Wednesday, March 28, 2018

திருக்குர்ஆன் முழுவதும் மனனம் செய்த 4 ஆம் வகுப்பு மாணவி.....!!

கீழக்கரை புதுக்குடியை சேர்ந்த சிறுமி ஹபீப் ஆயிஷா, இவர் சென்னையில் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்,
பள்ளி பாடத்தை கற்று வந்ததோடு இறைவனின் வேதமான திருக்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்து ஒப்பித்துள்ளார்.
இதற்காக அவருக்கு பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
(அல்ஹம்துலில்லாஹ்...)
Image may contain: 1 person, hat, closeup and indoor
இவர் கீழக்கரை பல்லாக்கு ஹாஜியாரின் பேத்தியாவார்.
இந்த மாணவிக்கு அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை கொடுத்து இவர் மீதும் இவரது பெற்றோர் மீதும் நல்அருள் புரிவானாக....
தகவல் உதவி : கீழக்கரை டைம்ஸ்
சின்ன வயதில் நம் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும், இஸ்லாம் என்றால் என்ன என்பதையும் சொல்லி கொடுத்து வளர்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...

Sunday, March 25, 2018

அதிர்ச்சியால் #முடி நரைத்து விடும் ...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 73:17)
'ஏக இறைவனை நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?'
'அதில் வானம் வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்'
-குர்ஆன் 73:17