Saturday, July 28, 2018

இஹ்ராம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
                                                                               *********
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள்
'சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம்
குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!' என்றார்கள்.
ஷஹீஹுல் புஹாரி 1542
ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) (இஹ்ராம் அணிந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீமிடம் நான் கூறியபோது, 'அவர் என்ன சொல்வது? (இது நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமா இருக்கிறதே) என்றார்.
(மேலும் தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் பொழுது அவர்களின் தலையின் வகிட்டில் பார்த்த நறுமண எண்ணெய்யின் மினுமினுப்பு நான் இன்று பார்ப்பது போலுள்ளது என்று ஆயிஷா(ரலி) கூறியிருக்கிறாரே' என இப்ராஹீம்
கூறினார்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.
ஷஹீஹுல் புஹாரி 1538,1539
நன்றி : அதிரை முஸ்லீம் 

அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கு

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
                                                                               *********
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும்போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும் வரை அங்கேயே தங்குவார்கள்
ஷஹீஹுல் புஹாரி 1533
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) 'நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள்' என்று (வானவரால்) கூறப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் முஅர்ரஸ் எனுமிடத்தைத் தேர்வு செய்தது போல் இப்னு உமரும் அங்கேயே தம் ஒட்டகத்தை உட்கார வைப்பார். அவரின் மகன் ஸாலிமும் அவ்வாறே செய்வார். முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல் வாதியிலுள்ள பள்ளி வாசலின் கீழ்ப் புறத்தில் சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற்கும் நடுவிலுள்ளது என்று மூஸா இப்னு உக்பா கூறுகிறார்.
ஷஹீஹுல் புஹாரி 1535
நன்றி : அதிரை முஸ்லீம் 

Friday, July 27, 2018

மனித நேயமே இறை நேசம்..!!

                                                          அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
                                                  *********
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் மரணம் அடைந்த ஒரு யூதரின் உடல், அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. நபிகள் நாயகம் எழுந்து சென்று மரியாதை செய்தபோது, தோழர்கள் நபிகளாரை நோக்கி, “அவர் யூதராயிற்றே, நீங்கள் ஏன் அவருக்காக மரியாதை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம், “அவர் மனிதராயிற்றே” என்று விடை அளித்தார்.
யூத மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் நபிகள் நாயகம் அவற்றைப் பொருட்படுத்தாது, இறந்து விட்ட ஒரு யூதருக்கு மரியாதை செய்தார். மனித உறவுகளுக்கும், மனித நேயத்திற்கும், மதங்களும், கொள்கைகளும் ஒரு தடையாக இருக்க வேண்டாம் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொள்கை வேறு, மனித நேயம் வேறு என்ற நபிகளாரின் அணுகுமுறை மனித சமூகத்திற்குச் சிறந்த படிப்பினை ஆகும்.

சிரமமான நேரங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதி வந்த துஆக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
*********
لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ 

லாயிலாஹா இல்லல்லாஹூல் அழீமுல் ஹலீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் 


அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.   ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

Thursday, July 26, 2018

கியாமத் நாளின் அடையாளங்கள் - சிறிய_அடையாளங்கள்

                                                          அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
மகளின் தயவில் தாய்
பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து, மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும்.
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)                                                                  நூல்: புகாரி 4777, 50

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்!


1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.
மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.

காஃபாவை பற்றி தெரிந்து கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
கஃபா என்றாலே சதுர வடிவக் கட்டிடம் என்று பொருள் இது சதுர வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. கஃபத்துல்லாஹ்வின் மொத்த உயரம் ஐம்பத்து மூன்று அடி (14 மீட்டர்) ஆகும். நீளம் மேற்கில் நாற்பத்தைந்து அடி கிழக்கில் நாற்பத்தி ஒன்பது அடி வடக்கிலும் தெற்கிலும் முப்பத்தி ஒரு அடி. இதன் தென்கிழக்கு மூலைக்கு ருக்னுல் ஹிந்த் என்றும் வடகிழக்கு மூலைக்கு ருக்னுல் இராக்கி எனவும் தென்மேற்கு மூலைக்கு ருக்னுல் யமானி எனவும் வடமேற்கு மூலைக்கு ருக்னுஷ்ஷாமி எனவும் கூறப்படுகிறது.
இதன் தென்கிழக்கு மூலையில் தவாஃப் செய்யும் இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி வளையத்திற்குள் ஹஜருல் அஸ்வத் என்ற கல் பதிக்கப்பட்டுள்ளது இங்கிருந்து தவாபை ஆரம்பிப்பார்கள். தவாஃபை முடிக்கும் இடமும் இதுதான்.

Wednesday, July 25, 2018

உணரப்படாத தீமை: வட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
வட்டி வாங்குவோர் அதை விட்டு விடவில்லை என்றால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் (2:279)
வட்டியை தவிர வேறு எந்த பாவத்திற்க்கும் அல்லாஹ் அவனிடம் இருந்து போர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்று கடுமையாக எச்சரித்ததில்லை

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா?
இது வட்டிக்கு பணம் கொடுப்பவர்க்கு மட்டும் சொன்னதல்ல அதை வாங்குவர்க்கும் தான்

நபி வழியில் நம் ஹஜ் (பாகம்-8⃣)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
 அரஃபாவில் செய்ய வேண்டியவை
நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)                                                                            நூல்: நஸயீ 2961
அரஃபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார். அதில் சேர்ந்து தொழ வேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை - செவிமடுக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா - உரை - நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)                                                                                                  நூல்: முஸ்லிம் 2137