Saturday, September 26, 2015

நபி இப்ராஹீம் (அலை)

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
தன் உடலை நெருப்புக்கு கொடுத்தவர்???  தன் மகனை அறுப்புக்கு கொடுத்தவர்???
தன் கல்பை ரப்புக்கு கொடுத்தவர் யார் அவர்???
200 கோடி முஸ்லீம்களின் உள்ளத்திலும் உணர்விலும் கலந்தவர். வாழ்விலும் வணக்கத்திலும் இணைந்தவர். அனைத்து மதத்தினரும் அவரை சொந்தம் கொண்டாடியபோது நான் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என பிரகடனப்படுத்திய அந்த மாமனிதர் வேறுயாரும் அல்ல,நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான்.

ஹதீஸ்-இஹ்ராம் ஆடை அணிந்த நிலையில் மரணித்தோர் நிலை மறுமை நாளில் என்ன?

1268. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் அரஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. என அய்யூப் என்பவர் கூறுகிறார். வாகனம் அவரைக் கீழே வீழ்த்தியதால் அவரின் எலும்புகள் முறிந்து விட்டன என அம்ர் கூறுகிறார்.

அறிவை அல்லாஹ்வுக்காக

அறிவை அல்லாஹ்வுக்காக கற்பது -இறையச்சம்; அறிவை அல்லாஹ்வுக்காக தேடுவது -இபாதத்;
அறிவை அல்லாஹ்வுக்காக மீட்டுவது -தஸ்பீஹ்;  அறிவை அல்லாஹ்வுக்காக ஆராய்வது -ஜிஹாத்;
அறிவை அல்லாஹ்வுக்காக கற்பிப்பது -ஸதகா;   அறிவிப்பவர் : -முஆத் இப்னு ஜபல் (ரழி)

ஹதீஸ்-தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்

இறைத்தூதர்"ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்" அவர்கள் கூறினார்கள்'
'அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துன}ப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து' என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.

ஹதீஸ்-அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி"ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்" அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்" என்று பதில் கூறினார்கள்.
அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்" என்றார்கள்.
அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்" என்றனர்.

துஆக்கள்

அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்
பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.
ஆதாரம் : முஸ்லிம்

Wednesday, September 23, 2015

இன்ஷா அல்லாஹ்..

திண்டுக்கல் பேகம்பூரில் எதிர்வரும் 24.09.2015 வியாழக்கிழமை அன்று ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஈத்ஹா மைதானத்தில் மிக சரியாக காலை 8.00 மணி அளவில் நடைபெறும். சகோதர சகோதரிகள் உரிய நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

அரஃபா நாள் நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே