Saturday, August 16, 2014

நடைப்பயிற்சி செய்ய

நடைப்பயிற்சி செய்ய முடிய வில்லையா? அவர்களுக்கா ன எளிய பயிற்சி இதோ !
தினமும் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள்கூட கால்களை வலுவுடன் வைத்திருக்க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகள் செய்வதற்கு முன்பு வார்ம் அப் செய்துவிட்டு தொடங்கினால்  கால் மேல் பலன் கிடைக்கும்.
கால்களை வலுவாக்கும் எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் விரைவில் பலன் தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.



கால்களுக்கான ஹீல் பயிற்சி – Heels Training for Leg Strength

முன்கால்விரல்களை தரையில் பதித்தபடி நின்று கொண்டு பின்னங்கால் பாதத்தை முடிந்த வரை உயர்த்திபின் கீழ்இறக்கி தரையை தொ டாமல் மீண்டும் உயர்த்தவும். இது போல் 20 எண்ணிக்கையில் இரண்டு செட்கள் செய்ய     வேண்டும்.






Heels Training for Leg Strength
இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்வதால் தண்டந்தசைவலுப்பெறும். முட்டி வலி , முதுகு வலி குணமாகும். உடலின் கீழ்ப்பகுதி வலுப் பெறும்.

தாஹி புலாவ்

சமையலிலேயே புலாவ் செய்வதென்பது மிகவும் எளிது. இத்தகைய புலாவ் ரெசிபியில் பல வகைகள் உள்ளன. தாஹி என்றால் தயிர் என்று அர்த்தம். பொதுவாக தயிர் சாதத்தை தான் தாஹி புலாவ் என்று சொல்கிறார்கள். இந்த தாஹி புலாவ்வின் சிறப்பு என்னவென்றால், இதில் தயிருடன், காய்கறிகள், பால் சேர்த்து, வித்தியாசமான முறையில் செய்வது தான். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி – 500 கிராம்
தயிர் – 250 கிராம்
பால் – 1 கப் 
வெங்காயம் – 2 (நறுக்கியது) 
காய்கறிகள் – 1 கப் ( நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி)
கிராம்பு – 6 
பட்டை – 1 இன்ச் 
ஏலக்காய் – 2 
முந்திரி – 6 
உலர் திராட்சை – 3 
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன் 
கேசரிப் பவுடர் – 1 டீஸ்பூன் (சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப் பொடி)
உப்பு – தேவையான அளவு 
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் காய்கறிகளைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், மற்றொரு அடுப்பில் அரிசியை கழுவிப் போட்டு, பாதியாக வேக வைத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு முந்திரி மற்றும் திராட்சையை எடுத்து விட்டு, அதில் வேண்டிய நெய்யை விட்டு, கிராம்பு, கட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, கிளறி ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் பாதியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு, தயிரை ஊற்றி ஒர கொதி விட்டு, பின் பாலை சேர்த்து, கேசரிப் பொடி, குங்குமப்பூ போட்டு, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, அரை மணிநேரம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான தாஹி புலாவ் ரெடி!!! இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்களுடைய சமுகவலைதள பட்டன்களை அழுத்தி பின் தொடருங்களேன்.

கருணைக் கிழங்கு வடைகறி

என்னென்ன தேவை?
கருணைக் கிழங்கு - 200 கிராம்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 8 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
குழம்புக்கு:
தக்காளி, வெங்காயம் - தலா 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கருணைக் கிழங்கைத் தோல் சீவி, துருவிக்கொள்ளவும். பொட்டுக்கலடலையை ரவை போல உடைத்துக்கொள்ளவும். துருவிய கருணைக் கிழங்கு, உடைத்த பொட்டுக்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயம், பூண்டு இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்துப் பிசையவும். இதைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உதிர்த்த வடைகளைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: ராஜகுமாரி

முருங்கை கீரை

முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும்.
பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.
உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

காமராஜர் ஒரு சகாப்தம்,

காமராஜர் ஒரு தடவை வெளியூர் போய்விட்டு எழும்பூர் ரெயில்நிலையத்தில் வந்து இறங்கினார். கிடுகிடுவென்று ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தவர், ஒரு சைக்கிள் ரிக்ஷாவை கூப்பிட்டு ஏறி உட்கார்ந்து திருமலைப்பிள்ளை சாலைக்கு போகணும் என்றார்.
தன் வீட்டு வாசலில் ரிக்ஷாவை நிறுத்தி எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டுக் கொடுத்தார். அப்போது ரிக்ஷாக்காரர் காமராஜரைப் பார்த்து, "வெளியூரா... காமராஜர் அய்யாவைப் பார்க்க வந்து இருக்கீங்களா?'' என்றார். காமராஜர் சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் விறுவிறுவென்று சென்று விட்டார்.
வாசலில் நின்றிருந்த காவலாளி ஓடிவந்து, "யோவ்... என்னய்யா நீ... அவர்தான் நம்ம முதல்-அமைச்சர்'' என்றார். ரிக்ஷாக்காரர் திகைத்துப் போய்விட்டார்.

தர்பூசணி

தர்பூசணிக்கு என்ன சிறப்பு? - இயற்கை வைத்தியம்:-
* தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
* மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...
* இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
* இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
* கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
* பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
* மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
* விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.

பாம்புகள் பற்றிய தகவல்கள்

பாம்புகள் பற்றிய தகவல்கள்:-
பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன்போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.
இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில நச்சுப்பாம்புகள் இரத்தக் குழாய்களைத்தாக்கி அழிக்க வல்லன. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இவற்றின் தோல் செதில்களைக் கொண்டுள்ளது. நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற சில பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை. இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன. நச்சுத் தன்மையுடைய பாம்பின் தலையில் <> வடிவம் காணப்படும்.
பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. பாம்புகளின் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை ‘கேட்கிறது’. பாம்பிற்கு காது மடல் இல்லை. பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளில் நுரையீரல்களில்ஒன்று மட்டுமே வேலை செய்கிறது.
எல்லாப் பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி,பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகளை இவை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக் கொள்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.
பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன. உ.ம். விரியன்கள், பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்பு தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டு(அல்லது புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ்-ஐனாஸா

ஒரு ஐனாஸா கொண்டு செல்லப்பட்டபொழுது அது பற்றி நன்மையாக கூறப்பட்டது. (அதற்கு) “கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அழகு குறிப்புக்கள்



பெண்களுக்கான அழகு குறிப்புக்கள். ஆண்களும் பயன்படுத்தலாம்.
தலை முடி:
வாரத்திற்கு 2 முறை தலை குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சரிபாதியாக எடுத்து லேசாக சூடு பண்ணி தலையில் மசாஜ் செய்து 1மணி ஊறிய பிறகு தலை குளிக்க வேண்டும்.
தயிர், எலுமிச்சை சாறு சரிபாதி எடுத்து தலையில் தேய்த்து 1/2மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம்.
முட்டையின் வெள்ளை கருவை நன்கு நுரை வரும் அடித்து தலையில் தேய்த்து 1/2மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம்.
மருதாணி பொடி அல்லது மருதாணியை அரைத்து தலையில் தடவி 1/2மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம்.
வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து தலையில் தடவி 1/2மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம்.
- இவற்றால் பொடுகு வராது; தலைமுடியும் பளபளப்பாகும்.
முகம்:
புளித்த தயிர், மஞ்சள் தூள் சரி அளவு எடுத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
சந்தனத்தை முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
சிறிது ஆலிவ் ஆயில் எடுத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
தினமும் அல்லது 1 நாள் விட்டு கஸ்தூரி மஞ்சள் தேய்க்கலாம்.
- இவற்றால் முகம் பொலிவாகும். பருக்கள் வராது. கரும்புள்ளிகள் மறையும். முகமும் பளபளக்கும்.
உதடு:
பிட்ரூட்டை அரைத்து உதட்டில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
கொத்தமல்லி இழையை அரைத்து உதட்டில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
- இவற்றால் உதடு சிவப்பாகும்.

ஹதீஸ்-மண்ணறை

"மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் முன்கர் மற்றொருவர் நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர்.

ஆரைக்கீரை அல்லது ஆலக்கீரையின் மருத்துவ குணங்கள்

ஆரைக்கீரை அல்லது ஆலக்கீரையின் மருத்துவ குணகங்கள்:-
செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர்த் தாவரம். கீரையாகச் சந்தையில் ஆரைக்கீரை அல்லது ஆலக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு. தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது. இலை மருத்துவப் பயனுடையது.
வெப்பம் நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது.
1. கீரையைச் சமைத்துண்ணத் தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.
2. கீரையைச் சமைத்துண்ணப் பகுமூத்திரம் போகும்.
3. இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும் உணவுகள்

குறைந்தது 2000 கலோரி சத்து அளவான உணவாவது வேண்டும். குறைந்தது 8 க்ளாஸ் அளவு திரவ உணவு வேண்டும். பால், ஜுஸ், சூப் போன்றவை இதில் அடங்கும். 

* கால்ஷியம் சத்து நிறைந்த உணவு, பால், பால் சார்ந்த உணவு, பச்சை காய்கறிகள், கீரை, மீன் போன்றவை சிறந்தது. 

* 1 கிளாஸ் காபி போதும். நீங்கள் குடிக்கும் காபி குழந்தையை தூக்கமின்மையாக்கி, அமைதியாய் இராமல் இருக்கும். 

* பழங்களும், காய்கறிகளும் மிகப்பெரிய உணவாக வேண்டும். 

* முழு தானிய உணவு, நார்சத்து உணவுகள் அவசியம். 

* கொழுப்பு நீக்கிய அசைவ உணவு, சோயா உணவு, கொழுப்பு நீக்கிய பால், பால் பிரிவுகள் மிகவும் நல்லது. 

* ஆயுர்வேதத்தில் சிறிது வெந்தயம் உணவில் சேர்ப்பது பால் சுரப்பதினை அதிகரிக்கும் என்பர். 

* குழந்தை பால் குடிக்கும் பொழுது மனதினை அமைதியாய் வைத்திருங்கள். 

* குழந்தைக்கு தேவையான அளவு பால் கொடுங்கள். 

* பம்ப்பிங் முறையில் பால் சேரிக்கும் பொழுது இரண்டு மார்பகங்களில் இருந்தும் பால் எடுத்து சேமியுங்கள். 

* உங்கள் குழந்தையின் உடலோடு உங்கள் உடலோடு அதாவது ஆடையின்றி ஒட்டி பால் குடிக்கும் பொழுது குழந்தை நிதானமாய் நன்கு பால் குடிக்கும் உங்களைச் சுற்றி மெல்லிய துணியினை போர்த்திக் கொள்ளலாம். 

* இரு மார்பகளிலிருந்தும் ஒரு நேரத்தில் மாரி கொடுக்கும் பொழுது ஒரு மார்பகங்களிலிருந்தும் பால் நன்கு சுரக்கும். 

* சீரகம், சோம்பு, பூண்டு, கறுப்பு எள் இவை பால் சுரம்பினை அதிகரிக்கும். 

* துளசி டீ அருந்துங்கள். 

* பருப்பு வகைகள் பால் சுரப்பதற்கு உதவுவதோடு மற்ற சத்துகளும் கிடைக்கின்றன. 

* தினமும் சிறிது பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். 

* ஓட்ஸ் உணவு இரும்பு, கால்சியம், நார்சத்து வழங்கக் கூடியது. 

* உங்களுக்கு எந்த உணவு நெஞ்செரிச்சல் தருகின்றதோ அந்த உணவு குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படும். 

* நீங்கள் குறிப்பிட்ட உணவு உண்ட சில மணி நேரத்தில் குழந்தைக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் அதனை தவிர்த்து விடுங்கள். 

* 10-12 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக பால் கொடுக்க 10 நிமிடம் முன்னாள் கண்டிப்பாய் நீர் குடியுங்கள். 

கோபத்தை அடக்க

கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்...!
-----------------------------------------------------------
1. பொருட்படுத்தாதீர்கள்.
------------------------------------
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
----------------------------------------------------------------
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
---------------------------------------------------------
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
--------------------------------------------------------------------------
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

பலாக்கொட்டையின் மருத்துவ குணங்கள்

பலாக்கொட்டையின் மருத்துவ குணங்கள்:-
நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கமாகும். அசைவ உணவைப் போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், இவை செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும்.
அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான்பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா” என்ற தாவரவியல் பெயர் கொண்டமொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாகவும் உட்கொள்ள ஏற்றது.
100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டவை.
இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.
பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மையாக அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மையாக அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.
பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். 

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும். 

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். 

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். 

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். 

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

ஹதீஸ்-தொண்ணூற்றொன்பது திரு நாமங்கள்

"அல்லாஹுதஆலாவுக்கு தொண்ணூற்றொன்பது திரு நாமங்கள் உள்ளன.அவற்றை பாடமிட்டு ஓதிவருகிறவர் சொர்க்கம் சென்றிடுவார்" என ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

இயற்கை மருத்துவம்

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
* இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.
* நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
* பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
* படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
* நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

Friday, August 15, 2014

பீட்ரூட்

நிறைய சத்துகளை கொண்ட பீட்ரூட். நிறைய மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

மணமக்களை வாழ்த்த துஆ

மணமக்களை வாழ்த்த மாநபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆ

"பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ 
  பைனகுமா ஃபீ கைர்"

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக!

பளிங்கு முகத்துக்கு...


பளிங்கு முகத்துக்கு பச்சை திராட்சை  சருமத்தை மிருதுவாக்கி பளீரிட வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.



எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சை திராட்சைச் சாறுடன்

அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய்
நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.



பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.



தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுங்கள்.

அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகம், கழுத்து, கை ஆகிய

பகுதிகளில் `பேக்’ ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். பச்சை திராட்சை,

சருமத்தை மிருதுவாக்கும். எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை,
தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர
முதுமைத் தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.


சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத்தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன்,  ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும்.


அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.



காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக

அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.

காலையில் செய்யக்கூடாத 8 விஷயங்கள்

காலையில் செய்யக்கூடாத 8 விஷயங்கள்
1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். இதுகுறித்து ஆன்மீக குரு மோகன்ஜி கூறுவதாவது, காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2. பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம்.
3 காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். மேலும், அதன்பின்னர் காப்பி, டீ போன்ற தேனீர் குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது.
4 காலை எழுந்த உடன் நமது கைப்பேசியிலோ அல்லது, கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்ற சொடுக்குகளை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது பலனாகும். இதில் நாம் 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.
5. காலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படும். இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி 'காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும்' 'மதியம் அளவரசனைப் போல சாப்பிட வேண்டும்' 'அரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும்' என்று கூறியுள்ளனர். காலையில் பயிர் வகைகள், பிரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.
6. பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே கடும் அவதிகளுக்குள்ளாகி அலுவலகதத்ற்கு செல்வது உண்டு. இவ்வாறு செல்வதால் மனிதர்களின் நேற்மறை ஆற்றலை இழக்கக் கூடும். 10 மணிக்கு முன்னாள் இயற்கையான சூழலை பார்ப்பதும், பறவைகளின் சத்தம், கடலின் ஓசை, மந்ரிரங்களை ஓதுவதும் சிறந்த செயலாகும்.
7 நமது உணவுகளை தயார் செய்வது பற்றி முன்கூட்டியே முடிவெடுத்து அதனை இரவே
தயார் செய்து கொள்வது என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.
8 பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முன் மற்றவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்.

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்

இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத்

இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத்
நாம் இந்தியர்கள் ஆனால் நமது சகோதரர் இவரை எத்தனை பேருக்கு தெரியும்? சில கயவர்கலால் மறைக்க பட்டது
Freedom Fighter shaukat hayat – Indian Army Colonel
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்.
இந்திய சுதந்திரப் போரில் செறுகளமாடிய மாவீரர்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பல இந்த நாடு அறிந்தே உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப்போர் உலகையே இருகூறாக மாற்றியது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் நேசப்படைகளும், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் அச்சு நாடுகள் என்ற பெயரில் ஓர் அணியும் மிகப்பெரிய யுத்தத்தில் இறங்கின.
இந்த மாபெரும் யுத்தத்தில் இரு அணிப் படைகளும் உலக வரைபடத்தின் அமைப்பையே மாற்றின. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் புரட்சியின் மூலம் அந்நியரை விரட்ட வேண்டும் என அதிரடி முடிவெடுத்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் ஏராளமான உழைக்கும் பாட்டாளி மக்கள் பங்கேற்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியை அடியோடு அகற்றி வீழ்த்திட ‘டெல்லி சலோ’ (டெல்லி செல்வோம்) என்ற முழக்கத்தினை முன்னெடுத்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். முதல் இந்திய சுதந்திரப் பிதாமகர் மாமன்னர் பகதூர்ஷா வீரத்தியாகம் செய்த ரங்கூன் மாநகரில் இருந்து வீர முழக்கத்துடன் இந்தப் படை புறப்பட்டது.
இதனிடையே இரண்டாம் உலகப்போரும் வெடித்துவிட்ட நிலையில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாடுகள் இடம்பெற்ற அச்சு நாடுகள் அணியில் நேதாஜி தலைமையிலான படைகள் இணைந்தன. 1944 ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய தேசிய ராணுவப் படைகள் பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து கடும் தாக்குதலைத் தொடுத்தது. தளபதி கர்னல் சவுகத் ஹயாத் மாலிக் தலைமையிலான இந்திய தேசிய ராணுவப் படைகள் பிரிட்டிஷ் ராணுவத்தை விரட்டியபடி மணிப்பூர் நகருக்குள் நுழைந்தன.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அழகிய லோக்தாக் ஏரியின் கரையில் ‘மொய்ராங்’ என்ற எழில்மிகுந்த நகரம் கர்னல் சவுகத் ஹயாத் மாலிக் அவர்களின் தலைமையிலான படைகளின் வசம் வந்தது. இந்திய மக்களின் வீரம்செறிந்த படைகள் கைப்பற்றிய முதல் இடம் இதுவே.
மேலும் சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட இடம் ‘சுதந்திர மொய்ராங்’ என்றால் அது மிகையன்று. இந்திய தேசிய ராணுவத்தின் முதல் வெற்றிக் கொடி ஏற்றி இன்று 69 ஆண்டுகள் ஆகின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோசும், கர்னல் சவுகத் ஹயாத் மாலிக்கும் இந்திய மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூரப்படுவார்கள் என்பது திண்ணம்..

எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்...!


எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்!

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற
வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.



அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.
ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால்,
நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒரு சில உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க
வேண்டும். அத்தகைய டயட்டை கீழே கொடுத்துள்ளோம்.



அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல்
எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்.



1. தண்ணீர்:
தினமும் குறைந்தது 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல்
இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின்
மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும்
குறைந்துவிடும்.



2. உப்பு:
உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில்
உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக
தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.



3. தேன்:
வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால்,
தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.



4. பட்டை:
தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.



5. நட்ஸ்:
உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள்
அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில்
உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும்
இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது
மிகவும் நல்லது.



6. அவகேடோ:
அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது.
மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.



7. சிட்ரஸ் பழங்கள்:
பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி,
உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.



8. தயிர்:
தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும்
ஊட்டச்சத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.



9. கிரீன் டீ:
அனைவருக்குமே கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும்
பலரும் இந்த கிரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்து வாருங்கள்.



10. சால்மன் மீன்:
சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின்
செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த
மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.



11. பெர்ரிப் பழங்கள்:
பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால்
அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.



12. ப்ராக்கோலி:
ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.



13. எலுமிச்சை சாறு:
வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன்
சேர்த்து குடித்தால் இதற்கான பலன் உடனே தெரியும்.



14. பூண்டு:
எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது.
எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள்
கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.



15. இஞ்சி:
உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க  பெரிதும்  உதவியாக இருக்கும். மேலும் இதில்  அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது  நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.



மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடை விரைவில் குறையும்.