Thursday, July 23, 2015

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

நோன்பின் மாண்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நோன்பு சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை குறைக்கிறது என்றும் முதுமையை தாமத படுத்துகிறது என்றும் கலிபோர்னியாவைச சார்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியபட்டுள்ளது

Wednesday, July 22, 2015

ஹதீஸ்-தர்மம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...!

ஸஅத் பின் உப்பாதா (ர­லி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம்,
''அல்லாஹ்வின் தூதரே!
என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் பின் உப்பாதா (ர­லி) அவர்கள், ''நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­லி), நூல்: ஸஹீஹுல் புகாரி 1388, 2756

Tuesday, July 21, 2015

"ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட ஆதித் தமிழர்கள் "

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது.

தகவல் துணுக்குகள்

* சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
* பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.
* `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
* ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
* `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.