♥குழந்தையைக் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாகப் போர்த்தவும் கூடாது. எடை குறைவாகப் பிறந்த குழந்தை என்றால், குளிர்காலம் இல்லை என்றாலும்கூட சாக்ஸ், கிளவுஸ் போட்டு வைப்பது நல்லது.
♥குழந்தை பிறந்ததும், அதன் முதல் உணவு சீம்பாலாகத்தான் இருக்க வேண்டும். அதுவும், பிறந்த அரைமணி நேரத்துக்குள் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். சிஸேரியன் என்றால், தாய்க்கு மயக்கம் சிறிது தெளிந்ததும், 3 அல்லது 4 மணி நேர த்தில் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
♥அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது; அதனால் இரண்டு நாள் கழித்துகொடுக்கலாம் என்று சிலர் தள்ளி ப்போடுவார்கள். அது தவறு. ‘கொலோஸ் ட்ரம்’ எனப்படும் சீம்பாலில் தான், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான விஷயங்கள் அதிகம் இருக்கின்றன. இன்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தைக்குக்கூட, தாயிடமிருந்து பெறப்படும் சீம்பால் டியூப் வழியாகக் கொடுக்கப்படுகிறது.