Saturday, August 30, 2014

கோவைக்காய்

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய் :-
கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

சீத்தாப்பழம்

சர்க்கரை நோயா? - சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்!  
நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை. அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும். 

Friday, August 29, 2014

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ்:
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.

இலந்தை

இலந்தை (ZIZIPHUS JUJUBA) !
நம்மில் பலபேர் அருவெறுப்புடன் நோக்கும் ஒரு அரிய பழம் இது. வட்டவட்டமான இலைகளையும், முட்களையும் கொண்டிருக்கும் இதன் மரம் அதிகளவாய்ப் பன்னிரண்டு அடி உயரம் மட்டுமே இருக்கும். இக்கனியில் காட்டு இலந்தை, சீமை இலந்தை என இரண்டு வகையுண்டு. மருந்து என்று வருகின்றபொழுது, நாம் இந்தக் காட்டு இலந்தை, அதாவது சின்ன இலந்தையைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. அப்படிச் சின்ன இலந்தை கிடைக்காத நிலையில் நாம் சீமை இலந்தை எனப்படும் பேரிலந்தையைப் பயன்படுத்தலாம்.

ஹதீஸ்-ஜும்ஆத் தொழுகை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக்
கேட்கிறார்கள்.“
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)                                             நூல்: புஹாரி அத்தியாயம் 11

ஹதீஸ்கள்-ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆத் தொழுகை

883. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 11. 

ஹதீஸ்-நான்கு கேள்விகள்

தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார்,
தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார், என்ற நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

கண்டறிந்தவர்

* ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் - ஃபிராங்க்விட்டில்
* பார்வையற்றவருக்கான எழுத்துமுறையை கண்டறிந்தர் - லூயி பிரெய்லி

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை எப்படி அறிவது…?

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது.குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை. ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள். அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.

போலீஸ் முத்திரை

போலீஸ் முத்திரை தெரிந்ததும் தெரியாததும்.....

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் :
1. போன்'னை இடது காதில் வைத்து பேசுங்கள்!
2. மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது!

Thursday, August 28, 2014

அரசியலில் குரு-சிஷ்ய நட்பு

அரசியலில் குரு-சிஷ்ய நட்புக்கு உதாரணமாக யாரைச் சொல்லலாம்?
தீரர் சத்தியமூர்த்தியையும் பெருந்தலைவர் காமராஜரையும் சொல்லலாம்.
சத்தியமூர்த்தியை வைத்து விருதுநகரில் கூட்டம் போட்டவர் காமராஜர். அன்றைய காங்கிரஸில் ராஜாஜியா, சத்தியமூர்த்தியா என்ற போட்டிதான் இருந்தது. அதில் சத்தியமூர்த்தி பின்னால் காமராஜர் நின்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி ஆனபோது, சிஷ்யன் காமராஜர் செயலாளராக ஆனார். தனக்குத் தெரிந்த எல்லா டெல்லித் தலைவர்களையும் காமராஜருக்கு அறிமுகம்செய்து வைத்தார் சத்தியமூர்த்தி. சில ஆண்டுகள் கழித்து நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜரை நிறுத்தினார் சத்தியமூர்த்தி. அப்போது செயலாளர் பதவியை சத்தியமூர்த்தி வகித்தார். அவருக்கு கீழே செயலாளராக இருப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். சிஷ்யனின் தலைமையை குரு ஏற்றுக் கொண்ட காலம் அது. 1943-ல் சத்தியமூர்த்தி இறந்துபோனார். 11 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன காமராஜர், பதவி ஏற்பதற்கு முன்னதாக நேராக சத்தியமூர்த்தியின் வீட்டுக்குப் போய் அவரது மனைவி பாலசுந்தரத்து அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கினார். காங்கிரஸ் கட்சித் தலைமையகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் என்று பெயரும் சூட்டினார்.
தன்னுடைய சிஷ்யன் வளர்வதைப் பார்த்து பெருமைப்பட்டார் குரு. தன்னுடைய குருநாதர் புகழை கடைசி வரை பரப்பினார் சிஷ்யர். இந்தக் காலத்தில் இது சாத்தியமா?
ஜூனியர் விகடன்

Wednesday, August 27, 2014

ஹதீஸ்-வீட்டினுள்_நுழையும்_முன்_மூன்று_முறை_அனுமதி_கோரல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"வீட்டில் நுழைவதற்கு மூன்று முறை அனுமதி கோர வேண்டும். உனக்கு அனுமதி வழங்கப்பட்டால் உள்ளே செல். இல்லையெனில் திரும்பி விடு."
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)                                                                   நூல் : புஹாரி - 6245, முஸ்லிம் - 2153

இயற்கை மருத்துவம்,

உடல் வலி, தலைமுடி உதிர்வதை தடுக்க:
கரிசாலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து
இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும். அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். அஅப்படி த டவினால் தலை முடி உதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும்.
கண் நோய்களை குணமாக்க:
பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையில் கண்ணாடி அணியத் தேவையிராது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றையும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.
காய்ச்சல் நீங்க:
துளசி இலை 50, மிளகு 20 அல்லது முப்பது.
துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இம்மாத்திரைகளை காலை, மாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும்.
சளி தொல்லை, சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் நீங்க:
சுக்கு ஐந்து கிராம், கண்டங்கத்திரி வேர் முப்பது கிராம், கொத்த மல்லி முப்பது கிராம், சீரகம் 2 கிராம், தண்ணீர் 2 லிட்டர்
தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும்.
காயப்புண் நீங்க:
அரிவான்மனைப் பூண்டு இலை 20 ஐ நன்றாக கசக்கி அதன் சாற்றை காயத்தில் இட்டால் புண் விரைவில் ஆறும்.
தீப்புண், தீக்காயம் நீங்க:
வேப்பம்பட்டையை இடித்து கசாயமாக்கி காய்ச்சி தடவ வேண்டும். வாழைப்பட்டை சாறு பிழிந்து காயத்தில் தடவ வேண்டும்.
தலைவலி நீங்க:
அரை லிட்டர் தண்ணீர், சங்குப் பூக் கொடி பச்சை வேர் நாற்பது கிராம்.
சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய நீருக்கு காக்கணக் குடிநீர் என்று பெயர். காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும்.
தொண்டைவலி நீங்க: சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும்.
பல்வலி நீங்க:
சுடுதண்ணீரில் உப்பைப் போட்டு வாiயு நன்றாகக் கொப்பளித்தாலும், சுக்குத் துண்டை வாயில் போட்டுக் கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கி விடும்.
வாய்புண், குடல் புண், வாயுத் தொல்லை நீங்க:
வெங்காயம், மிளகுதூள், உப்பு, தக்காளி, மணத்தக்காளி கீரை.
மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால் வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.
சளி கோலை, காது மந்தம் நீங்க:
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி அதன் பிறகு தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் சளி கோலை, காது மந்தம் நீங்கிவிடும்.

நோயின்றி வாழ

நோயின்றி வாழ உறுதி கொள்வோம்
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சாவல் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந்துகளை, உணவு பொருட்களை, மூலி கைகளை நமக்கு அடையாளம் காட்டி மருந்தாக்கி நோய் தீர்க்கும் கலையை மருத்துவத்தை வழங்கிய மகான்கள்தான் சித்தர்கள்.

ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க

ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க
புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடல் தசைகள் பெரிதாகி உடல் எடையும் அதிகரிக்கும்.
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!

பதிவு செய்த நாள்: 26 Aug 2014 11:30 pm
என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.வைரம்

அரபுலகத்தில் தலை சிறந்த 100 இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு முஸ்லீம் தொழிலதிபர்கள் தேர்வு!

அரபுலகத்தில் தலை சிறந்த 100 இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு முஸ்லீம் தொழிலதிபர்கள் தேர்வு!
அரபுலகத்தில் தலை சிறந்த 100 இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு முஸ்லீம்கீ தொழிலதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அதில் தலை சிறந்த 10 இந்தியர்களில் ஒருவராக கீழக்கரை தொழிலதிபர் செய்யது எம். சலாஹூதீன் 6வது இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மனித உடலில் உள்ள பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள்!

மனித உடலில் உள்ள பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள்!

பதிவு செய்த நாள்: 27 Aug 2014 9:20 am
மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்:-

Tuesday, August 26, 2014

இயற்கை மருத்துவம்

சளி, இருமல் நீங்க:
திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள்
செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம்.
உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்:
இஞ்சி, வெற்றிலை, பூடு, மல்லி
செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும்.
வாயு மருந்து:
பூடு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய்
செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும்.
பித்தம் அதிகம் இருப்பின்:
இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி,
செய்முறை: இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க:
சுக்கு, பூடு, வாவளங்காய், பெருங்காயம், இந்தி பூ, ஓமம்
செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும்.
விஷக்குடி மருந்து:
சுக்கு, மல்லி, திப்பிலி, வெற்றிலை, கருஞ்சீரகம், வேப்பிலை கொழுந்து,ஓமம், மல்லி.
செய்முறை: இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும்.

மழை காலங்களில் பாதுகாப்பான மின்சாரம் - கடைப்பிடிக்க 31 வழிமுறைகள்!


* மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்யுங்கள்.

* ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள்.

* மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ‘ஆப்’ செய்து விடுங்கள்.

* ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.

* ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்)யை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் ஸ்விட்சு போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர்.

* உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்கதீர்கள்.

* டி.வி. ஆண்டனாவை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கட்டாதீர்கள். டி.வி. ஆண்டனாவின் ஸ்டே வயரை மின் கம்பத்தில் கட்டாதீர்கள். கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.

* சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமையுங்கள்.

* ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள்.

* மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள stay wire -ன் மீது அல்லது மின் கம்பத்தின்மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலைத் தவிர்க்கவும்.

* குளியலறையிலும் கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்தாதீர்கள்.

* சுவற்றின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.

* மின் இணைப்பிற்கு extension cord–கள் உபயோகிக்கும் போது அவைகளில் பழுதுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

* மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீர்கள்.

* மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. 

* மழைகாலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், stay வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.

* மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல் நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள், அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் அளியுங்கள்.

* மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்டவேண்டும். மேலும் விபரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத்துறை அலுவலர்களை அணுகவும்.

* மின்வாரிய மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லாதீர்.

* மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.

* அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும்.

* மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில், சுவிட்சை ஆப் செய்து வைக்கவும்.

* மின்சார தீவிபத்துக்களுக்குண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீவிபத்து ஏற்படும்போது பயன்படுத்தவேண்டும். உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயணப் பொடி (DCP)அல்லது கரியமில வாயு (Co2) ஆகிய தீயணைப்பான்களைப் பயன்படுத்தவும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

* தீ விபத்து மின்சாரத்தினால் ஏற்பட்டதெனில், உடனே மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட வேண்டும்.

* எந்த மின் சர்க்யுட்டையும் அளவுக்கு மீறி பளு ஏற்றக் கூடாது. ஸ்விட்ச் மற்றும் பியூஸ் போன்றவைகளை மாற்றும் போது சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்தவேண்டும்.

* இடி அல்லது மின்னலின்போது வெட்டவெளியில் இருக்காதீர்கள். இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரிட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள். இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ, தஞ்சம் புகாதீர்கள்.

* இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலுங்கள். 

* இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். 

* இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். 

* இடி அல்லது மின்னலின்போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

'பழைய சாதம்

'அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி பெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல... 100 சதவிகிதம் உண்மை. 'ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துணைப் பேராசிரியர் உஷா ஆன்டனி. பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு 'பழைய சாதம்’.
'நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது. அப்படி என்னதான் அந்த உணவில்  என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கினேன்' என்ற உஷா, தொடர்ந்து அதன் நன்மைகளைக் கூறினார்.
'சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும்போது அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால்தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், 'பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச் சத்தும் (ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம். சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட, தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது.
மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறுமுட்ட சாப்பிட்டால்தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, 'பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும்.
பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குமேல் பழைய சாதத்தை அறையின் வெப்பநிலையில் வைக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்' என்கிற உஷா ஆன்டனியின் மாணவிகள் தற்போது, சாமானியர்கள் சாப்பிடும் சத்து நிறைந்த உணவுகளான கேப்பைக் கூழ், கம்மங் கூழ் பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
பழைய சாதம், பச்சை மிளகாய் ஒரு பார்சல்....!
செரிமானத்துக்கு சோற்று நீர்!
''பழைய சாதம் பற்றி, நம் பாரம்பரிய மருத்துவம் என்ன சொல்கிறது?'' என்று சித்த மருத்துவர் திருநாராயணனிடம் கேட்டோம்.
'அகத்தியர் குண வாகடம்’ என்னும் மருத்துவ நூலில் பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது. பொதுவாகவே, வெயில் காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். பித்தம் என்பது நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும் அதிகமாக ஏற்படும். செரிமான நெருப்பு (Digestive Fire) அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும். உடல் எரிச்சல் ஏற்படும். இவை எல்லாவற்றையும் 'நியூட்ரலைஸ்’ செய்து, உடம்பின் தேஜஸைக் கூட்டுகிறது பழைய சோறு. 'பிரமேயம்’ எனப்படும் மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத் தூண்டும் ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளை இந்த உணவு கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் எதிர்க் குணமான உடலில் கபத்தின் தன்மை அதிகரிக்கிறது. அதனால்தான், பழையது சாப்பிட்டதும் நமக்குக் குளுமையான உணர்வு ஏற்படுகிறது.
   சுருங்கச் சொன்னால், 'ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும்’ '' என்கிறார் திருநாராயணன்.
- பிரேமா நாராயணன்
படம்: ச.இரா.ஸ்ரீதர்

இயற்கை மருத்துவம்,

கற்ப மூலிகை - கரிசலாங்கண்ணி
இரும்புச்சத்து அதிகமுள்ள மூலிகைகளில் கரிசலாங்கண்ணியும் ஒன்று.
இரத்த சோகை நீங்க
உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் உடல் சோர்வடையும். இரத்த சோகை மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒருகொடிய நோயாகும். இந்த ரத்த சோகை மற்ற நோய்களுக்கு நுழைவு வாசலாகவும் அமையும்.
இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங் கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்தச் சோகை நீங்கும்.
கல்லீரல் பலப்பட
உடலின் செயல்பாடுகளை தூண்டுவதும், செயல் படுத்துவதும் கல்லீரலின் முக்கிய பணியாகும். கல்லீரல் நன்கு செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். மது பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் எளிதில் பாதிப்படையும். இதனால் இவர்களின் கண்கள், மூளை, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்பால் உடலில் பித்தம் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்துவிடுவதால் காமாலை நோய் உண்டாகிறது. கல்லீரல் பாதிப்பே உடலின் பாதிப்பாகும். கல்லீரலைப் பலப்படுத்த கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.
கரிசலாங்கண்ணியின் சமூலத்தை (இலை, வேர், காய், பூ) நிழலில் உலர்த்தி பொடித்து அதனை கஷாயம் செய்தோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறையும். தற்போது சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கரிசலாங்கண்ணி மாத்திரை கிடைக்கிறது. பல ஆங்கில மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.
காமாலை வந்தால் காலனுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அந்த காலனை விரட்டி, காமாலையை அகற்ற கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து.
இரத்தத்தை சுத்தப்படுத்த
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.
கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத் தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.
ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.
மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்களைப் போக்கும்.
கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். கண்ணுக்கு மை அழகு என்ற பழமொழி, அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கயத்துக்கும் சிறந்ததாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
கரிசலாங்கண்ணி பொடி - 50 கிராம்
திரிபலா பொடி - 50 கிராம்
பிரம்மி பொடி - 50 கிராம்
வல்லாரை - 50 கிராம்
கீழாநெல்லி - 50 கிராம்
எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
முடி உதிர்வதைத் தடுக்க
கரிசலாங்கண்ணி தலை முடியை கருமையாக்கும். முடி உதிர்வதைத் தடுக்கும்.
கரிசாலைச்சாறு - 250 மி.கி.
கறிவேப்பிலை சாறு - 100 மி.கி.
மருதோன்றிச் சாறு - 10 மி.கி.
ராமிச்சம் - 10 கிராம்
கார்கோல் - 10 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
செம்பருத்திப் பூ - 10 கிராம் (உலராத)
இவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வந்தால், உடல் சூடு குறையும். முடி கறுமையாகும். கூந்தல் நீண்டு வளரும்.

கரிசலாங்கண்ணி

கற்ப மூலிகை - கரிசலாங்கண்ணி
இரும்புச்சத்து அதிகமுள்ள மூலிகைகளில் கரிசலாங்கண்ணியும் ஒன்று.
இரத்த சோகை நீங்க
உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் உடல் சோர்வடையும். இரத்த சோகை மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஒருகொடிய நோயாகும். இந்த ரத்த சோகை மற்ற நோய்களுக்கு நுழைவு வாசலாகவும் அமையும்.
இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங் கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்தச் சோகை நீங்கும்.
கல்லீரல் பலப்பட
உடலின் செயல்பாடுகளை தூண்டுவதும், செயல் படுத்துவதும் கல்லீரலின் முக்கிய பணியாகும். கல்லீரல் நன்கு செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். மது பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் எளிதில் பாதிப்படையும். இதனால் இவர்களின் கண்கள், மூளை, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்பால் உடலில் பித்தம் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்துவிடுவதால் காமாலை நோய் உண்டாகிறது. கல்லீரல் பாதிப்பே உடலின் பாதிப்பாகும். கல்லீரலைப் பலப்படுத்த கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.
கரிசலாங்கண்ணியின் சமூலத்தை (இலை, வேர், காய், பூ) நிழலில் உலர்த்தி பொடித்து அதனை கஷாயம் செய்தோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறையும். தற்போது சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கரிசலாங்கண்ணி மாத்திரை கிடைக்கிறது. பல ஆங்கில மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.
காமாலை வந்தால் காலனுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அந்த காலனை விரட்டி, காமாலையை அகற்ற கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து.
இரத்தத்தை சுத்தப்படுத்த
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.
கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத் தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.
ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.
மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்களைப் போக்கும்.
கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். கண்ணுக்கு மை அழகு என்ற பழமொழி, அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கயத்துக்கும் சிறந்ததாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
கரிசலாங்கண்ணி பொடி - 50 கிராம்
திரிபலா பொடி - 50 கிராம்
பிரம்மி பொடி - 50 கிராம்
வல்லாரை - 50 கிராம்
கீழாநெல்லி - 50 கிராம்
எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
முடி உதிர்வதைத் தடுக்க
கரிசலாங்கண்ணி தலை முடியை கருமையாக்கும். முடி உதிர்வதைத் தடுக்கும்.
கரிசாலைச்சாறு - 250 மி.கி.
கறிவேப்பிலை சாறு - 100 மி.கி.
மருதோன்றிச் சாறு - 10 மி.கி.
ராமிச்சம் - 10 கிராம்
கார்கோல் - 10 கிராம்
கருஞ்சீரகம் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
செம்பருத்திப் பூ - 10 கிராம் (உலராத)
இவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வந்தால், உடல் சூடு குறையும். முடி கறுமையாகும். கூந்தல் நீண்டு வளரும்.

மலச் சிக்கல் & மூல நோய்

மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆங்கிலத்தில் Hemorrhoids என்று அழைப்பார்கள். ஆசன வாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மிகவும் முக்கிக் கடினமாக மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலைச் சுற்றி உள்ளது வெளி மூலம்.
இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தக் கசிவைக் காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தைப் பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது.
இதை Prolapsed hemorrhoids என்று சொல்லுவோம். இங்கு வலியும் அரிப்பும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வெளி மூலத்தில் ரத்தம் சேர்ந்து ரத்தக்கட்டி (Thrombus) உருவாகலாம். இதனால் கடும் வேதனை, வீக்கம், அழற்சி போன்றவை உருவாகலாம். கீழ்ப் பகுதி ஆசன வாயிலில் அழுத்தம் ஏற்படுவதால் இந்நிலை உருவாகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, நீண்ட வயிற்றுப் போக்கு, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்ற வற்றால், இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும். சில நேரம் மூலத்தில் ரத்தம் அதிகமாகப் போய் ரத்தசோகை (Anemia) வருவதற்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் உள் மூலத்தால் வரும் ரத்தம் நின்று போய், திசுக்களே அழியும் நிலை (Stramulation) ஏற்படும்.
நம்முடைய கழிவறையிலேயே மாட்டும்படியான Sitz bathகள் கிடைக்கின்றன. ஆசன வாயைச் சுற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வென்னீரால் நன்றாகக் கழுவ வேண்டும். சோப்பு போட்டால் சில நேரம் எரிச்சல் அதிகரிக்கும். மிகவும் நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளான வெண்டைக்காய், பீன்ஸ், புடலங்காய், கத்திரிக்காய், சேனை, சிறிய வெங்காயம் போன்றவை மிகச் சிறந்த உணவு வகைகள்.
சின்ன வெங்காயமும் மோரும் இதற்கு மிகவும் சிறந்தது என்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மலப் பிரவிருத்தி ஏற்பட்டு அபான வாயு கீழ்முகமாக இயங்கும். முக்குதல் குறையும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். 30 முதல் 40 கிராம் வரை நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மலம் போக வேண்டும் என்று தோன்றினால், உடனே போக வேண்டும்.
மருந்துகள்
# 5 கிராம் ஷட்தர்ண சூர்ணத்தை மோரில் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
# கடுக்காய் லேகியம் 15 கிராம் இரவு கொடுத்தால் காலையில் மலம் நன்றாகப் போகும்.
# சுகுமார கிருதம் 1 ஸ்பூன் கொடுத்தால் மலம் நன்றாகப் போகும்.
# சிறுவில்வாதி கஷாயத்தில் கைசோர குக்குலு சேர்த்துச் சாப்பிட, ரத்த நாளங்களில் உள்ள அழுத்தம் மிகவும் குறையும்.
# ரத்தக்கசிவு இருக்கும்போது முறிவெண்ணெயும், சததௌத கிருதம் என்று சொல்லக்கூடிய ஆல், அரசு, அத்தி, இத்தி போன்றவற்றால் கடைந்து எடுக்கப்பட்ட நெய்யைப் பஞ்சில் முக்கி வைப்பது மிகவும் நல்லது.
# கடுக்காய்ப் பொடி ஒரு சுலபமான மருந்து. அதை மோரில் கலந்து வெல்லமும் சேர்த்துச் சாப்பிட உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் தொட்டால்வாடி இலையை அரைத்து 10 மி.லி. மோரில் கலந்து குடிக்க, உடனே பலன் கிடைக்கும்.
மலச் சிக்கல் செய்ய வேண்டியவை
# முதலில் மலச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும்
# அதிகக் கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.
# ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரக் கூடாது.
# அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.
# தேங்காய் எண்ணெய் (அ) விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும்.
# Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று தடவை வரை செய்யலாம்.
உணவில் கவனம்
# அகத்திக் கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.
# மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம்.
# கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது.
# மீன், கருவாடு, கோழி கூடாது.
# மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
பொதுவான தடுப்பு முறைகள்
# அதிகக் காரம் கூடாது. அதிகப்படியாகப் புளிப்பு, இனிப்பு கூடாது.
# இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப் பயணம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
மலச் சிக்கல்: தொடரும் கோளாறுகள்
# மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல்.
# வாயு அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்படும்.
# பசியின்மை ஏற்பட்டு ரத்தக் குறைவு நோய் உண்டாக்கும்.
# நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும்.
# குடல்வால் நோய் ஏற்படும்.
# மாதவிலக்குக் கோளாறுகள் ஏற்படும்.

திருச்சி விமான நிலையத்தில் தொழுகை அறை !!!

உலகில் உள்ள முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி சர்வதேச விமான நிலையமும் செயல்பட்டு வருகிறது …