக்கின்றனவா? இந்த சிகிச்சையைச் செய்து பாருங்களேன்... வெள்ளை ரவை... அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன். 

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு…?

>> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.
>> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

Sunday, September 14, 2014

இயற்கை மருத்துவம்,

1.சளியினால் தலை கனம் வரும்போது: 7,8 கிராம்பை சந்தனக்கல்லில் மையாக இழைத்து நெற்றி முழுவதும் பற்று போடவும்.
2. வாய்வு சேர்ந்து விட்டால் ஏப்பமும் அதிகமாக வரும். ஒரு பிடி கொத்தமல்லி விதைகளுடன் அதில் கால் பாகம் சோம்பு சேர்த்து இரண்டையும் பொன் வறுவலாக வறுத்துப் பொடித்து ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு ஸ்பூன் இந்த பவுடரைக் கலந்து குடித்தால் ஏப்பம் நிற்கும்.

முருங்கை கீரை..!

முருங்கை கீரை..!
முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

நோய்களை விரட்டும் நொச்சி!

மூலிகை வனம் - நோய்களை விரட்டும் நொச்சி!
ரா.கு. கனல் அரசு படங்கள்: வீ. சக்தி அருணகிரி
வீட்டுக்கொரு வைத்தியர்...
 பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில், தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

சர்க்கரை நோயா? - சீத்தாப்பழம்

இயற்கையான உணவுகளைக் கொண்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என்று பேசும் போது, சீத்தாப்பழம் அந்த உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். உண்மையில், சீத்தாப்பழத்திற்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. எண்ணற்ற விதைகளை கொண்டுள்ள இந்த ஆப்பிளுக்கு இணையான பலன்கள் வேறெங்கும் இல்லையென்றும் சொல்ல முடியும். புற்றுநோயை எதிர்க்கும் அக்சிடோஜெனின்களை பெருமளவு கொண்டிருக்கும் உணவாக உள்ளது சீத்தாப்பழம்.