Saturday, November 29, 2014

நீச்சத்தண்ணி கொடும்மா... ...

நீச்சத்தண்ணி கொடும்மா... ...
தூத்துக்குடி தொகுதியில் சட்டசபு இடைத்தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்றபோது பகல் ஒருமணி இருக்கும்.

பெண் குழந்தை ஒரு பாக்கியம்..!

இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி

உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள்.
கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.

Friday, November 28, 2014

ஹதீஸ்-குளிர் கால பயிற்சிக் கூடம்....

குளிர் காலம் வந்து விட்டது! நீங்கள் உலகில் எந்த பாகத்தில் இருக்கிறீர்களோ அதைப் பொறுத்து,
நீங்கள் குளிர் காலம் எப்போது வரும் என காத்திருப்பவர்களாகவோ, அல்லது குளிர் காலம்
வந்து விடப்போகிறதே என அஞ்சுபவர்களாவோ இருப்பீர்கள்.

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே ! உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டும் என்பது தான் எனது ஆவல். அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன்முதலில் ஆரத்தழுவி கட்டி அனைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்கள் . மனிதர்கள் அனைவரும் என்னை முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.

ஹதீஸ்-நபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் !

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
நபி{ஸல்} அவர்கள் மீது ஸலவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு.
விசுவாசிகளே, நபி அவர்களின் மீது ஸலவாத்தும், சலாமும் கூறுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

பந்தா எதற்கு?

திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக காமராஜர் வெளியூர் சென்றிருந்தார். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த காமராஜரை அழைத்துச் செல்ல திருமண வீட்டைச் சேர்ந்த ஒருவர் காத்திருந்தார்.

ஈமான்-இறை நம்பிக்கை

அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா கூறுகின்றான் 
لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَـكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ وَالْمَلآئِكَةِ وَالْكِتَابِ
 وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّآئِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ
 الصَّلاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُواْ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاء والضَّرَّاء وَحِينَ الْبَأْسِ أُولَـئِكَ
 الَّذِينَ صَدَقُوا وَأُولَـئِكَ هُمُ الْمُتَّقُونَ

ஹதீஸ்கள்

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமாஉங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?: தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும்அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : யார் ஒரு நாளில் நூறு தடவை    سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ    சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீதுஅருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?: யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?: யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?: ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா? : ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா? :அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?: ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா? : ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? : ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா? : நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களாஅல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களாஅல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? : விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா? : யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்.

ஆண்கள் அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

சபர் மாதமும் ஒடுக்கத்துப் புதனும்

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

சபர் மாத இறுதிப் புதன் கிழமையினையே ஒடுக்கத்துப் புதன்என்று அழைக்கின்றனர். இம்மாதமானது மிடிமைக்குரிய மாதம் எனவும், இம்மாதத்தில்  எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்கலாகாது என்றும் மக்களிடம் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது.

Thursday, November 27, 2014

லேப்டாப் அடிக்கடி சார்ஜ் இறங்கிவிடுகிறதா?

லேப்டாப் அடிக்கடி சார்ஜ் இறங்கிவிடுகிறதா? உங்களுக்கு உபயோகமான சில பேட்டரி டிப்ஸ் வேணுமா? கீழே படியுங்கள்...
லேப்டாப்பிற்கு சரியான கூலிங் பேடை பயன்படுத்தவேண்டும், இது லேப்டாப்பை சூடாகாமல் பாதுகாக்கும்.

பொது அறிவு,

முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை

5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மெக்காவிற்கு புனித பயணம்
செய்யும் உலகில் பல தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் இந்த கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர் எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிபட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.

இஸ்லாத்தில் பெண் பார்த்தல்

ஒரு முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப்பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.

Tuesday, November 25, 2014

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்

பெற்றோரை பேணுதல்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)
என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே..

திருக்குரான் - கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 100 கேள்விகளும் பதில்களும்

என் இஸ்லாமிய சொந்தங்களே! தெரிந்து கொள்வோம் அனைவருக்கும் தெரிவிப்போம்
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் திருக்குரான் பற்றிய இந்த 100 கேள்விக்கான பதில்கள்

Monday, November 24, 2014

ஹதீஸ்-கருஞ்சீரகம்

"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை"
ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 71 : ஹதீஸ் எண் 582 

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி:- கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

ஹதீஸ்-இறைவனை காண முடியுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
806. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?“ என்று கேட்டார்கள்.

கூட்டமாக திக்ர் செய்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும் கூட்டங்களை தேடி உலா வருகிறார்கள். அத்தகைய கூட்டத்தாரைக் கண்டால். அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கும் முதல் வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில் தங்களுடைய இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூழ்ந்து கொண்டிருப்பார்கள். (கூட்டத்திலுள்ள மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து விடுகிறார்கள்.

கண் தானம் செய்வது எப்படி?

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2. மின்விசிறியை இயக்கக்கூடாது.
3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?

அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?
ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பின், அவர் மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவராக தூய மனதுடன் அவனிடம் பாவமன்னிப்பு கோருவாராயின், அந்த முஃமின் ஷிர்க் போன்ற படுபயங்கரமான பாவங்களைச் செய்திருப்பினும் அவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவதாக அல்லாஹ் தன் திருமறையிலே கூறியிருக்கிறான்.

மார்க்க கல்வியான குர்ஆனை கற்க வேண்டியதன் அவசியமும் குர்ஆன் ஓதுவதின் சிறப்புகளும் :

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்..!
ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்.