Tuesday, June 27, 2017

*ஆறு நோன்புகள்*

*ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.*
*யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார்.என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்*
*அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)* *நூல்: முஸ்லிம் 1984*

படை வீரர்களை சந்தித்த காமராசர்

1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது. நேருவின் மறைவிற்குப்பின் இந்தியத் தலைமை பலவீனமாக இருக்கும்,எனவே படையெடுப்பின் மூலம் மிரட்டிப் பணிய வைக்கலாம் எனப் பாகிஸ்தானின் இராணுவச்  சர்வாதிகாரி அயூப்கான் கருதினார். ஆனால் பிரதமர் லால்பகதூர், காங்கிரஸ் தலைவர்  காமராசர் ஆகியோர் இணைந்து காட்டிய  மன உறுதி உலகை வியக்க வைத்தது. பகைவரைத் திகைக்க வைத்தது. பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில்அமைந்திருந்த போர் முனைக்குச்சென்று வீரர்களைச்சந்தித்து உற்சாகமூட்ட காமராசர்விரும்பினார்.

Monday, June 26, 2017

பாத்திரத்தில் ஊதி குடிப்பதை நபிகள் நாயகம் ஏன் தடுத்தார்கள்?

பாத்திரத்தில் ஊதி குடிப்பதை நபிகள் நாயகம் ஏன் தடுத்தார்கள்? 1400 ஆண்டுகளுக்கு முன் நபி சொன்னது அறிவியல் ரீதியான தற்போதைய கண்டுபிடிப்பு!
குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் ஊதி குடிப்பதையும் நபிகள் நாயகம் அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா
“குடிப்பவர் தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

Sunday, June 25, 2017

ரமலான் பெருநாள் (ஈதுல் பித்ர்) நல்வாழ்த்துகள்

பேகம்பூர் மஹல்லாஹ்வாசிகள் மற்றும் அனைத்து முஸ்லீம் சமுதாய மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த #ரமலான் பெருநாள் (ஈதுல் பித்ர்)  நல்வாழ்த்துகள் ...



கர்மவீரரின் நகைச்சுவை

#கர்மவீரர்_காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.
ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார்.
உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.
உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே...ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்'' என்று கூற... உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!  

பெருநாள் தொழுகையை பள்ளிகளில் நிறைவேற்றுவது வழிகேடா???

பெருநாள் தொழுகையை பள்ளிகளில் நிறைவேற்றுவது வழிகேடா??
-வஹ்ஹாபிச சலபிகளின் வாதங்கள் ஓர் அலசல்
********************************************************** 
நோன்புப் பெருநாளுக்கு இன்னும் ஒரு சில தினங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் இடம் தொடர்பில்( முஸல்லா) வாதப்பிரதிவாதங்களும் கருத்து மோதல்களும் பல தளங்களிலும் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது.

பெருநாள் தொழுகையை திடலில் மட்டும்தான் தொழவேண்டும் என்றும் பள்ளிகளில் தொழுவது கூடாது, வழிகேடென்றும் கருத்துக்கள் அதிகளவில் வஹ்ஹாபிச,சலபிக்கூட்டத்தினரால் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.எனவே இது பற்றிய ஒரு தெளிவை வழங்கும் நோக்கில் இக்கட்டுரை வரையப்படுகிறது.