Saturday, January 14, 2017

பன்முக கலாச்சாரமும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும்

பன்முக கலாச்சாரம் கொண்ட பல சமூகங்கள் வாழும் நாட்டை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆண்டால் அவர்களின் கலாச்சாரத்தில் கைவைக்க மாட்டார்கள்.
பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது கிருஸ்த்துவ மற்றும் யூதர்களுக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்த பத்திரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அதில் உமர் பைத்துல் முகத்தஸ்வாசிகளுக்கு எழுதியளித்த ஒப்பந்த வரிகள்:

Thursday, January 12, 2017

நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் ஸஹாபாக்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஏழ்மை?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  
நபிகள் நாயகத்தின் (ஸல்) மிக நெருங்கிய நண்பர் ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு மிகுந்த வயிற்று பசி ஏதாவது உணவு இருக்கிறதா? என மனைவியிடம் கேட்கிறார்கள் தண்ணீரை தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி... சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்...
பாதி வழியில் ஹஜ்ரத் உமர் (ரலி) எதிரே வருகிறார்கள்... என்னவென்று கேட்கிறார்   ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி வீட்டில் தண்ணீரை தவிர உண்பதற்கு எதுவும் இல்லை எனவேதான் உங்களை பார்க்க வருகிறேன் என்கிறார்கள் ஹஜ்ரத் உமர் (ரலி) சரி என் வீட்டிலும் இதே நிலைதான் அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை சென்று பார்க்கலாம் என நபிகளாரின் வீட்டிற்கு செல்கின்றனர்...

Tuesday, January 10, 2017

*மாலை கல்லூரி(Evening college)உருவான வரலாறு..*

ஒரு முறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து...
தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், எனக்கு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டராம்....
காமராஜர் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு கேட்க...
கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்கு தான் Lab வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணை சேர்க்க இயலாது என்று சொல்ல....

ஹஜ் கோட்டா அதிகரிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வாண்டு அனைத்து நாட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கும் ஹஜ் கோட்டாக்களை அதிகரித்து இருப்பதாக சவூதி மன்னர் சல்மான் அவர்கள் கூறியுள்ளார்கள்.
குறிப்பாக இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கேற்ப ஹஜ் விசா கோட்டாவை அதிகரித்து இருப்பதாக சவூதிக்கான இந்திய தூதரும் இந்திய ஹஜ் கவுன்சில் தலைவருமான முஹம்மது ஷாஹ் ஆலம் அவர்கள் நேற்று ஜித்தாவில் தெரிவித்தார். الحمد لله.

Monday, January 9, 2017

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் அற்புத ஜூஸ்

ஒருவருக்கு சிறுநீரக ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. சிறுநீரகத்தில் சிறு பிரச்சனை என்றாலும், உடலில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதிலும் சிறுநீர கற்கள் வந்தால், அதனால் தாங்க முடியாத அளவில் கடுமையான வலியை உணரக்கூடும்.
சிறுநீரக கற்கள் வருவதற்கு அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து தேங்குவது தான் காரணம். சிறுநீரக கற்களைக் கரைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில் அதிகளவு நீரைப் பருகுவது, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.சில நேரங்களில் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வருவதன் மூலமும், சிறுநீரக கற்கள் வருவதையும், ஏற்கனவே இருக்கும் சிறுநீரக கற்களைக் கரைக்கவும் முடியும். சரி, இப்போது சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் அற்புத ஜூஸ் குறித்து காண்போம்.

Sunday, January 8, 2017

மக்களுடைய மனதை எவ்வாறு தொடுவது?

ஒருநாள் இமாம் ஜஃபர் சாதிக் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் 
தம் மாணவர்களை நோக்கி, “நீங்கள் பயபக்தியுடவர்களாகவும், அமானிதத்தை         பேணுபவர்களாகவும், மக்களுடன் நல்ல முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாக பேசக்கூடிய சன்மார்க்க பிரசாரகர்களாகவும் திகழுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு அவர்களின் மாணவர்கள் “சுருக்கமாக கூறினால் மக்களுடைய மனதை எவ்வாறு தொடுவது?” என்றுக் கேட்டார்கள்.
அதற்கு இமாம் அவர்கள், “ நீங்கள் இறை கட்டளைக்கு பணிந்து நேரிய வழியில் நடப்பின் நீங்கள் அதிகம் அதிகமாய் பேச வேண்டியதில்லை. உங்களின் செயல்களே பெரும் முழக்கம் செய்துவிடும்; அதுவே பெரும் பிரச்சாரமாகிவிடும்.
"செயல்கள் விரிவாக பேசும் போது சொற்கள் சொற்பம் போதும்”
என்று பதில் கூறினார்கள் .