இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது தவறான புரிதல் ஆகும்.
ஒரே ஒரு வரலாற்றுக் குறிப்பைக் கூறுகின்றேன், கேளுங்கள்.
நீங்கள் பள்ளிவாசலுக்குள் போய் இருக்கின்றீர்களா? இல்லையேல் நான் உங்களை பள்ளிவாசலுக்குள் அழைத்துச் செல்கின்றேன், உங்களுக்கு விருப்பம் இருக்கின்ற பட்சத்தில்தான்.
பள்ளிவாசலுக்குள் இமாம் (தலைவர்) நின்று தொழுகையை வழிநடத்துகின்ற இடத்துக்கு அருகில் மூன்று படிக்கட்டுகளைக் கொண்ட மேடை ஒன்று உள்ளது. இதனை மிம்பர் என்று சொல்வார்கள். உலகத்தில் மிம்பர் இல்லாத பள்ளிவாசலே இல்லை. மறுமை நாள் வரை - உலகம் அழிகின்ற நாள் வரை - உலகில் கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் அனைத்தும் மிம்பருடன்தான் கட்டப்படும்.
இந்த மிம்பருக்குப் பின்னால் ஒரு பெண்மணி இருக்கின்றார்.