Saturday, December 31, 2016

சென்னை உஸ்மான் சாலை

சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? 
இதோ.........
"முதல் தலைமுறை மனிதர்கள்".
வரலாற்றாசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் புத்தக வெளியீடு - 25.12.2016.
சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். 

துத்திக்கீரை

கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரைக் கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம்.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்கள் உடம்பை ஆக்கிக் கொண்டு விட்டனர் பலர்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூலிகை சமையல் என்னும் தலைப்பில் ஒவ்வொரு கீரையைப் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் கிராமங்களில் அதிகம் கிடைக்கும் துத்திக்கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்

துத்திக் கீரை

சுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும்.

மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ்
சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதை
எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுறும்
இப்படியீற் றுத்தியிலை யை

Friday, December 30, 2016

தினம் 3 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) 
உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

பளபள கூந்தலுக்கு....

எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:
ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.
வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரே நாளில் உடலில் ஏற்படும் நன்மைகள்!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) 
சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி, பூண்டு ஒரு பிரமாதமான உணவுப்பொருள். பலர் அதனை உணவில் சேர்த்துச் சமைக்கிறார்கள், சிலர் அப்படியே  பச்சையாகச் சாப்பிட்டு விடுகிறார்கள்.                                                                                                                                                                             பூண்டைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும், இரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூரத் துரத்திவிடலாம்.                                                                                                         அதேபோல், பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக் கொள்கின்றன, ஆன்ஜியோடென்சின் II ஹார்மோனைத் தடுக்கின்றன.

Thursday, December 29, 2016

எப்படியெல்லாம் அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்த முடியும்?

அரிசி கழுவிய தண்ணீரை  வீணாக்காமல் சருமத்தை அழகுபடுத்தப் பயன்படுத்தலாம்.

· அரிசி கழுவிய தண்ணீர் கொண்டு முடியை அலசினால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.
·  அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்புபாகற்காய் போன்றவற்றைச் சமைக்கும் போது பயன்படுத்தலாம். குறிப்பாகதுவர்ப்புச் சுவையுடைய காய்கறிகளைச் சமைக்கும் போதுஇந்த தண்ணீரைப் பயன்படுத்தினால்,துவர்ப்பு குறையும். சமையலில் இந்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் உணவின் சுவை கூடும்.

Wednesday, December 28, 2016

திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்”

Image may contain: ocean, outdoor and water
16 ஆயிரம் அடி உயரமுடைய
மலையின் மேல் ஒரு கப்பல்
நிலை கொண்டுள்ளது.ு
“திருக்குர்ஆன்
வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம்
அடி உயரமுடைய மலையின் மேல்
உள்ள ஒரு கப்பல்” பூமியே!
உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்!
வானமே நீ நிறுத்து!”
என்று (இறைவனால்) கூறப்பட்டது.
தண்ணீர் வற்றியது. காரியம்
முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல்
ஜூதி மலை மீது அமர்ந்தது.
“அநீதி இழைத்த கூட்டத்தினர்
(இறையருளை விட்டும்)
தூரமாயினர்”எனவும் கூறப்பட்டது .
(திருக்குர்ஆன் 11:44.) இதில்
சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர்
நம்பிக்கைகொள்வதில்லை”
(திருக்குர்ஆன் 26:121.).
“அவரையும், கப்பலில்
இருந்தோரையும்
காப்பாற்றினோம்.இதை
அகிலத்தாருக்குச்
சான்றாக்கினோம்” (திருக்குர்ஆன்
29:15.)
”பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய
(கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம்.
அது நமது கண்காணிப்பில் ஓடியது.
இது (தன் சமுதாயத்தால்)
மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு)
உரிய கூலி. அதைச் சான்றாக
விட்டு வைத்தோம்.
படிப்பினை பெறுவோர் உண்டா? “.
(திருக்குர்ஆன் 54:13-15.)
இவ்வசனங்களில் நூஹ் நபியின்
கப்பலை அத்தாட்சியாக மலையின்
மேல் விட்டு வைத்திருப்பதாக
திருக்குர்ஆன் கூறுகின்றது.
மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம்
வந்ததால் ஜூதி மலைக்கு மேல்
கப்பல் நிலை கொண்டது.
இம்மலை துருக்கி நாட்டின்
எல்லையில் அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான்
மாவட்டத்திலுள்ளஅரராத் என்ற
மலை தான்
ஜூதி மலை என்று ஆராய்ச்சியாளர்கள்
கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க
நாட்டைச்சேர்ந்தஒருமலையேறும்
குழு அம்மலையை ஆய்வு செய்து
பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல்
துண்டுகள் இருந்ததைக்
கண்டு பிடித்துள்ளது.1969ஆம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம்
திகதியன்று கிழக்குத்துருக்கியின்
ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள
அரராத் மலைத் தொடரில்
ஒரு கப்பலின் சில மரப்
பகுதிகளை அந்த
ஆராய்ச்சிக்குழுகண்டுபிடித்தது.
இம்மலைத் தொடரின்
மேற்குப்பகுதியில், 16,000
அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட
பாறைகளுக்கிடையே20 மீட்டர்
ஆழத்தில், அக்கப்பலின் மரப்
பலகைகள் புதைந்து கிடந்தன. 16
ஆயிரம் அடி உயரமுடைய மலையின்
மேல் ஒரு கப்பல்
நிலை கொண்டுள்ளது என்றால் அந்த
அளவுக்கு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அதன் காரணமாக அந்த மலைக்கும்
மேலே கப்பல்
மிதந்து கொண்டு இருக்கும்
போது வெள்ளம் வடிந்திருக்க
வேண்டும். இதனால் அந்தக் கப்பல்
மலையின் மீது நிலைகொண்டிருக்க
வேண்டும் என்று ஆய்வாளர்கள்
ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன்
1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி
விட்டது. மலையின் மேலே கப்பலைக்
கொண்டு போய் வைத்தது யார்? என்ற
கேள்விக்குத் திருக்குர்ஆன்
மட்டுமே தக்க விடை கூறுகிறது.
‘அக்கப்பலை அத்தாட்சியாக
விட்டு வைத்திருக்கிறோம்;
சிந்திப்பவர்உண்டா?’ என்று கூறி,
சமீபத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த
உண்மையை 14
நூற்றாண்டுகளுக்கு முன்பே
திருக்குர்ஆன்
முன்னறிவிப்பு செய்துள்ளது.
திருக்குர்ஆன், “இறைவனின்
வேதம்”என்பதற்கு இது
சான்றாகவுள்ளது. இந்த சம்பவங்கள்
மூலம் இஸ்லாம் எவ்வாறான
மார்க்கம் என்றும் இஸ்லாம்
மட்டுமே உண்மையான மார்க்கம்
என்றும் அறிய முடிகிறது. நன்றி : பாத்திமா நிஷா 

க்ரம்ளின் மாளிகை (ரஷ்ய அதிபர்மாளிகை)யில் கர்மவீரர்

ஒருநாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதியை மட்டுமே சோவியத் ரஷ்ய நாட்டில் தங்கள் விருந்தினராக வர.வேண்டும் என்று அழைப்பார்கள் ஆனால் அந்த மரபுகளை மீறி ஒரு மாநிலத்தின்முதலமைச்சரை க்ரம்ளின் மாளிகை (ரஷ்ய அதிபர்மாளிகை) அழைத்து சிவப்புகம்பள வரவேற்பு கொடுத்தது இது இந்தியாவில் வேறு எவறுக்கும் கிடைக்காத மரியாதை
இந்த பயணத்தின் போது ரஷ்யா குளிர்பிரதேசம் மேல் கோட் அணிந்துகொள்ளுங்கள் என்று பலர் வலியுறுத்தியும் எளிமையின் சிகரமான நம் தலைவர் அதை மறுத்து ஒரு துண்டை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு ராணுவமரியாதையை ஏற்றுக்கொண்டார் இது ரஷ்யர்களையே ஆச்சர்யபட வைத்தது.........!!!!

Monday, December 26, 2016

எது உலக அதிசயம் ??? ஜம் ஜம் கிணறே உலக அதிசயம் பல விஞ்ஞானிகள் அதிர்ச்சியில்!

ஜம் ஜம் (ZAM ZAM water) நீரின் அற்புதத் தன்மைக் கண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர் என்றால் மிகையில்லை.
5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மக்காவிற்கு உலகின் பல தேசங்களில் இருந்து புனித பயணம் வரும்
முஸ்லிம்கள் இந்த கிணற்று நீரை குறைந்தது 20 லிட்டராவது தனது நாட்டிற்கு எடுத்து
கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி இங்கு காண்போம்.