அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
ரிஃபாஆ இப்னு ராஃபிவு(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு
நன்றி : நூருல் நூருல் - துஆக்களின் தொகுப்பு